முருகபூபதி – அவுஸ்திரேலியா கயத்தாறில் தூக்கில் தொங்கிய கட்டபொம்மன் சிலையான கதையை தெரிந்துகொள்ளுங்கள் வள்ளுவர் கம்பன் இளங்கோ பாரதி முதலான முன்னோடிகளை நாம் நேரில் பார்க்காமல் இவர்கள்தான் அவர்கள் என்று ஓவியங்கள் உருவப்படங்கள் சிலைகள் மூலம் தெரிந்துகொள்கின்றோம். இவர்களில் பாரதியின் ஒரிஜினல் படத்தை நம்மில் பலர் பார்த்திருந்தாலும் கறுப்புக் கோர்ட் வெள்ளை தலைப்பாகை தீட்சண்யமான கண்களுடன் பரவலாக அறிமுகம்பெற்ற படத்தைத்தான் பார்த்து வருகின்றோம். அந்தவரிசையில் வீரரபாண்டிய கட்டபொம்மனை நடிகர் திலகம் சிவாஜியின் உருவத்தில் திரைப்படத்தில் பார்த்துவிட்டு […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village ++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவில் குடியேற ! நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப் பரப்பை விரிவாய்ப் பதிவு செய்யும். துருவப் பகுதியில் ராக்கெட் ஒன்றை நிலவுமேல் தாக்கிடச் செய்து தளத்தில் குழி பறித்து தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள் மண்ணுளவு செய்யும் ! வெண்ணிலவில் குடியேறத் திட்டமிட்டுள்ளது ரஷ்யா ! நிலவில் […]
இருப்பிடம் – கவிதை நான் நான் தானா என்பதற்கு சான்றிதழ்கள் கேட்கிறார்கள், வளர்ச்சியை அளவிடுகிறார்கள், ஏணியில் ஏறச்சொல்கிறார்கள்… யாரேனும் சொல்லுங்கள்.. ஒரு மனிதன் தனது பெயரால் மட்டுமே அறியப்பட விரும்பினால் அவன் எங்குதான் போகவேண்டும்? – ராம்ப்ரசாத் சென்னை ************************************ அந்த கைப்பை – கவிதை அன்றொரு நாள் வீடு திரும்புகையில் மல்லிச்சரத்தை கூந்தலிலிருந்து அவசரமாக விடுவித்து தனது கைப்பையில் அவள் திணிக்கையில் நான் கவனித்துவிட்டேன்… அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் நான் பார்க்கையிலெல்லாம் குற்ற உணர்வு கொள்கிறது […]
“இப்ப கூட நான் உன்னை தப்பா நினைக்கலை ஸ்வேதா” என்கிற விதார்த்திடம், “தப்பாதான் நினைச்சுகோயேன்…” என்கிறார் ஸ்வேதா. இன்றைய காலகட்டம் என்பது இதுதான். பொறுமை சகிப்புத்தன்மை நியாயம் நேர்மை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அனேகம் பேரை பகைத்துக்கொண்டு வாழ்தலை சிரமத்துக்குள்ளாக்குவதைவிட ராவணனாய் நினைத்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போய்விடுவது உத்தமம் என்கிற மனப்போக்கு இன்றைய காலகட்டத்தின் மனப்போக்காகிவிட்டது. காட்சிகள் மூலமாக கதை சொல்வது நேர்த்தியாக இருக்கிறது. பத்து ரூபாய்த்தாளை தேடி எடுத்து ஒட்டும் விதார்த் வாயில் சிகரெட். செயின் […]
அருணா சுப்ரமணியன் என் அர்த்தங்களை அனர்த்தங்கள் ஆக்கினாய்! ஆலோசனைகள் ஆணவப்பேச்சு ஆனது… மௌனங்களை எப்படி மொழிபெயர்க்கிறாயோ? –
இலக்கியா தேன்மொழி சிட்டுக்குருவியின் சிறகு உங்கள் கண்களை உறுத்துகிறது… அந்த சிறகின் வண்ணங்கள் ஈர்க்கின்றன, உங்களுடையதைவிடவும்… அந்த சிறகு உங்களின் சிறகுகளைக்காட்டிலும் வசீகரமாக இருக்கிறது… அந்த சிறகுகள் தாழ பறந்து உலகின் அழகியல்களை உங்களைக்காட்டிலும் அதிகமாய் ரசிக்கின்றன…… அதனால் அந்த சிறகுகளை பிய்த்துப்போட நினைக்கிறீர்கள்… ஆனால் உங்களுக்கு புரியவில்லை… தாழ் உயரங்களின் உலகிற்கான உங்கள் சிறகுகள் தாம் எங்களுடைய சிறகுகள் என்பது… –
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”தீர்ப்பளிக்காதே, நாமெல்லோருமே பாவிகள்தாம்” _ நினைவிருக்கிறதா அந்தத் திருமறை? ஆயினும் சத்தமிட்டுக் கத்தித் தீர்க்கிறாய் சமூக சீர்கேடுகளுக்கெல்லாம் என்னை மட்டும் பொறுப்பாளியாக்கிவிடுவதை யேன் திரும்பத்திரும்பச் செய்துகொண்டிருக்கிறாய். என்னை யேன் நான் நானாக நினைக்கிறேனா? என்னை மறுத்து உன்னை வரிக்க உண்மையில்லையே உன்னிடம். குரலற்றவர்களின் குரலாக உன்னை நீயே நியமித்துக்கொள்வது உண்மையில் அவர்களை ஆளத்தானே! உன் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப வரலாறைத் திரித்தபடியே உன் கையும் வாயும்… போயும் போயும் பொய்தானா கிடைத்தது உன் பையை […]
அருணா சுப்ரமணியன் தோப்பு வாழ் பழம் ஒன்று வெறும் மலம் ஆதல் உண்டு.. குப்பை சேர் பழம் அதுவும் பெரும் மரம் ஆதல் உண்டு.. சேரும் இடம் பொருட்டன்று .. சேற்றிலும் முளைத்து வருதலே சான்று!! –
அவளின் உடம்பு ஒன்றை அடிக்குள் சிறுத்து விட்டது. ரொம்பவும் சவுகரியம் என்பது போல் இருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எங்காவது கொஞ்சம் எம்பி விட்டால் போதும் விறுவிறுவென்று நகர்ந்து போய் விட்டது. தரையில் எவ்வித சிரமமும் இல்லை. சட்டென உருண்டு போய் தேவையான இட்த்தில் நின்று விடுகிறது. மாடிப்படிகளில் உருண்டு போய் நின்று கொள்கிறது. இன்னும் கொஞ்சம் குதித்துப் போவதற்கு ஆயத்தம் செய்து விட்டால் போதும் எல்லாம் சுலபமாகிவிடும்.நகர்தல் இயல்பாகி விடும். இயல்பு என்பதை விட சுலபமாகிவிடும். […]
அவன் அந்த விலாசத்தை தேடினான். 11, முத்துக்கிருஷ்ணன் தெரு அசோக் நகர். அங்கு வந்து நின்றான். ஒன்றிரண்டு பேர் தவிர தெருவில் யாரும் இல்லை. தேடினான். கொஞ்சம் தடுமாற வேண்டியிருந்தது. ஆனால், இறுதியாக மாட்டிக்கொண்டது. தனி வீடே தான். வீட்டு வாசலை வந்தடைந்தான். கதவு லேசாக திறந்திருந்தது. வேறொரு சமயமானால், கதவைத்தட்டி, அனுமதி கேட்டு, கிடைக்கும்வரை வாசலில் காத்திருந்திருப்பான். ஆனால், அன்று…. திறந்திருந்த கதவினுள் நுழைந்து, உள்பக்கம் தாழிட்டான். வீட்டில் எங்கும் இருள். கண்ணாடி ஜன்னலிலிருந்து வெளிச்சம் […]