ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-4 – ஸ்ரீ ராதை

This entry is part 25 of 33 in the series 6 அக்டோபர் 2013

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி குறிப்பிடும் தொல் நூல்களில் இரண்டில் மட்டுமே ராதையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒன்று பிரம்ம வைவாத்ர புராணம்.மற்றொன்று ஜெயதேவரின் பாடல் தொகுப்பு.பாகவத உபன்யாசம் நடத்தும் பாகவதோத்தமர்கள் மீண்டும் மீண்டும் தங்கள் உபன்யாசத்தில் ராதையைக் குறிப்பிடுகின்றனர். இதில் வியப்பு என்னவென்றால் ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு இடத்தில் கூட ராதையைப் பற்றிய குறிப்பு இல்லை. பாகவதத்தில் கூறப்பட்டுள்ளபடி ஸ்ரீ கிருஷ்ணரை தொடர்ந்து சென்ற கோபிகை ஒருத்தியின் பாதத்தடங்கள் […]

கவிதைகள்

This entry is part 24 of 33 in the series 6 அக்டோபர் 2013

உள்ளுக்குள் வானரசு   கொஞ்சம் பொறுங்கள் வெற்றிக் கோப்பையை பறிகொடுத்து எதிரியை சம்பாதித்துக் கொண்டேன் கவனமாய் இருங்கள் பல தவறுகளை செய்தாலும் தண்டனை ஒன்று தான் விழிப்புடன் இருங்கள் எதிர்ப்படுபவர்கள் அனைவரும் மனிதரில்லை அன்பாக இருங்கள் தன்னுடைய படைப்புகளில் கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் தயாராய் இருங்கள் எங்கிருந்தேனும் அம்பு எய்யப்படலாம் பணிவாக இருங்கள் கடவுள் எந்த ரூபத்திலும் உங்களை வந்து சந்திக்கலாம் கனிவுடன் இருங்கள் இறைவன் வேறொன்றையும் உங்களிடம் எதிர்பார்ப்பதில்லை பக்தியுடன் இருங்கள் இறைவன் உங்களுக்கு […]

நிறையற்ற ஒளித்திரள்களை [Photons] இணைத்து மூலக்கூறு விளைந்து முதன் முதல் புது நிலைப் பிண்டம் கண்டுபிடிப்பு

This entry is part 23 of 33 in the series 6 அக்டோபர் 2013

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     காலக் குயவன் சுழலும் ஆழிக்கு களிமண் குழைத்து வடிப்பதற்குப் பிரபஞ்ச முகிலில் மிதப்பது கரும்பிண்டம் ! கரும்பிண்டத்தில் உள்ளது சுட்ட பழமா ? அல்லது சுடாத பழமா ? கரும்பிண்டம் இல்லையேல் காலாக்ஸிகள் உருவாகா ! விண்மீன்கள் தோன்றா ! ஒளித்திரள்கள் பின்னி மூலக்கூறுப் பிண்ட மாகுது ! கரும்பிண்டம் ஆப்ப மாகி அண்டக் கோளாய் உருண்டை ஆக்குவது ஈர்ப்பு விசை […]

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு 10 வயது

This entry is part 6 of 33 in the series 6 அக்டோபர் 2013

  பொதுத்தகவல் இணையமே தற்காலத்து மிகப்பெரிய தகவல் ஊடகமாக இருக்கின்றது. இவ்வாறான இணையத்தில் மிகவும் பயனுள்ள, புகழ்பெற்ற ஊடகமாக விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் இருக்கின்றது. 2001ஆம் ஆண்டு, இதனைஜிம்மி வேல்ஸ் என்பவரும்லாரி சாங்கர் என்பவரும் இணைந்து ஆரம்பித்தனர். விக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தொடங்கப்பட்ட இந்த விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தன்னார்வத்துடன் இணைந்து கொண்ட பல பயனர்களின் பங்களிப்பால் மிக விரைவாக வளர்ச்சியடைந்து வந்தது. இந்த 2013ஆம் ஆண்டில், ஆங்கில விக்கிப்பீடியா  4.3 மில்லியன் […]

டௌரி தராத கௌரி கல்யாணம் – 21

This entry is part 22 of 33 in the series 6 அக்டோபர் 2013

      அதுக்குள்ள கௌரிக்கு குழந்தைகளாயாச்சா…? அவளே இன்னம் குழந்தை…..மாதிரி…! இந்த ரெண்டு வருஷத்துல.அடையாளமே தெரியாமக்  கொஞ்சம் வெய்ட் போட்ருக்கா….அவ்வளவு தான் .! விஷ்ணு அங்கிள் எழுதினாப்பல அந்த கார்த்தியைத்  தான் கல்யாணம் கழிச்சுண்டு இருக்கணம். போட்டும்…! ஆனால் விஷ்ணு அங்கிள் எங்கியாக்கும் காணம். என்னாச்சு அவருக்கு?  எது எப்படியோ…..குழந்தைகள் ரெண்டு பேரும் ‘சான்சேயில்லை …..ச்சோ ச்வீட்…’ அவர்களைப் பற்றிய எண்ணமே பிரதானமாய்  பிரசாத்தை விமானத்தில் அவனது இருக்கை வரை கொண்டு நிறுத்தியது. இவரை உற்றுப் […]

கவிதைகள்

This entry is part 20 of 33 in the series 6 அக்டோபர் 2013

ஜெம்சித் ஸமான்   கடலும், தீவுகளும்—— அலைகள் இல்லாத ஒரு கடலை உருவாக்கினேன் ஆழ் கடலில் மட்டும்தான் அலைகளின் ஆக்ரோஷம் இருந்தது இந்தக் கடலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் போது நான்கு பக்கங்களும் மலைகளால் சூழப்பட்ட அழகான தீவை நான் உருவாக்கிக் கொண்டிருப்பேன் — எனக்குள் ஓடும் நதி– எனக்குள் ஒரு நதி ஓடுகின்றது அந்த நதியை நான் விரும்புகிறேன் என் கண்ணீர் தீர்ந்து நதி வறறி இறுதி இரங்கலோடு மீன்கள் எனக்குள் துடிக்கும் போது […]

இதயம் துடிக்கும்

This entry is part 19 of 33 in the series 6 அக்டோபர் 2013

  நூறு ரூபாயில் தெரியும் புன்னகை சொல்லும் நம்மின் சுதந்திர மாளிகை. நான்கு வர்ணம் தகுமோ என்றான் தாழ் ஜனம் எல்லாம் ஹரிஜனம் என்றான். வெள்ளையன் தந்ததை மூவர்ணம் ஆக்கினோம். அடுத்தவர் மதமும் நம்மவர் மதம் தான் மானுடமே உயர் மதமெனச் சொன்னான். ரகுபதி ராகவன் ஈஸ்வரன் அல்லா எப்பெயருள்ளும் ஒலிப்பது அன்பே. ஒவ்வொரு தோளிலும் சிலுவைகள் உண்டு. ஒவ்வொரு கையிலும் தொழுகைகள் உண்டு. ஆழ்ந்த தியானம் உளந்தனை நூற்கும் குவிந்த சிந்தனை இமயங்கள் நகர்த்தும். கோடிக் […]

தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு

This entry is part 7 of 33 in the series 6 அக்டோபர் 2013

இந்த மின்னஞ்சலில் தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. கட்டுரை பற்றி: தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு ஏன் குறைவாக உள்ளது, இந்த நிலை ஏன் பாதகமானது, குறைவான பங்களிப்புக்கான காரணங்கள் என்ன, பெண்கள் பங்களிப்பை எப்படி ஊக்குவிக்கலாம் ஆகிய விடயங்களைச் சுருக்கமாக விபரிப்பதே இக் கட்டுரையின் நோக்கம் பயன்படக் கூடிய படங்கள்: https://ta.wikipedia.org/s/38gk பெறலாம். (முதன்மைக்) கட்டுரையாளர்: பார்வதிஸ்ரீ பார்வதிஸ்ரீ, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். […]

மயிலிறகு…!

This entry is part 18 of 33 in the series 6 அக்டோபர் 2013

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி பத்திரமாக வைத்துக்கொள்ள மயில் இறகின் ஒரு இழை இருந்தது என்னிடத்தில் நீளமான இழையைச் சரிபாதியாய்க் கிள்ளி ஒன்றை என் சிநேகிதி கொடுத்தது.புத்தகத்தின் நடுவிலே வைத்து பென்சிலை திருவின தூளை அதற்கு உணவாக கொடுத்து நாளையோ நாளை மறுநாளோ குட்டி போடும் என்று தவிப்போடு காத்திருந்த நாட்கள் !புத்தகம் திறக்கப்படும் ஒவ்வொரு நாளும் ஒரு குட்டி மயிலிறகைத் தேடும் மனம் ! வருடப்படும் நட்புணர்வில் நட்பை தேடுகிறது கடந்து போன நிகழ்வின் நினைவுத் துளிகளில்என்றோ […]

பொய் சொல்லும் இதயம்

This entry is part 17 of 33 in the series 6 அக்டோபர் 2013

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு     ஒருபோலி முகத்திற்குள் கண்ணியமாக ஒளிந்துக்கொண்ட போது எதிர்நிற்கும் உயிரானவனின் விழிகளுக்கு முகமூடிக்குள் நட்பின் சிநேகிதி என்பது தெரியாம லேயே போனது விளையாடுபவளின் நட்பை உணராமல் எதிராளியை போன்று குத்தப்படும் வார்த்தைகளை வீசி நிராகரிப்பின் உச்சத்தை வானத்தில் எறிந்து போகிறான் ! நிராகரிப்பிலும் நட்பின் கண்ணியத்தை உணர்ந்த மனம் வலிகளை மறைத்து வலம் வருகிறது முகமூடிக்குள் ஒளிந்த இதயம் வலிக்க வில்லை என்று பொய் சொல்லி சிரிக்கிறது ! +++++++++++++++++