தினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்!

This entry is part 11 of 24 in the series 13 செப்டம்பர் 2015

ஒரு வழியாய் அலுவலகங்களிலேயே பெரும்பாலும் வாழ்க்கைப் பொழுதும் கழிந்து கொண்டிருக்கிறது. யக்கோவ் குப்பேத்தாக்கோவ் (அக்கா குப்பை எடுத்து வாங்க அக்கா) என்று கூவும் பெண்மணியின் குரலோடு விடிந்தது இன்றைய இரவும். ஒருவழியாய் சீரான பாதையை நோக்கிப் பயணம் செய்கிறேன் என்று எண்ணுகிறேன். இது இலக்கை நோக்கிய பயணம். மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நிறுவனத்தை உருவாக்கும் முயற்சி! அதுவே என் இதயத் துடிப்பு நிறுவகப் பயிற்சிக் கூடம். எவ்வளவு யோசித்தும் அவர்களுக்கு ஏற்ற ஏதுவான தொழில் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. […]

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் எழுதிய ‘ கவிதையும் என் பார்வையும் ‘ —– ஒரு பார்வை

This entry is part 12 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பொன். குமார் சேலம் எழுத்தில் பல வகை இருப்பினும் கவிதையே எழுத்தின் உச்சம் ஆகும். கவிதை எழுதுவது ஒரு காலத்தில் கடினமாக இருந்தது. வானம் பாடிக்குப் பின் கவிதை எழுதுவது எளிதாகப் பட்டது. புதுக் கவிதையில் தொடங்கி நவீனம் , பின் நவீனம் எனத் தொடர்ந்தது. விமர்சனத்தின் மீதும் விமர்சனம் உண்டு. விமர்சனம் ஒரு படைப்பாகக் கருதப்படுவதில்லை. படைப்பின் மீதான விமர்சனமும் ஒரு படைப்பே. விமர்சகர்களும் படைப்பாளிகளாக இருந்துள்ளனர். இருந்தும் வருகின்றனர். க.நா.சு, வல்லிக் கண்ணன் போன்றவர்களைக் […]

திரு. ஈரோடு. கதிர் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு, கிளையிலிருந்து வேர் வரை – திறனாய்வு

This entry is part 13 of 24 in the series 13 செப்டம்பர் 2015

லதா அருணாச்சலம். கதிரின் கட்டுரைகள் “கிளையிலிருந்து வேர் வரை” புத்தகமாய்க் கையில் தவழ்ந்தபோது , அதற்காகக் காத்திருந்த பலரையும் போல நானும் அந்தக்கணம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஒவ்வொரு கட்டுரையையும் பக்கம் புரட்டி, நிதானமாக வாசித்தபோது மீண்டும் அதே, பிரமிப்பான, முழுமையான வாசிப்பனுபவம் கிட்டியது. அது ஏற்படுத்திய தாக்கம் அவ்வளவு எளிதில் கரைந்துபோகாது. கதிரின் கட்டுரைகளில் குரோதங்கள் இல்லை. எதிர்மறை எண்ணங்கள் இல்லை. திடுக்கிடும் வைக்கும் திருப்பங்களைக் கொண்ட சம்பவங்களின் பிண்ணனியில் புனையப்பட்ட நாடகத்தனம் இல்லை. மனிதர்களுக்கான […]

நிழல்களின் நீட்சி

This entry is part 14 of 24 in the series 13 செப்டம்பர் 2015

சத்யானந்தன் இயங்காத நிழல்கள் போல் நாம் விடுதலை வரம் கேட்காமல் இருந்திருக்கலாம் என்றது கால்பந்தின் நிழல் வரம் கொடுத்தவர் இரவில் நாம் இச்சைப்படித் திரிய அனுமதி தந்தார் கட்டிட நிழலும் குப்பைத் தொட்டி நிழலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய இயலும்? பதிலளித்தது கங்காருவின் நிழல் பகலில் நாளுக்கொரு வடிவம் ஒரு நிலைப்பேயில்லை இது பிச்சைக்காரன் நிழல் கூர்மையான பல் இல்லை ஸ்தூல வடிவமில்லை எலியின் நிழல் என்னை எள்ளி நகையாடுகிறது பொருமியது பூனை நிழல் […]

வரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை

This entry is part 15 of 24 in the series 13 செப்டம்பர் 2015

வரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_10.html http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html புதுக்கோட்டையில் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புதுக்கோட்டைப் பதிவர்கள் நிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு, விழாவுக்காக உடல் உழைப்பையும் தந்து வருகிறார்கள்.. மற்ற மாவட்டப் பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம். (1) கவிதை ஓவியக் கண்காட்சி (2) பதிவர்களின் அறிமுகம் (3) தமிழிசைப் பாடல்கள் (4) […]

தொடுவானம் 85. புதிய பூம்புகார்

This entry is part 17 of 24 in the series 13 செப்டம்பர் 2015

85. புதிய பூம்புகார் தரங்கம்பாடியில் இருந்த நாட்கள் இனிமையானவை. சரித்திரப் புகழ்மிக்க பண்டைய தமிழகத்தின் துறைமுகப் பட்டினங்களைப் பார்த்து மகிழும் வாய்ப்பு கிடைத்தது இன்பமானது. நாம் என்னதான் சரித்திரத்தை நூல்களில் படித்திருந்தாலும்,அந்த இடங்களை நேரில் சென்று பார்க்கும்போது நம்மையும் அறியாமல் ஒருவித எழுச்சி மனதில் தோன்றுவது இயல்பு. நான் பூம்புகார் கடற்கரையில் நின்றபோது என் கண்முன்னே சங்க காலத்தில் அங்கு இருந்த காவிரிப்பூம்பட்டினம் என் கண் முன்னே தோன்றியது. அது கடலுக்குள் மூழ்கி அழிந்து போயிருந்தாலும், இளங்கோ […]

அன்பாதவன் கவிதைகள் – ஒரு பார்வை

This entry is part 18 of 24 in the series 13 செப்டம்பர் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘ தனிமை கவிந்த அறை ‘ கவிதைத் தொகுப்பை எழுதிய அன்பாதவன் [ இயற்பெயர் ஜ .ப அன்புசிவம் ] விழுப்புரத்துக்காரர். பல இலக்கியப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். பல நூல்கள் எழுதியுள்ளார். பல பரிசுகள் பெற்றுள்ளார். 96 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் பல கவிதைகள் உள்ளன. தனிமை , மெளனம் , காதல் , மரணம் போன்ற பாடு பொருட்கள் அவற்றின் மென்மையான பரப்புகளில் கவிமணம் வீசி அழகாய்ப் பூத்து நிற்கின்றன. ‘ மவுனவெளி […]

சைனா 2020 ஆண்டுக்குள் முதன்முறையாக நிலவின் மறுபுறத்தில் தளவுளவியை இறக்கத் திட்டமிடுகிறது.

This entry is part 19 of 24 in the series 13 செப்டம்பர் 2015

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=otxHk7cf9c8 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=bdcjsTFb5l8 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=G_FfzDIPDBc +++++++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா       சைனாவின் இரண்டாம் விண்ணுளவி சந்திரனைச் சுற்றியது ! மூன்றாம் விண்கப்பல் முதலாக நிலவில் இறக்கிய தளவுளவி சோதிக்கிறது ! அதிலிருந்து  நகரும் தளவூர்தி  ! ஆசிய முன்னோடியாய்ச் சைனாவின் இரு தீரர் அண்டவெளிப் பயணம் செய்து விண்வெளியில் நீந்தி வெற்றி மாலை சூடி மண்மீது கால் வைத்தார் மறுபடியும் ! அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் போல் விண்சிமிழில் ஏறி […]

யட்சன் – திரை விமர்சனம்

This entry is part 20 of 24 in the series 13 செப்டம்பர் 2015

– சிறகு இரவிச்சந்திரன் 0 ஒரு ஆக்ஷன் கதையை காமெடி கலர் பொடி தூவி கலைந்த ரங்கோலி ஆக்கியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். “ தனி ஒருவன்” பரபரப்பை எதிர்பார்த்து போகும் ரசிகனுக்கு ஏமாற்றமே மிஞ்சும். தொடராக வரவேற்பை பெற்ற, சுபாவின் விகடன் கதை, வீணடிக்கப்பட்டிருக்கிறது! கொலைக் கும்பல் துரத்தும் சின்னா; சினிமா ஆசை துரத்தும் கார்த்திக். இருவரும் இடம் மாறினால் ஏற்படும் குழப்பமே கதை. கொடூர தாதாக்கள் காமெடி பீசாக வலம் வருவது குமட்டுகிறது. கார்த்திக் பாத்திரத்திற்கு […]