கிருஷ்ணாபுரம் போயிருக்கிறீர்களா? நான் கேட்பது தொல்சிற்பங்கள் நிறைந்துள்ள திருநெல்வேலி மாவட்டக் கிருஷ்னாபுரம் இல்லை. விழுப்புரம் மாவட்ட எல்லைக் கோடியில் இருக்கும் ஒரு சாதாரண கிராமம். ஆனால் அதைக் கிராமம் என்றும் சொல்ல முடியாது. நகரம் அளவிற்கு வளர்ச்சியும் கிடையாது. வேண்டுமானால் மூன்றாம் பாலினம் போல கிராம நகரம் என்று சொல்லிக் கொள்ளலாம். பண்ருட்டியிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலை அக்கிராமம் வழியாகச் செல்வதுதான் அக்கிராமத்தை ஒரளவிற்கு நகரமயமாக்கி உள்ளது. ஒரு கணினி மையம் இணைய தளத்துடன் வந்துவிட்டாலே […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,), புதுக்கோட்டை. Mail: Malar.sethu@gmail.com தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது. தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல். விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது. தமிழகத்தின் பண்டைக்கால வரலாற்றைச் சான்றுகளுடன் அறிய உதவும் பேரேடு இது எனக் கூறலாம். ஒரு மொழியில் முதலில் தோன்றியது இலக்கியம் அதனை அடியொற்றி அமைவது இலக்கணம். ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்’ என்ற […]
ஒரு புத்தகம் குறித்து இரண்டு மணிநேரம் ஒருவர் தொடர்ந்து பேச முடியும் என்பதும் அதை மக்கள் அத்தனை தீவிரமாகக் கேட்பார்கள் என்பதும் ஆச்சர்யம்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாநகர் வெஸ் எக்ஸ்டென்ஷனில் உள்ள பொக்கிஷம் புத்தக அங்காடியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் உரை ஓர் மகத்தான வாசிப்பு அனுபவத்துக்கு நம்மைத் தயார்படுத்தியது. நோபல் பரிசு பெற்ற நாகிப் மாஃபஸ் எழுதிய “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தக கலந்துரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்வின் போது நூலைப் பற்றி […]
செ.சிபிவெங்கட்ராமன், ஆய்வியல் நிறைஞர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். முன்னுரை: பழந்தமிழனின் ஆளுமைத் திறனறியும் ஒப்பற்றக் கலைக்களஞ்சியம், சங்கத்தொகை இலக்கியங்களுள் ஒன்றான புறநானூறாகும். இஃது பண்பாடு ,பழக்க வழக்கம், அரசியல், பொருளாதாரம் எனப் பன்முகத்தைத் தன்னகத்தே கொண்ட இலக்கியமாகும். ஆள்வோருக்கான அறிவுரைகள் இதனுள் நிரம்பக் காணப்ப்டுகிறது. அவற்றுள் சிலவற்றை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகின்றது அறமும் அரசின் வெற்றியும்: அக வாழ்வானாலும் சரி, புற வாழ்வானாலும் சரி, பழந்தமிழனின் வாழ்வில் அறமே முதலிடம் வகித்தது. அறம் […]
“ஒரு அரிசோனன்” (மகாபாரதத்தில் யுத்தபர்வத்தில், பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோழுது, அவரை வணங்கி ஆசிபெற, கர்ணன் யுத்தகளத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தான் என்று குறிப்பிட்டிருக்கிறது. அந்தச் சந்திப்பு எப்படி இருந்திருக்கும் என்ற எனது கற்பனையே இது.) “பீஷ்மப் பாட்டனார் களத்தில் வீழ்ந்து விட்டாராம். இனி, தாங்கள் களமிறங்கத் தடை ஏதும் இல்லை!” என்ற செய்தியைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்துவிட்டான் கர்ணன். அவனுள் மகிழ்வும், துயரமும், மாறிமாறி அலை பாய்ந்தன. தன் நண்பன் துரியோதனனுக்காகக் […]
சோழகக்கொண்டல் கடலாழத்து நீருக்குள் இருக்கும் குடுவைக்குள் இருக்கும் நீருக்குள் மூன்று மீன் குஞ்சுகள் முதல் குஞ்சு அதே குடுவையில் பிறந்தது இரண்டாவது குஞ்சு அதே போல் இருக்கும் சிதைந்துவிட்ட வேறொரு குடுவையில் பிறந்தது மூன்றாவது குஞ்சு குடுவைகளையறியாத பாறையிடுக்கில் பிறந்தது இந்த குடுவையின் அடித்தளத்தில் தொடங்கும் கடல் மிக நீண்டது – அதன் இருள் குடுவையின் இருளைப்போல பன்மடங்கு கரியது என்றது முதல்குஞ்சு நீண்டு பரந்த கடலின் ஒரு புள்ளியில் கிடக்கிறது ஒளி நுழையாத அடியாழத்தில் இந்த […]
இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் 1 ( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா?) இரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த பூசாரி வேலுப்போடியை கடல்நாச்சியம்மன் சடங்குக்கு வந்திருந்த ஊர்மக்கள் அலட்சியமாகப்பார்த்தார்கள். வாயு பகவான் அசையாமல் மௌனமானான். கடல்நாச்சியம்மனின் கைகள் என மக்களால் மதிக்கப்படும் கடல் அலைகள் பொங்ஙியெழுந்து ஆரவாரித்து இந்த ஊரைத் தன் மந்திர தந்திரத்தால் அடக்கி வைத்திருந்த ப+சாரி வேலுப்போடி, இன்றைய சடங்கின் போது ‘உரு’ வந்த தெய்வங்களிடம் அடி படுவதும் உதை வாங்குவதும் […]
செ.அருள்ஜோதி,எம்.ஏ.,எம்ஃபில், முனைவர் பட்டஆய்வாளர், அரசுகலைக்கல்லூரி,சேலம்-7 மனிதர்கள் மட்டுமே பண்பாடு என்ற சொல்லோடு தொடார்புடையவார்களாவார். மனிதர்களைப் பிறவிலங்கினங்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது பண்பாடாகும். சமூகங்கள் பண்பாடுகளை உருவாக்குகின்றன. பண்பாடு, சமூகம் என்பன ஓர் அமைப்பை விளக்கும் இருகுறியீட்டுச் சொற்களாகும். சமுதாய அமைப்புகளையும,ர் ஒழுக்கமுறைகளையும், பழக்கவழக்கங்களையும் குறிப்பிடுவதற்கு அமைந்தனவாகும். பிற உயர்களிடமில்லாத ஓர் உணர்வு மனிதனுக்கு உண்டு என்பதை தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகின்றது. ஒன்றிய வதுவே உற்றறிவதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே நான்கறி வதுவே […]
நான் என் ஆரம்பக் கல்வியை எங்கள் கிராமத்துப் பள்ளியில்தான் தொடங்கினேன். கிராமத்தில் அந்த ஒரு பள்ளிதான் இருந்தது. அதற்கென தனிக் கட்டிடம் இல்லை. அது ஆலயத்தில் இயங்கியது. அந்த ஆலயத்தை ஊர் மக்கள் மாதா கோவில் என்றே அழைப்பர். உண்மையில் அது மாதா கோவில் இல்லை. கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்தான் மாதாவை வழி படுவார்கள். அது சீர்திருத்தச் சபையைச் சேர்ந்த ஆலயம் – அற்புதநாதர் ஆலயம். […]
தந்தியில் “என் மனைவி ஊர்மிளா இறந்துவிட்டாள். குழந்தை உயிருடன் இருக்கிறது. சேதுரத்தினம்’ எனும் வாசகம் இருந்தது. பத்தாம் வகுப்பில் தவறி யிருந்த மாலாவால் அதைப் படித்துப் புரிந்துகொள்ள முடிந்தது. ராமரத்தினத்துடன் அன்றிரவு தன் வீட்டுக்கு வந்து சென்ற அவனுடைய புதிய நண்பன்தான் அதை அனுப்பியிருந்தான் என்பது அவளுக்குப் புரிந்தது. `தந்தியைப் படித்ததும் மயக்கம் போட்டு விழுகிற அளவுக்கு அண்மையில்தான் அறிமுகமாகி யிருக்கும் ஒருவர் மீது ராஜாவுக்கு இவ்வளவு பாசமா!’ எனும் கேள்வி எல்லாரையுமே அயர்த்தியது. “தெரு […]