வணக்கம். இந்த இணைப்பை தங்கள் திண்ணையில் பதிவேற்றுவதற்கு ஆவனசெய்யவும். நன்றி.அன்புடன்முருகபூபதி
அழகர்சாமி சக்திவேல் ஆண் பெண்ணோடு ஒப்பிடுகையில், மூன்றாம் பாலினத்தின் வாங்கும் திறன் அதிகமாய் இருப்பதற்கு ஒரு முக்கியக்காரணம் குழந்தையின்மையே,ஆகும். ஒரு பெண், ஆணோடு சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறாள். ஒரு ஆண், ஒரு பெண்ணோடு சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறான். ஆக, ஆண், பெண்களின் வாங்கும் பணத்திறன் குறைந்து போகிறது. ஆனால், மூன்றாம் பாலினத்தின் பெரும்பான்மையோர், குழந்தை எடுத்து வளர்ப்பதில்லை. அப்படியே அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு , குழந்தை தத்து எடுத்துக்கொண்டு வாழ நினைத்தாலும், அதை […]
_ லதா ராமகிருஷ்ணன் (Treasurer _ Welfare Foundation of the Blind) ‘பார்வையற்றவன்’ என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நண்பரின் சமீபத்திய பதிவு ஒன்று முக்கியமானது. அதில் நிறைய பேருக்குத் தெரியாத, எனில் அவசியம் தெரியவேண்டிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் அவர். அதிலிருந்து சில பத்திகள் கீழே தரப்பட்டுள்ளன: ”தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். அவர்களின் வாசிப்பிற்கு அமேசான் கிண்டில் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது என சொல்லலாம். அச்சு புத்தகங்களை வாசிக்க […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த கையோடு மருத்துவமனையின் நீண்ட தாழ்வாரத்தில் காலெட்டிப்போட்டு கையுறைகளை மாட்டியபடி நான் அதற்கு சிகிச்சையளிக்கிறேன் என்பாரும் செயற்கை சுவாசமாகிறேன் என்பாரும் நான் அதன் உலகை விரிவுபடுத்துகிறேன் என்பாரும் நான் அதன் பார்வையைத் தெளிவுபடுத்துகிறேன் என்பாரும் நான் தான் அதற்கு மொழியைப் பழக்கப்படுத்தினேன் என்பாரும் நான் தான் முதன்முதலாய் அதற்கு அரசியலை அறிமுகப்படுத்தினேன் என்பாரும் தம்மை யொரு மையமாக்கிக்கொள்ளும் முனைப்பில் விட்டங்கள் ஆரங்கள் அணுக்களையெல்லாம் அப்பால் தள்ளிவிட்டு கட்டங்கட்டி யதற்குள் கவிதையை முட்டியிட […]
கௌசல்யா ரங்கநாதன் ……….மூன்று மாதங்களாய், ராத்தூக்கம், பகல் தூக்கம் தொலைத்து, மனத்தளவில் நரக வேதனையை அனுபவித்து வந்த எனக்கு, அன்று காலை முதலே மன பாரம் வெகுவாய் குறைந்தாற் போலிருந்தது..கையில் காபியுடன் வந்த என் மனைவி ஜானகி “இப்பத்தான் உங்க முகத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்தாற் போலிருக்கு” என்ற போது கேட்டேன் “ஆனா உன் முகத்தில் இன்னம் பழைய மலர்ச்சி காணப்படலையே, ஏன்?” என்று..“எப்படிங்க? எப்படி அந்த அவமானகரமான விஷயத்தை மறக்கறதாம்?” என்னால முடியலைங்க, என்ன […]
https://economictimes.indiatimes.com/news/science/nasa-joins-isro-to-track-vikram-calling-home/articleshow/71097087.cms https://www.moneycontrol.com/news/india/chandrayaan-2-nasa-helps-isro-to-establish-communication-with-vikram-lander-4432871.html?fbclid=IwAR3zEJRhzpwcwWipD2mgPMutgpMNpCfHXFSbq2-APrec5utl-ucVeEW5VJY https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-not-only-isro-nasa-also-sends-messages-lander-vikram-moon/story/378594.html?fbclid=IwAR3aeAO2h152zc0uRLO90Ym7FpPyrmXXHIMpqtJ3jXX1qA145d_NBuz_Pgs https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-landing-failed-isro-loses-contact-with-lander-vikram/story/377813.html?utm_source=recengine&utm_medium=WEB&referral_sourceid=378149&referral_cat=Trends https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-vikram-landing-somersault-isro-exlusive-1598882-2019-09-13 https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14 ++++++++++++++++++++++++++++++ சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது. இப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் […]
கு.அழகர்சாமி அந்தி வேளையில் ஒளிரும் கலர்க் காகிதக் கொம்புகளைத் தலையில் தரித்து ஒரு விநோத விலங்கு போல் தலையாட்டி வேடிக்கை பல காட்டி கிழக் கிலுகிலுப்பைக்காரனொருவன் கிலுகிலுப்பை ஒலித்து, கரையைச் சதா காதலில் அழைக்கும் அலைகளெனப் பல்கும் கிலுகிலுப்பை ஒலிகளில் காண்பவரை விளித்து – பரிந்து அலைகள் தாலாட்டும் கடற்கரையில் கிலுகிலுப்பை ஒன்று கூட விற்க முடியாமல்- ஆனால், தாலாட்டு மறந்த அம்மாக்களின் செல்பேசிகளில் படம் பார்த்து ஒலிக்கும் கிலுகிலுப்பைகளை மறந்திருக்கும் குழந்தைகள். ஆதியிலிருந்து ஓயாத கிலுகிலுப்பையாய் […]
மஞ்சுளா ———————————————— காட்டு மரங்கள் தன்னிச்சையாய் பாடிக்கொண்டிருக்கின்றன புல் வெளிகளற்ற வலை தளங்களில் மேயும் ஆடுகள் இரவு பகலற்ற உலகத்தை தனதாக்கி கொண்டு மனித வாழ்வின் அர்த்தமுள்ள பொழுதுகளை பகடி செய்கின்றன இசைத்தட்டுக்களோடு பாடிப் பறந்த வண்ணத்து பூச்சிகளை காணவேயில்லை நிசப்த வெளியில் எல்லா கடவுள்களும் அடங்கவொண்ணா துயருடன் கனவுகளற்ற மனிதர்களை இவ்வுலகில் இருந்து அகற்ற வேண்டி தங்கள் யாகங்களை தொடங்கியிருந்தன பெரும் மழையாய் பெய்யத் தொடங்கிய இரவொன்றில் கத்தத் துவங்கிய தவளைகளின் சப்தம் மடிக்கணினியில் பதிவிறக்கம் […]
“மாயோன் மேய காடுறை உலகமும்” என்று தொல்காப்பியம் கூறும் நிலப்பகுதி முல்லையாகும். இது காடும் காடு சேர்ந்த பகுதிகளயும் கொண்டதாகும். தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்து இருக்கும்போது நினைந்து நினைந்து இரங்குவதே முல்லைத் திணையாகும். ==================================================================================== செவிலி கூற்றுப் பத்து 1.மறிஇடைப் படுத்த மான்பிணை போல, புதல்வன் நடுவணன் ஆக, நன்றும் இனிது மன்றஅவர் கிடக்கை; முனிவின்றி நீல்நிற வியலகம் கவைஇய ஈனும், உம்பரும், பெந்றலருங் குரைத்தே [மறி=குட்டி மான்=ஆண்மான்; […]
என் தாய்நிலத்தைக் காணவில்லை என்கிறேன்.கிணற்றைக்காணவேயில்லை என்கிறாய்.சிறுகச் சிறுகச் சேகரித்து பூட்டன் வாங்கியநிலத்தைகொஞ்சம் கொஞ்சமாகஎல்லைகள்அயலவனால்சுருங்கிப்போக,கிடைப்பதே போதுமென நினைக்கையில்சப்பாத்துக்கால்கள்தங்களது எனஉயிலுடன் வந்து நின்றனர்..நான் என் செய்வேன்..இப்போது சொல்..நிலமா? கிணறா??முல்லை அமுதன்16/09/2019