மெல்ல இருட்டும்

This entry is part 11 of 31 in the series 16 செப்டம்பர் 2012

தங்கம்மூர்த்தி மெல்ல இருட்டும் இவ்வேளையில் உன் நினைவுகள் ஒரு நிலவைப்போல் மேலெழுந்து குளிர்ந்து ஒளிர்கின்றன. நிலவின் ஒளி மெல்லடி வைத்துப் படர்கையில் இருள் நழுவி விலகி நிலவுக்குப் பாதையமைக்கிறது குளிர்ந்த ஒளி மழையெனப் பொழிந்து என்னை முழுவதும் நனைத்திருந்தது. அப்போது பூமியெங்கும் பூத்திருந்தன நிலவுகள். –

மணிபர்ஸ்

This entry is part 10 of 31 in the series 16 செப்டம்பர் 2012

ஆர்னால்ட் ஃபைன் (அமெரிக்கா) நியூ யார்க்கில் இருந்து வெளிவரும் தி ஜுயிஷ் பிரஸ் இதழின் ஆசிரியர் ஆர்னால்ட் ஃபைன் 1984ல் எழுதிய ஒரு உண்மைக்கதை. மகா குளிரான ஒரு தினம். நான் வீடு திரும்புகிற வழியில் காலில் தட்டியது ஒரு மணிபர்ஸ். யாரோ தெருவில் தவறுதலாக தொலைத்திருக்கிறார்கள். கையில் எடுத்து விரித்துப் பார்த்தேன். அதன் சொந்தக்காரர் பற்றி எதும் துப்பு கிடைக்கலாம். ஆனால் அதில் வெறும் மூணு டாலர்கள் மாத்திரமே இருந்தன. கூட ஒரு கசங்கிய கடிதம். […]

அம்மா

This entry is part 9 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  (1)   அம்மா இனியில்லை.   வெயிலில் வெறிச்சோடிக் கிடக்கும் ஒற்றையடிப்  பாதையாய் மனம் ஒடிந்து கிடக்கும்.   வேலைக்குப் போய் அம்மாவுக்கு வாங்கித் தந்தது ஒரே ஒரு சேலை.   அழுவேன் நான்.   ஆண்டுகள் பல அம்மாவிடம் பேசாத அப்பா நாற்காலியில் கிடத்தப்பட்டிருக்கும் ’அம்மாவின்’ தலைக்கு எண்ணெய் வைப்பார்.   அது இது வரை என் விவரம் தெரிந்த வரை அம்மாவுக்கு அப்பா செய்த ஒரே ஒரு சேவகம்.   அழுவார் அப்பா. […]

ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.

This entry is part 7 of 31 in the series 16 செப்டம்பர் 2012

க.சோதிதாசன்.   உயிரெங்கும் இனிய நினைவுகளால் நிறைகிறாய். நிஜம் தேடி பிரபஞசம் எங்கும் அலைகிறது மனசு காற்றின் இடைவெளிகளிலும் முகம் தேடும் கண். காதல் நினைவுகளில் கானல் நிறைத்து சென்று விழுகிறது பொழுது சில நாட்களில் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.     க.சோதிதாசன்.     யாழ்ப்பாணம்

விவசாயி

This entry is part 6 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  வானம்பார்த்த பூமி விதைத்தால் விறகாகும் கருவேல மரங்கள் ——————————————————-   கண்ணீர்விட்டு வளர்த்தோம் இந்தவருடம் பூப்பெய்தியது எங்கவீட்டு புளியமரம் ——————————————————-   கண்ணைப் போல் தென்னை வளர்த்தோம் இளநீர் தந்தது ——————————————————-   குழிவிழுந்த வயக்காடு தாகம்தீர்த்துச் சிரித்தது மழையால் ——————————————————-   உழைத்துக் களைத்த உழவன் உறங்கத் துடிக்கும் தாய்மடி மரங்கள்

All India Tata Fellowships in Folklore 2012-2013

This entry is part 5 of 31 in the series 16 செப்டம்பர் 2012

All India Tata Fellowships in Folklore 2012-2013 Applications to reach National Folklore Support Centre on or before October 15, 2012.
 Addressed to: M.D.Muthukumaraswamy
 Director,
National Folklore Support Centre,
No. 508, Fifth Floor, “Kaveri Complex”,
96, Mahatma Gandhi Road, Nungambakkam,
Chennai- 600034. Phones: 044-28229192/ 044-42138410/044-28212706
Email: muthu@indianfolklore.org
Website: www.indianfolklore.org You may view the latest post at: https://www.indianfolklore.org/nfscblog/nfsc-diary/all-india-tata-fellowships-in-folklore-2012-2013/    

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! கெப்ளர் விண்ணோக்கியின் அற்புதக் கண்டுபிடிப்பு : இரட்டைப் பரிதிகள் சுற்றும் இரு கோள்கள்

This entry is part 4 of 31 in the series 16 செப்டம்பர் 2012

(கட்டுரை : 84) (Kepler Telescope Finds : Two Planets Orbiting a Double Star) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா உப்பி விரியும் பிரபஞ்சத்தில் புதிய பூமி தேடுது கெப்ளர் விண்ணோக்கி ! நுண்ணோக்கி விழிக் கருவி விண்மீன் ஒளிமுன்னே அண்டக்கோள் ஒளிநகர்ச்சி பதிவாகிக் கண்டுபிடிக்கும் புதிய கோள்  ! ஒற்றைச் சூரிய மண்டலம் போல் இரு பரிதிக் குடும்பம், முப்பரிதிக் குடும்பம், நாற்பரிதிக் குடும்ப ஏற்பாடு பிரபஞ்சத்தில் இயங்கிடும் […]

மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -43

This entry is part 3 of 31 in the series 16 செப்டம்பர் 2012

நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 54. மறுநாள் திங்கட் கிழமை. காலை பத்துமணிக்கு அண்ணாநகர்வரை போகவேண்டியிருந்தது. நான்கு தினங்களுக்குமுன்பு புதுச்சேரி கடற்கரையில் சந்தித்த பிரெஞ்சு இளைஞர் குழு, தொண்டு நிறுவனமொன்றுடன் இணைந்து புதுச்சேரிக்கு மேற்கே ஒருகிராமத்திற்கு சமுதாய நலக்கூடம் கட்டித் தரவிருப்பதாக கூறியிருந்தார்கள். காலை எட்டுமணிக்கு எழுந்திருந்தபோது, கௌசல்யா அம்மா தோசைவார்த்துக்கொண்டிருந்தார். பல்துலக்கி குளித்து முடித்து, வழக்கம்போல ஒரு டெனிம், காட்டன் ஷர்ட் என்று தயாராகவும், மேசைக்கு தோசைதட்டு வந்தது. அவசர அவசரமாக தோசை விள்ளல்களை கார சட்டினியுடன் […]

பசிலிகுருவியின் குஞ்சு ரத்தம் வழியகிடக்கிறது

This entry is part 2 of 31 in the series 16 செப்டம்பர் 2012

ஹெச்.ஜி. ரசூல் லட்சுமணனின் பழங்குடிகவிதை எழுத்தை திறந்து பார்த்தால் சகுனாகுருவியின் கத்தல் ஒலி கேட்கிறது. இது கெட்ட சகுனத்தை முன்னறிவிக்கும் குரலாக புலப்படுகிறது. செம்போத்தும் குறுக்கே பறந்துகெட்ட சகுனத்தை அறிவிக்கிறது. பிறிதொரு இடத்தில் கேட்கும் பெருமாட்டி குருவியின் குரல் அசைவு நல்ல காரியம் நடக்கப் போகிறது என்பதற்கான ஒலிக்குறிப்பாகிறது. தனது வாலால் மண்ணை தட்டிக் கொண்டே போகும் குணமுடையது சுள்ளாம்பூக்கை குருவி. உலகம் அழியும் போது மனிதர்கள் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதை அறிந்து வரும்படி கடவுளால் […]

ஒவ்வொரு கல்லாய்….

This entry is part 1 of 31 in the series 16 செப்டம்பர் 2012

“கூடங்குளம்” பெயரில் தான் குளம். குடிக்க அதில் சொட்டுத்தண்ணிர் இல்லை. அலைந்து திரிந்த காகம் அணு ஜாடியை கண்டது. கொஞ்சம் தண்ணீர் தான் அடியில். ஒவ்வொரு கல்லாய்ப் போட்டால் “ஆபத்து”இல்லாமல் தண்ணீர்குடிக்கலாம். ஆனால் இலங்கைக்காக்கைகள் தமிழ்நாட்டுக்காக்கைகள் டெல்லி சாணக்கிய காக்கைகள் சாணி உரத்துப் பச்சைக்காக்கைகள் உலகத்து “தாராள மய”க்காக்கைகள் உள்ளூர் வெள்ளைக்காக்கைகள் அதிசயமாய் அசலூர் காவிக்காக்கைகள் இவையெல்லாம் படையெடுத்துச் சிறகடித்தால் “ஜாடி”உடையும். பூதமும் கிளம்பும் அலாவுதீன் பூதம் அல்ல. அகிலத்தையே தின்னும் பூதம். இந்த காக்கைகளின் கும்பல் […]