சின்னக்கருப்பன் சென்ற கட்டுரையில் ஆங்கிலத்தையும் விட்டுவிட்டு தமிழில் மட்டுமே உயர்கல்வி என்று தமிழ்நாடு அரசும், பிராந்திய மொழியிலேயே மற்ற மாநிலங்களும் உயர்கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று நான் எழுதியதற்கு நண்பர்களும் என்னிடம் தொடர்பு கொண்டு என்னை விளாசி எடுத்தார்கள். இரண்டு மொழி கொள்கையால், ஆங்கிலம் தமிழை அழித்துவிட்டது என்று என்னிடம் முதலில் சொன்னவர் திண்ணை ஆசிரியர் கோ. ராஜாராம். இது மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்றுகொள்ளாததன் பின்னணியில் அதன் விமர்சனமாக அவர் வைத்த முக்கியமான பார்வை. மெல்லத்தமிழினிச் […]
அவனது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மீரா “சார், உங்களுக்கு போன் வந்திருக்கு, கொடுக்கட்டான்னு ரிசப்ஷன்லேந்து அமலா கேக்கறாங்க” என்றாள். மீரா அவனுடைய பி.ஏ. அவனிடம் கைபேசி தவிர அவனுக்கென்று தனிப்பட்ட தொலைபேசி இணைப்பும் இருக்கிறது. தனிப்பட்ட தொலைபேசியின் இன்டெர்காம் இணைப்பு மீராவிடம் உள்ளது. இந்த இரண்டையும் விட்டு விட்டு அலுவலகத்தின் பொது எண்ணில் அழைப்பது யார் என்று முத்துக்குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது. “யாராம்?” என்று அவளிடம் கேட்டான். “பெயர் சொல்லலையாம். மதுரேலேர்ந்து கால்னு அமலா சொன்னாங்க” […]
திருப்பூர் பாண்டியன்நகரைச்சார்ந்த எழுத்தாளர் மதுராந்தகன் எழுதிய “ என் முகவரி “ கவிதை நூல் வெளியீடு 17/9/20 அன்று காலை நடந்தது. திரைப்பட இயக்குனர் ரவிக்குமார்…( இன்று. நேற்று நாளை மற்றும் அயலான் )வெளியிட,, திரைப்பட இயக்குனர் ( தாழ் ) பரணிகுமார் பெற்றுக்கொண்டார் ..எழுத்தாளர் மதுராந்தகனுக்குப் பொன்னாடை போர்த்தி பாராட்டுபவர் திரைப்பட இயக்குனர் ( தாழ் ) பரணிகுமார் .. திரைப்பட இயக்குனர் ரவிக்குமார்…( இன்று. நேற்று நாளை மற்றும் அயலான் )வெளியிட,, திரைப்பட இயக்குனர் ( தாழ் ) […]
வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில் திருப்பூர் சுப்ரபாரதிமணியனின் நாவல் “ சாயத்திரை “ நூல் மின்நூலாக வெளி வந்துள்ளது. 180 பக்கங்கள் கொண்ட நாவல். இதை முன்னர் காவ்யா பதிப்பகம், பொள்ளாச்சி எதிர் பதிப்பகம் ஆகியவை மறுபதிப்புகளாக வெளியிட்டுள்ளன. இந்நூல் * தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு பெற்றது * ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், வங்காளம் ,மலையாள மொழிகளில் வெளிவந்துள்ளது Ebooks : Pustaka Subrabharathimaian Title A B Language 1. Sayathirai – Fiction […]
எஸ்.சங்கரநாராயணன் (தினமணிகதிர் 1999) வாழ்க்கை பற்றி அவனிடம் சில தீர்மானமான அபிப்ராயங்கள் இருந்தன. சதா துறுதுறுவென்று எதைப் பற்றியாவது சிந்திப்பதும் அதை உரக்க விவாதிப்பதுமாய் இருந்தான் அவன். படிக்கிற காலத்தில் இருந்தே அவன் படிப்பில் கெட்டிக்காரன். முதல் இரண்டு இடங்களுக்குள் அவன் கட்டாயம் வருவான். இலக்கியத்தில் அவனுக்கு ஆர்வம் இருந்தது. ஆங்கிலத்தில் சரளமாய் வாசித்துத் தள்ளுவான். பொடிப்பொடி எழுத்துக்களை இரவின் சிறு வெளிச்சத்தில் படுக்கையில் படுத்தபடி வாசித்து வாசித்துத்தான் கல்லூரி முடிக்குமுன்னே சோடாபுட்டி கண்ணாடி போட வேண்டியதாகி […]
_ லதா ராமகிருஷ்ணன் ஜூன் மாதம் 14ஆந் தேதி காலை பதினோறு மணியளவில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அறையை அவருடைய வீட்டுப் பணியாட்களில் ஒருவர் தட்டியபோது அவர் திறக்கவில்லை என்றும் , கம்ப்யூட்டர் பூட்டைத் திறக்கும் பணி தெரிந்தவரை அழைத்து பூட்டைத் திறக்கச்சொல்லிப் பார்த்தபோது உள்ளே சுஷாந்த் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததாகவும், கூறப்பட்டது. சுஷாந்த் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தது அவருடைய உடலை இறக்கியதாகக் கூறப்படும் பித்தானி மட்டுமே. தகவலறிந்து வந்த மும்பைக் காவல்துறை பார்த்தமாத்திரத்தில் அதைத் […]
மறதிக்கு ……. “தாத்தாச்சாரி, நாலு கார்டு வேணும்யா!” “எனக்கு ஒரு மணியார்டர் இருக்கணுமே, தாத்தாச்சாரி? “ஓய் தாத்தாச்சாரி, நாளைக்கு வர போது ஒரு பொடிப்பட்டை வாங்கிண்டு வாரும்.மறந்து போயிடப்படாது. உம்மைத்தான் நம்பியிருக்கேன்.” ” தாத்தாச்சாரி , இன்னிக்கி துவாதசியாச்சே. இங்கேதான் சாப்பிட்டுப் போயிடுமே.” ” தாத்தாச்சாரி, போகிறபோது இந்த லேகிய டப்பாவைச் சிங்கார உடையார் கிட்டே கொடுத்துடுமே.” “வெயில் கண்கொண்டு பார்க்க முடியலே. ஏனையா இந்த அபர வயசிலே, இந்த அவதி? ரொம்ப கௌரவமான உத்தியோக மாச்சீன்னு விட மனசு வல்லியா?” “சாமி, நம்ப மவன் அக்கரையிலேர்ந்து எளுதியிருக்குறானா?” ” […]
ப.தனஞ்ஜெயன் மாத்ருமேனன் கிளினிக்கில் கூட்டம். எட்டு பேர் வரிசையில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருந்தனர்.அங்கு உள்ளே நுழைந்தவர், “என்னமா டாக்டர் உள்ள இருக்கிறாரா” என்று கேட்டார். “ம்..இருக்கிறார்” என்றாள் வெள்ளை கோட் போட்ட நந்தினி நர்ஸ். “டோக்கன் போடவா” என்றாள். “ம் போடு மா” என்றார் பெரியவர். “உங்க பேரு?” “”ராமன்…” “வயது?” “எழுபது” “என்ன பிரச்சனை?” “நீ என்ன டாக்டரா? உள்ளேதான் சொல்லனும்.” பணத்தைக் கட்டினார் ராமன். “ம்..இந்தாங்க ,நீங்க ஒன்பது,போய் உட்காருங்கள்” என்றாள். நந்தினியைப் […]
குணா நடுக் கடலில் நிர்க்கதி உணர்ந்தேன் கடற்கரை ஓரம் பரவசம் கண்டேன் மலைமுகட்டில் பாதம் நடுங்கிட அடிவாரம் ஆனந்தம் தந்தது பசுமை கண்டதும் புது உணர்வு வந்தது நடுக் காட்டில் நடுக்கம் வந்தது நகர மத்தியில் பரபரப் புணர்ந்தேன் ஒதுக்குப் புறத்தில் உல்லாசம் தெரிந்தது கிராம சூழலில் கிலேசம் வந்தது சாரல் காற்றினை சில்லென்று உணர புயலைக் கண்டு மிரண்டே போனேன் மழையினை கண்டு சற்றே ஒதுங்கினேன் ஆற்று நீரினில் நீந்தச் சொன்னது வெள்ளம் வந்ததும் மிரட்சி […]
ப.தனஞ்ஜெயன் நம்பிக்கையோடு நாட்கள்சென்றுகொண்டிருக்கிறதுபெறுதலுக்காககாத்திருக்கிறார்கள்சில நேரம் பசியற்றுபெரும்பாலும் பசியோடும்காத்திருக்கிறது கண்கள்திசை திருப்பும்பேச்சுகளை மறந்துதின செய்திகளையும்ஆதார் அட்டையும்திரும்பத் திரும்பப் பார்த்தாயிற்றுஇருக்கைகளின்நிதானமான பொய்களைஅறியாமலும்கறை படிந்த சொற்களைநம்பிஇன்னும் காத்திருக்கும்அப்பாவி மக்களைகடந்து செல்கிறதுஇந்த ஐந்தாண்டு. ப.தனஞ்ஜெயன்danadjeane1979@gmail.com