தாகூரின் கீதப் பாமாலை – 32 என் வாழ்வின் கழுத்தாரம் !

This entry is part 21 of 41 in the series 23 செப்டம்பர் 2012

தாகூரின் கீதப் பாமாலை – 32 என் வாழ்வின் கழுத்தாரம் ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஒவ்வோர் நாளும் கிடைக்கும் ஏராள மான வெகுமதிகளில் சிறிதளவு பெறுவேன் சில நாட்களில்,  சில வேளைகளில். வசந்தத் தென்றலை உசுப்பிடும் அச்சிறு துண்டும் ! நாட்கள் நகர்ந்தன ஒன்றுக்குப் பின் ஒன்றாய்,  மாந்தர் வாசலுக்கு வெளியே வருவதும் போவதும் போல ! வழிப் பாதைப் போக்கில் அவர்கள் வந்து மிதப்பது போல் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 38) என் கலைக் குரு

This entry is part 20 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 38) என்  கலைக் குரு மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. […]

இந்த வார நூலகம் – வணிக இலக்கியமும் புனைக்கதைகளும்

This entry is part 19 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  சிறகு இரவிச்சந்திரன். போரூர் நூலகத்தில், நாளிதழ்களுக்குத்தான் கூட்டம் அலைமோதுகிறது. இதழ்களைக், குறிப்பாக இலக்கிய இதழ்களைச், சீந்துவாரில்லை. வேலை தேடும் வசதியில்லாத இளைஞர்கள், கிடைக்கிற பேருந்துப் பயணச்சீட்டுகளில், குறிப்பெடுத்துக் கொள்கிறார்கள். அதுவும் கிடைக்காதவர்கள், வார, மாத இதழ்களின் வெள்ளை மார்ஜின்களை லாவகமாகக் கிழித்துப் பயன்படுத்துகிறார்கள். நான் பார்த்த வரை, யுவதிகள் கண்ணில் படக்காணோம். ஒரு வேளை அந்த வேலையை, அவர்களுக்காக, அவர்களின் தந்தைமார்கள் செய்து கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில், குறிப்பேட்டுடன் போன என்னை விநோதமாகப் பார்த்தவர்கள் உண்டு. […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -29

This entry is part 18 of 41 in the series 23 செப்டம்பர் 2012

சீதாலட்சுமி எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு.   புலம்பெயர்ந்து செல்வோரரின் குடியிருப்புகள் உலகெங்கினும் பெருகிக் கொண்டிருக்கின்றது தாராவி பழமையான குடியிருப்புகளில் ஒன்று. அங்கும் ஆரம்ப காலங்களில் பல இடங்களிலிருந்து வந்த போதினும் நாளடைவில் தமிழர்கள் பெரும்பான்மையினராயினர். துரையுடன் தாராவிக்குள் நுழையும் முன்னரே அதன் சுற்றுப்புறத்தையும், உள்ளே நுழையவிட்டு அதன் அமைப்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய களப்பணியில் முதலில் பார்வையில் பட்டவைகளையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். நிலைமையை மதிப்பீடு செய்ய அது முக்கியம்.. சென்னையில் […]

வெள்ளம்

This entry is part 17 of 41 in the series 23 செப்டம்பர் 2012

: சுப்ரபாரதிமணியன்   தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதாய் அவன்  அவ்வப்போது சொல்லிக்கொண்டதுண்டு. படுக்கையில்  யாருடனாவது களைத்து  விழுந்து உடம்பைக் குறுக்கிக் கொண்டு தூங்க ஆரம்பிக்கும் போது பெரும்பாலும் அவன் அப்படிச் சொல்லிக் கொள்வான். இல்லையென்றால் சவுந்தர்ய உபாசகனாகி இவ்வளவையும் ரசிப்பவனாக ஆகியிருக்க முடியுமா என்றிருக்கும். இவ்வளவு  பெண்கள்  தன்னிடம்  அகப்பட்டுக்கொள்வார்கள் என்று அவன் நினைத்துப்பார்த்ததுமில்லை.அய்ந்து வருடம் முன்பெல்லாம் அவன் தனித்து விடப்பட்ட போது அவனுக்கு சாவு பற்றிய எண்ணம் தான் மிகுந்திருந்தது. சரவணன் பெரியப்பாவிடம் ஒருநாள் கூட […]

அ.குணசேகரனின் ‘இல்லாமல் இருத்தல்’-ஓர் அழகிய மக்கள் இலக்கியப் படைப்பு

This entry is part 16 of 41 in the series 23 செப்டம்பர் 2012

மணி.கணேசன் தமிழ்ச் சமூகம் தொன்றுதொட்டு வாழும் ஒரு கதைச்சொல்லிச் சமூகமாகும்.தம் வாழ்வியலை இரத்தமும் சதையுமாகக் கற்பனை கலந்து சுவைபட எடுத்துக்கூறுவதில் இது தன்னிகரற்றது.நாட்டுப்புறங்களில் வாய்மொழியாக வழங்கி வந்த பல்வகைப்பட்ட கதைகள் முறையாக எழுதப்படாமலும் தொகுக்கப்படாமலும் இலக்கியமாகப் பதிவுசெய்யப்படாமலும் இருந்த காரணங்களால் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகம் மேலை இலக்கியப் புத்திலக்கிய வரவாகச் சிறுகதையைக் கருதத்தொடங்கியது. ஆதலாலே,தமிழ்ச்சிறுகதையின் பிதாமகர் வ.வே.சு.ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் எனும் சிறுகதை தமிழில் உருவான முதல் சிறுகதையாக உருவெடுத்தது என்றுதான் கூறவேண்டும்.மேலைநாட்டார் வகுத்துத்தந்த சிறுகதை […]

ஜெய் பீம் காம்ரேட் – திரையிடல் (தமிழில்)

This entry is part 15 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஜெய் பீம் காம்ரேட் – திரையிடல் (தமிழில்) ஜெய் பீம் காம்ரேட் – ஆவணப்படம் திரையிடல் & டி.வி.டி. வெளியிடல் திரைப்படம் : JAI BHIM COMRADE, மூன்று மணி நேரம், 20 நிமிடங்கள் ஓடக்கூடியது. நண்பர்களே ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படம் (தமிழ் சப் டைட்டிலோடு), திரையிடப்பட உள்ளது. டி.வி.டி. வெளியிடுபவர்: வழக்கறிஞர் சத்யசந்திரன் பெற்றுக்கொள்பவர்: பேராசிரியர் இளங்கோவன் திரைப்பட அறிமுகம்: ஆர். ஆர். சீனிவாசன் மற்றும் ‘தலித் முரசு’ புனித […]

ஆகாயத்தாமரை!

This entry is part 14 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  ஊதுவத்தியும், பன்னீரும், வாசனைத் திரவமும், மலர்ச்செண்டுகளின் மணமும் கலந்ததொரு வித்தியாசமான வாடை.. ஆங்காங்கே பெண்கள் கூடிக்கூடி குசுகுசுவென இரகசியமும், வாயின் மீது அடித்துக் கொண்டும், புலம்பிக் கொண்டும், வயிற்றில் புளியைக் கரைக்கும் சூழல். பெரிய பட்டாசாலை முழுதும் நிறைந்த உறவுகளும், நட்புகளும், மங்கலான முகங்களுடன்……   “ஏண்டி பாவி, இப்படி அல்பாயுசுல போயிட்டியேடி.. நன்னாத்தானே இருக்கேன்னு நினைச்சுண்டிருந்தேனே.. இப்படி தலையில கல்லைத் தூக்கிப் போட்டுட்டியேடி.. தற்கொலை பண்ணிண்டு உயிரை மாய்ச்சுக்கற அளவுக்கு நோக்கு என்னடி பிரச்சனை. […]

பாவலர்கள் (கதையே கவிதையாய்)

This entry is part 13 of 41 in the series 23 செப்டம்பர் 2012

    நான்கு பாவாணர்கள் மேசையின் மீது இருந்த திராட்சைரச மதுக் கோப்பையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். முதல் கவிஞன், ”எம் மூன்றாம் கண் மூலமாக, ஒரு மாய வனத்தின் பறவைகள் மேகங்களாய் விண்வெளியில் நகருவது போல் இந்த மதுவின் சுகந்த மணத்தையும் காண்பதாக என்ணுகிறேன் யான்” என்றார். இரண்டாம் பாவலரோ தம் சிரத்தை உயர்த்திக் கொண்டு, “எம்முடைய அகச்செவியின் மூலம் அந்த மூடுபனிப் புள்ளினங்கள் பாடுவதைக் கேட்கிறேன். மேலும் வெண்மையான ரோசா தன் மென்மையான இதழ்களுக்குள் தேனீயை […]

சினேகிதனொருவன்

This entry is part 12 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  சிநேகிதனொருவன் இருக்கிறான் எனக்கு ஒரு பயனுமற்ற பொறுக்கியென அனேகர் கூறும்படியான   அவ்வப்போது நள்ளிரவுகளில் பயங்கரமான கனவொன்றைப் போல உறக்கத்தைச் சிதைத்தபடி வருவான் அவன் எனதறைக்கு   வடையொன்றை, கடலைச் சுருளொன்றை எனது கையில் திணிக்குமவன் வரண்ட உதடுகளை விரித்து குழந்தைப் புன்னகையை எழுப்புவான்   உரையாடல்களை உடைக்கும் சொற்களோடு சிவந்த விழிகளைச் சிறிதாக்கி புரியாதவற்றை வினவுவான் எனது தோள்களைப் பிடித்து பதிலொன்றைக் கேட்டு இரு விழிகளையும் ஊடுருவுவான்   அத்தோடு எனது தோள்மீது அவனது […]