நேர்மையின்குரல்

This entry is part 7 of 37 in the series 2 செப்டம்பர் 2012

  வளவ. துரையன் சிறந்த வாசகராக, நேர்மையானவிமர்சகராக, இன்னும் கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக என்று பல்வேறு தளங்களிலும் சுமார்அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத்தன் முத்திரையைப் பதித்து வரும் மூத்த எழுத்தாளர்தி.க.சி தனது கருத்துகளை எண்ணித் துணிந்து எழுதிய காரணத்தாலேயே அவர் பலவித எதிர்வினைகளையும்சந்திக்க நேர்ந்தது. “ தனி நபர்களின் திறமைகளை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில்அவரின் குறைகளையும் மூடி மறைக்காமல் சுட்டிக் காட்டியதாலேயே தி.க.சியின் எழுத்துகள்புத்தகங்களாக வெளிவராமல் போய்விட்டன “ என்னும்       வல்லிக்கண்ணனின் கூற்று சாலப்பொருத்தமானஒன்றாகும்.   இந்தஆண்டின் தொடக்கத்தில் […]

இடைவெளிகள் (10) – மிகைப்படுத்தலும் மனத்துள்ளலும்

This entry is part 6 of 37 in the series 2 செப்டம்பர் 2012

இராம.வயிரவன் rvairamr@gmail.com   ஐபோனில் இரண்டு விரல்களால் ஒரு படத்தைப் பெரிதாக்கி விடுவதைப் போல எதையும் பெரிதாக்கி விடுகிறான் மனிதன். ஆம் மனிதன் எதையுமே மிகைப்படுத்தி விடுகிறான். யதார்த்தம்தான் இயல்பானது; அதுதான் உண்மை நிலை; அதற்கு எப்போதுமே சக்தி அதிகம். ஒருவரை விரும்பினால் ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளுவதும், வெறுத்தால் அடியோடு வெறுத்து ஒதுக்குவதும் மிகைப்படுத்தல்களே. அவை உண்மையிலிருந்து இடைவெளி விட்டு வெகுதூரம் போய்விடுகின்றன. வெகுதூரம் போய்விடாமல் திருக்குறள் இப்போது நம்முடனேயே இருக்கிறது. அதற்கு ஐபோனுக்கும், அதில் திருக்குறள் […]

நல்லதோர் வீணை..!

This entry is part 5 of 37 in the series 2 செப்டம்பர் 2012

 சிறுகதை:ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம்   மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின்  நடைக்கு ஜதிபோட, தலையில் சூட்டிய  பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை முழுதும்  மலரின் புகழைப்  பரப்பியது.  “பார்கவி இன்னும் கொஞ்சம் மெல்ல நடவேன்” என்று காதில் அசைந்தாடிய ஜிமிக்கிகள் ரகசியமாய் எச்சரிக்க, மனதைப் பிடுங்கித் தின்ற வெட்கத்தையும் பயத்தையும் ஒதுக்கிவிட்டு பிரார்த்தனையோடு மேடையில் அமர்கிறாள். விரித்திருந்த ஜமுக்காளத்தில் காத்திருந்து, அமர்ந்தவளின் மடியில் தலை வைத்தது  அவளது அருமை […]

காலமும் தூரமும்

This entry is part 4 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    — ரமணி   யார் சொல்லியும் எப்படிச் சொல்லியும் சண்டையின்போது மேல்விழுந்த வார்த்தைகள் செய்த காயத்தை ஆற்றிக்கொள்ளவே முடியவில்லை!     புழுதி படிந்துகொண்டிருக்கும் அந்த நாளின் பாரம் இறக்கப்படாமலேயே உறைந்து கிடக்கிறது!   பார்வையை விட்டகல புலம் பெயர்ந்த பின்னும் நழுவிய நாட்களோடு காயத்தின் வலியும் செய்தவன் நினைவும் கரைந்து போய்விடவில்லை.   நேர்ந்துபோன உறவுகளை காலம் சேர்க்கவும் இல்லை தூரம் பிரிக்கவும் இல்லை   —-  ரமணி

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி

This entry is part 3 of 37 in the series 2 செப்டம்பர் 2012

வணக்கம் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி முற்றிலும் மாணவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய எல்லா தகவல்களையும் இணைப்பில் காணவும். உங்களின் ஆதரவின்றி இந்த நிகழ்ச்சிகளில் எங்களுக்கு வெற்றி இல்லை. தாங்கள் தவறாது வருகை தந்து தமிழைத் தாங்கி நிற்கப்  பாடுபடும்  நம் மாணவச் செல்வங்களை வாழ்த்த வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். மற்ற தகவல்களுக்கு அழைக்கவும் 90016400 நன்றியுடன் யூசுப் ராவுத்தர் ரஜித் தலைவர் 68 pattimandram with loge தமிழ்ப் பட்டிமன்றக் […]

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(நிறைவுப் பகுதி)

This entry is part 2 of 37 in the series 2 செப்டம்பர் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com   மரணத்தை வென்ற மகா கவிஞர்கள்  மரணம் மனிதன் பயப்படும் ஒரு சொல். மரணித்தல் மனிதன் விரும்பாத ஒன்று. மரணம் தங்களுக்கு வரக்கூடாது என்று தடுக்க நினைக்கும் மனிதர்களே இங்கு அதிகம். ஆனால் தங்களுக்கு நேரப்போகும் மரணத்தை எண்ணி எந்தவிதக் கவலையும் கொள்ளாதவர்களாக மகாகவியும் மக்கள் கவியும் விளங்கினர். மரணத்தை முகமலர்ச்சியுடன் ஏற்கத் துணிந்தவர்கள் இக்கவிஞர்கள். மகாகவி பாரதியார் மரணத்தை வெல்வதற்கு மக்களுக்கு வழி கூறுகிறார். அனைவரும் இறந்தாலும் […]

புதிய அனுபவம்

This entry is part 1 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    எழுதியவர் : ‘கோமதி’   பாகீரதியிடம் தெருக்கோடி வீட்டு பையன் ஓடி வந்து, “உங்க வீட்டுக்குபுதுசா ஒருத்தர் வந்திருக்காரில்லயா? அவரை போலீஸ் பிடிச்சுண்டு ஜீப்புலே அழைச்சுண்டு போனா. நான் ஸ்கூலுக்கு போறபோது பார்த்தேன்” என்றபோது பாகி “ஐயையோ, புதுப்பையன் கன்னடமும் தெரியாது. இங்கிலீசும் பேசத்தெரியாது. எங்கே போய் தேடறது?’’ என்று கவலைப்பட்டாள்.   ”மல்லேச்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் கூட்டிக்கொண்டுபோயிருப்பார்கள் ” என்றுசொன்ன பையன் விளையாட ஓடிவிட்டான். மணி மாலை நாளுக்கு மேலாகிவிட்டது.   மாடியில் […]