பாடலிபுத்திரத்தை ஒட்டிய வனப்பகுதியில் புத்தர்களும் சீடர்களும் தங்கியிருந்த போது மந்திரி வாசக்கரா ஆனந்தனை வணங்கி “சுவாமி, தாங்களும் புத்தரும் பிட்சுக்களும் பாடலிபுத்திர நிர்மாணப் பணிகளைக் கண்டு ஆசி வழங்க வேண்டும் ” என்றார். “வாசக்கரா .. அஜாத சத்ரு இங்கே வந்து புத்தரை வணங்கட்டும். அவர் மிகவும் தளர்ந்திருக்கிறார்” “அப்படியே சுவாமி.. மாமன்னர் ராஜகஹம் சென்றிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் திரும்பி வர எண்ணியுள்ளார்” “புத்தரின் திரு உள்ளம் தெரியவில்லை. இப்போது தியானத்தில் இருக்கிறார்” “மாமன்னர் வரும்போது […]
எஸ். சிவகுமார் வாசற்கதவைப் படாலென்று சாத்திவிட்டு உள்ளே வேகமாக வந்து சோபாவில் தொப்பென்று விழுந்தாள் சுஜாதா. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்து சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாள். சற்றுமுன் தெருவில் கண்ட காட்சி நினைவில் நின்று உறுத்தியது. கோபம், எரிச்சல், அழுகை என பலப்பல உணர்வுகள் ஒருசேர அவளை அழுத்தின. நினைக்க நினைக்க அழுகை வந்தது. இன்று அவளின் திருமண நாள். இருபது ஆண்டுகள் முடிந்தன. இன்று என்னென்ன […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூட்டு யுகப் பிரளயம் காட்டுத் தீ போல் பரவுது ! வீட்டைப் பாதிக்க வருகுது ! வானைத் தொடும் பனிமலைகள் கூனிக் குறுகிப் போயின ! யுக யுகமாய் வந்து போகும் பருவ கால நிகழ்ச்சிகள் விதி மாறிச் சுற்றியக்கம் சுதி மாறிப் போயின ! பழைய பனிச்சிகரம் உருகிக் குளிர்ப் பருவத்தில் புதுச் சிகரம் வளர வில்லை ! பூமியின் அச்சு, […]
டாக்டர் ஜி. ஜான்சன் திண்டிவனம் என்றும் போல காரிருளில் மூழ்கியிருந்தது. அது இரவு நேரம். மின்சாரம் இல்லாத காலம். வருடம் 1870 ! அந்த மிஷன் பங்களாவில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் ஒரு இளம் அழகிய அமெரிக்க நங்கை ஆங்கில நாவல் படித்துக் கொண்டிருந்தாள் . அவளின் பெயர் ஐடா ஸோஃபியா ஸ்கடர் ( Ida Sophia Scudder ) . வயது 20. அமெரிக்காவில் இறைத் தூதர் ( missionary ) பயிற்சியும் பெற்றவள் . […]
(1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில மாதிரி படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று […]
ஜெயஸ்ரீ ஷங்கர், புதுவை ….சீ…சீ….என்னவாக்கும் இது….எனக்கேன் இப்படில்லாம் தோணறது..? இந்த மாணிக்கம் மட்டும் என்ன அவள் மேல இருக்குற பாசத்துலையா இப்படி அழறான்..அப்படி இருந்திருந்தால் வசந்தியைப் பார்த்த அந்த வினாடியே சொல்லியிருக்க வேண்டாமோ? ஒரு நிமிஷம் ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி நின்னுட்டு திடீர்னு எங்கேர்ந்து ஞானோதயம் வந்ததாம்? இவனுக்கு .வீட்டு வேலை செய்ய ஆள் வேணுமாயிருக்கும் ..குழந்தையைப் வேற பார்த்துக்கணம்….பத்தாக்குறை க்கு அவளோட தங்கை வேற செத்துப் போயிட்டாளாம். அதான் வசந்தியைப் பார்த்ததும் முதலைக் கண்ணீர் […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா இறைவன் செயலுக்குத் தடங்கலின்றி மருத்துவன் கிடைப்பான். முதியவன் கை அழுத்திடப் பெறுவதையும், உதவி செய்வதையும் காண்கிறேன். பலகணியில் சாய்ந்து கொண்டு குறித்துக் கொள்கிறேன், வெளிச் செல்லும் வாசலை, பிழைத்துச் செல்லும் பாதையை ! பிரேதமே ! உன்னைப் பற்றிச் சொல்வேன், நல்லதோர் உரம் நீ ! உறுத்த வில்லை என்னை அது ! இனிதாய் நறுமணத் தோடு வளரும் வெள்ளை ரோஜாவை நுகர்கிறேன். […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 22.நாடக உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த ஏழை! அடடே…வாங்க..வாங்க…. வணக்கம்… எப்படி இருக்கறீங்க… நல்லா இருக்கிறீங்களா…? என்ன கண்டுபிடிச்சுட்டீங்களா….? இல்லையா? அட என்னங்க எந்தப் பதிலும் சொல்ல மாட்டேன்றீங்க… சரி…சரி..எல்லாரும் எல்லாத்தையும் மனசுல வச்சுக்க முடியுமா அதெல்லாம் ஒரு சிலராலதான் முடியும்… பராவாயில்லை..நானே சொல்லிடறேன்.. அந்த ஏழை எஸ்.ஜி. […]
பிரேமா நந்தகுமார் விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று […]
ஆணி அடித்தது போல் சில நொடிகளுக்கு அப்படியே நின்றுவிட்டாலும், தயா திரும்பித்தான் பார்த்தாள். அவளுடைய ஓரகத்தி சாந்திதான் நின்றுகொண்டிருந்தாள். அச்சத்திடையேயும் தயாவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ‘இவள் பாம்பா, பழுதையா என்று தெரியாது. இருந்தாலும் அவரிடமோ அல்லது மாமியாரிடமோ காட்டிக்கொடுக்கிற அளவுக்கு மோசமானவளாக இருக்க மாட்டாள் என்றே தோன்றுகிறது.’ – தயா சட்டென்று வெளியே வந்தாள். முகத்தில் அதற்குள் வேர்வை பொடித்து விட்டிருந்தது. “சும்மாதான்! சாவி அதிலேயே சொருகி இருந்தது. உள்ளே என்ன இருக்கு, எல்லாம் அடுக்கி […]