அருணா சுப்ரமணியன் கவிதைகள்

அருணா சுப்ரமணியன்

கழுவில் ஏற்றப்படும் காவல்காரர்கள்

நாள்கணக்காய்
காத்துக்கிடக்கும்
எங்களை மூலையில்
தான் கிடத்துகிறீர்கள்
நீங்கள் இல்லா நேரத்தில்
உங்கள் உடமைகளை
களவாட நினைப்பவர்கள்
கல்லால் அடிக்கிறார்கள்
தாங்கிக்கொள்கிறோம்
சில நேரங்களில்
உங்கள் மறதியால்
நாங்கள் தண்டனை
பெறுகிறோம்..
நீங்கள் சாவியைத்
தொலைத்துவிட்டு
பூட்டுக்கள்
எங்களை ஏன்
கழுவில் ஏற்றுகிறீர்கள்?

——————————–

கனவுகளைத் திருடியவள்

என் கனவுகளை
திருடியவளை
கண்டேன்…
கனவுகளை
தொலைத்ததால்
எனக்கு நேர்ந்த
துயரங்களை
சொல்லி என்
கனவுகளை
திருப்பித் தர
கேட்டேன்..
காலம் கடந்து
வந்திருக்கிறாய்
என்றாள்
என்னைப் போன்று
இருந்தவள்….

——————————–

Series Navigationதொடுவானம் 170. அப்பா வந்துவிட்டார்.உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்