This entry is part 3 of 12 in the series 11 செப்டம்பர் 2016

தினேசுவரி,மலேசியா

உன் கொலைகளில் ஒன்றில் மரணித்தவள்தான் நான்…
இரத்தம் சுண்டி என் நரம்புகள்
இருகி மீண்டு வந்தேன்
மரணம் தாண்டி…

இனி மீண்டும் மீண்டும் நீ கொலை செய்வதால் இறக்கப் போவதில்லை நான்…

இருத்தலின் வலியும்
இல்லாதலின் வலியும்
வெள்ளை கருப்பாய் மாறி மாறி
நல்லதில் கெட்டதும்
கெட்டதில் நல்லதுமாய்
தத்துவம் தாண்டி
எல்லாமே இங்கு
திட்டுத் திட்டாய்…

என் வார்த்தைகளை
விழுங்கினாய்
கத்தி தொலைகிறேன்…
கேட்டு தெளிதலும்
கெட்டு தெளிதலும்
இங்கு கோட்பாடுகள் அல்ல
முரண்பாடுகள்

நான் சொல்வதில்லை
நீயும் கேட்பதில்லை
உன் கொலைகளில்
மரணித்து விட்டதாய் இளைப்பாறுகிறாய்

இறந்தும் துளிர்விடுவேன்
என் வேர்கள் ஒருநாள்
உனக்கு ஆயிரம் கதைசொல்லும்

இனி மீண்டும் மீண்டும் நீ கொலை செய்வதால் இறக்கப் போவதில்லை நான்…

-தினேசுவரி,மலேசியா

Series Navigationதிருநம்பிகள்மூன்று கல்லறைகள்.