கவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்

 

1.

வீதியில் குழந்தைகள் விளையா  டும்

சப்தம் ஒழுங்கற்று.

இரண்டு மாதமாகக் பள்ளிவிடுமுறை

நிச்சயக்கபட்டாத பாடத்திட்டம்.

புத்தகங்கள் வாங்கும்,

பைண்டிங் செய்யும் வேலைகள் இல்லை.

திறப்பு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மறுதிறப்பு நாள் பற்றி பல யூகங்கள்.

துவைத்து காயப்போட்ட

புத்தகப் பைகள் சிரித்தபடி

கயிறுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

 

2.

 

கலகலப்பாக இருந்தது  வீடு.

விடுமுறையில் எத்தனையோத் திட்டங்கள்

எத்தனையோ வேலைகள் .

கூட யாராவது இருந்தபோது ஆறுதலாக இருந்த்து.

மகள் இருந்தது இன்னும் ஆறுதல்.

இப்போது கல்லூரி போகிறாள் மகள்

என்ற சந்தோசம் மனதில்.

ஆனால்

வீடு வெகு அமைதியாகி விட்டது.

3.

ஊட்டியைப் பார்க்கும் ஆசை

சின்ன வயதிலிருந்து.

எங்கெங்கோ போனது

ஊட்டிப்பக்கம் வந்ததில்லை.

இப்போது வாய்த்த்து மகிழ்ச்சி.

குளிருக்குப் பயந்திருந்தது.

குளிர் இப்போது  விட்டுப்போயிற்று.

உடம்பு நடுங்கி அலுத்துப்போன

ஒரு மதிய நேரத்தில்.

 

 

 

Suba089@yahoo.co.in

 

Series Navigationபழமொழிகளில் ஆசைதளம் மாறிய மூட நம்பிக்கை!