காத்திருத்தலின் வலி

தாயின் கருவறையிலிருந்து விட்டு விடுதலையாகும்போதும்
மழலையர் பள்ளியில் சேர்க்கைக்கான
பெரும்கனவுகளுடன் நிற்கும்போதும்
படித்தவற்றையெல்லாம் தேர்வு அறையில் கொட்டி விட்டு முடிவுக்காக காத்திருக்கும்போதும்
ஊரே கூடியிருக்கும் இடங்களில் அன்புக்குரியவரின் வருகைக்காக ஏங்கித்தவிக்கும்போதும்
வேலைவாய்ப்பிற்காக ஆண்டுக்கணக்கில் கிடைக்குமென்று நம்பிக்கொண்டிருக்கும் போதும்
திருமணச்சந்தையில் வரன்தேடி இளமை அழிந்தொழிந்து உழைத்து ஓடாக தேயும்போதும்
பிள்ளைவரம் வேண்டி கோவில்கோவிலாக அலைந்துதிரியும்போதும்
என்னுள் உண்டாகும் வலி
நீ உணர வாய்ப்பில்லை
ஏனென்றால் நீதான் இன்னும்
இம்மண்ணில் வந்து பிறக்கவில்லையே!

அமுதாராம்

Series Navigation