குடும்பத்து விதை நெல்லாய் விளங்குபவள் பெண் . பெண்மையைப் போற்றுவோம்

Spread the love

   “ கனவு இலக்கிய வட்டம் “

————————————————–

         மார்ச்   மாதக் கூட்டம்: சர்வதேச மகளிர்தின சிறப்பு நிகழ்வாய்  நடைபெற்றது.

கனவு இலக்கிய வட்டத்தின் மாதக் கூட்டம்   மார்ச்     5/3/20அன்று மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர்  நடந்தது. தலைமை வகித்தார் கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர்  ) ….…சமூக ஆர்வலர் சந்திரசேகரன் முன்னிலை  வகித்தார் சர்வதேச மகளிர்தின சிறப்பு நிகழ்வாய் நடைபெற்றது ..

அந்த உழைக்கும் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நான்கு புதிய நூல்கள் அறிமுகம்  நடைபெற்றது …

1. இவள் -மணிமாலா மதியழகன்-சிங்கப்பூர் – சிறுகதைகள்

2. ஆகுளி – பொள்ளாச்சி -கீதாபிரகாஷ் கவிதைகள்

3. வைன் என்பது குறியீடல்ல -தேவசீமா-சென்னை- கவிதைகள் .

4. நினைவில் வராதக் கனவுகள்- தமிழ்மொழி கவிதைகள் –பாண்டிச்சேரி

தமிழறிஞர் சொக்கலிங்கனார் சிறப்புரை ஆற்றினார். சுப்ரபாரதிமணியன், விஜயா , சமூக ஆர்வலர்கள் மோகன்ராஜ், சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

” சங்ககால இலக்கியங்கள் பெண்களைப் போற்றியிருக்கின்றன.. சங்க காலம் முதல் இன்றைய நவீன இலக்கியங்கள் வரை பெண்கள் நிலையும் வாழ்வும் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது.இலக்கியத்தில் பெண்கள் சார்ந்த முற்போக்கு  எண்ணங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பாரதியார்தான்.  அடுப்பூதும் பெண்கள் என்ற வார்த்தையை மாற்ற முயற்சித்தார். பெண்மையைப் போற்றுவோம் என்றார் ,இல்லாள் என்பது குடும்பப் பெண்ணைக்குறிக்கும். குடும்பத்தைக் காப்பவள் பெண்தான். இதற்கு ஆண் பால் வார்த்தை இல்லாத அளவு சிறப்பு பெற்றது அந்த வார்த்தை . குடும்பம் நன்றாக அமைய இல்லாளீன் பங்கு முக்கியமானது. குடும்பத்து விதை நெல்லாய் விளங்குபவள் பெண் . பெண்மையைப் போற்றுவோம் “ என்றார் . சுப்ரபாரதிமணியன், விஜயா , சமூக ஆர்வலர்கள் மோகன்ராஜ், சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கனவு இலக்கிய வட்டம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

Series Navigationதும்மல்இடம் பெயர்வும் என் நாவல் அனுபவங்களும்