ஞானம்

செ.புனிதஜோதி

உதிர்க்கப்பட்ட சொற்கள்

உணர்வுகளால் பின்னப்பட்ட மாலை…

 

என்

மனக்கருவையில்

உதித்தக் குழந்தை…

 

மோனம் பூத்த வேளையில் மலர்ந்த மலர்…

 

எனக்கு நானே

மொழிபெயர்ப்பு

செய்தாலும்..

மொழியாய்

வரைகிறாய் என்னை…

 

நீ உதிர்க்கும்

சொற்களில்

உயிர்பெறும்

கவிதை..

 

கை,கால் அசைக்கும் கருவாய் உணர்கிறேன்…

 

எழுத வைத்தவனே

நீ தானே மயக்கமுற்றே

உன்னை வடிக்கிறேன்

ஞானவடிவாய்

 

செ.புனிதஜோதி

சென்னை

Series Navigationவீரத்திருமகன்களுக்கு வீரவணக்கம்