நாயுடு மெஸ்

Spread the love

 

 

தண்ணி யடிசசு வந்தா தடாவாமே

அண்ணாச்சி பாக்கிவச்சார் ஆகாரம் மண்ணாச்சு

போய்யா அதுகிடக்கு பாயா கவிச்சிதுண்ண

நாயுடு மெஸ்படி ஏறு..

 

வாசல் எருமைங்க வால்தூக்கு தேவிலகு

ஏசாதே நீமெர்சல் ஆவாதே – ராசால்லே

ஓரமாய் ஆம்லெட்மேல் ஓடுதுபார் மாட்டுஈ

காரம்போர்ட் காய்கணக்கா சுண்டு.

 

ஈமூ கறி’பா எடுத்து ருசிபாரு

ஏமி முளிக்கறே ஏனத்தக் காமி

தயிர்வடை ஓணும்னு தம்பிவந்து நிக்கறான்

அய்ர்ர்வூட்டுப் புள்ள அனுப்பு.

 

(ஈமு Emu – நெருப்புக்கோழி வகை)

 

ஆரிய பவ்வான் அடச்சுத்தான் பூட்னானா

ஏரியா ஓட்டலுங்க எத்தினியோ ஏறினான்

வாம்மான்னு டூட்டியிலே வச்சாக்க கஷ்டமரை

மாமான்னு கூப்ட்றான் மணி.

 

அடுப்பைக் களுவியிடு அம்சமா பொட்டு

இடுப்பு வணங்கு இதுதான் வடுகாத்தா

சும்மாதான் எட்டியேன் பாக்கறான் லேதய்யா

அம்மாசை மெஸ்ஸு அடைப்பு.

 

கம்பூட்டர் வேலை கதைவிட்டே போகுதுபோ

சம்பாத்யம் பய்ஸ்கோப்பில் சல்லிசா அம்புடுமா

ஏசாம என்னபண்ண இந்தா’பா நாஷ்டாடீ

காசுபணம் தீஸ்கோனி ரா.

 

இங்கிலீஸ் போர்ட்வச்சா எஷ்ட்ரா வரியின்னு

தங்கவேல் சொன்னது தப்பாம்’பா – இங்கேயாப்

பாயிலா முட்டைரெண்டு பார்சல்செய் ஜல்திரா

தாயில்தார் சொன்னா சரி.

 

(இங்கேயாப் பாயிலா – இங்கே ஆஃப்பாயிலா; தாயில்தார் – தாசில்தார்)

 

ஒளுங்கா தினம்வந்த ஒய்ட்லக்கான் லாரி

தெலுங்கானா கேட்டதும் காயப் அலுங்காம

தெக்கே இருந்துமிப்போ கோழி வரத்தில்லே

லெக்பீசு கேட்டா ரவுசு.

Series Navigation(79) – நினைவுகளின் சுவட்டில்எனது இலக்கிய அனுபவங்கள் – 19