மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் படைப்பாளர்கள் அன்புச்செல்வன் – சந்திரகாந்தம் ஆகியோருக்கு அஞ்சலிக் கூட்டமும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கமும். 6 ஏப்ரல் 2014 (ஞாயிறு)

anbu

 

அண்மையில் மறைந்த மு. அன்புச்செல்வன், ப.சந்திரகாந்தம் ஆகிய  மலேசியாவின் இரு தலைசிறந்த எழுத்தாளர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்தையும் அவர்கள் படைப்புக்கள் மீதிலான கருத்தரங்கம் ஒன்றையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.30க்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க இல்லத்தில் நடைபெறும்.

 

காலை 9.30க்கு தேநீருடன் நிகழ்வுகள் தொடங்கும். தொடர்ந்து மறைந்த எழுத்தாளர்களுக்கு அவருடைய நண்பர்களும் சக எழுத்தாளர்களும் அஞ்சலி செலுத்துவார்கள்.

(அன்புச்செல்வன்)

அதன் பின் இரண்டு அமர்வுகளில் எழுத்தாளர்களின் படைப்புக்கள் அலசப்படும். முதல் அமர்வில் “சந்திரகாந்தம் படைப்புலகம்” என்னும் தலைப்பில் மலாயாப் பல்கலைக் கழக இணைப் பேராசிரியர் வே.சபாபதி பேசுவார். தொடர்ந்து இரண்டாம் அமர்வில் “அன்புச்செல்வன் படைப்புலகம்” என்னும் தலைப்பில் ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் முனைவர் சேகர் நாராயணன் பேசுவார். அமர்வுகளைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும். பிற்பகல் ஒரு மணி அளவில் மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிவுறும்.

Chandragantham-214x3001

இரு பெரும் எழுத்தாளர்களை நினைவு கூர எழுத்தாளர்களும் வாசகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமாய் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

 

 

 

(சந்திரகாந்தம்)

Series Navigation