கற்பனைக் கால் வலி

author
12
0 minutes, 0 seconds Read
This entry is part 29 of 34 in the series 28அக்டோபர் 2012

டாக்டர். ஜி. ஜான்சன்
அன்று நான் உலு திராம் லண்டன் கிளினிக்கில் பகுதி நேர வேலைக்கு
சென்றிருந்தேன். அதன் உரிமையாளர்  டாக்டர் நித்தியானந்தா  தலைநகரில்
நடைபெறும் மருத்துவ மாநாட்டுக்கு  சென்றிருந்தார்.
எனக்கு அந்த கிளினிக் பிடித்திருந்தது. உலு திராம் பேருந்து
நிலையத்தின் எதிரே அமைந்த கடைகளின் வரிசையில் அது அமைத்திருந்தது. அந்த
சிறு டவுனின்   மையப்பகுதியும் அதுவே எனலாம். அங்கு நிறைய தொழிற்சாலைகள்
இருந்ததால் வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிந்தனர். அவர்களின் வங்காள
தேசிகள்தான் அதிகமானோர். டாக்டர் நித்தியானந்தா டாக்காவில் மருத்துவம்
பயின்றவர். அதனால் அவர்  ஹிந்தியும் உருது மொழியும் சரளமாக பேசுவார்.
இதனால் பல தொழிற்ச்சாலைகளுக்கு இவர் பகுதி நேர டாக்டராகவும் செயல்
பட்டார்.
கிளினிக் கச்சிதமாக வடிவமைக்கப்படிருன்தது .. அதில் பணிபுரிந்த
மூவரும் தமிழ்ப் பெண்கள்
எனக்கு உதவியவள் கமலா. மா நிறத்தில் ஒடிசலான உருவமுடையவள்.
தமிழ், ஆங்கிலம், மலாய் மொழிகளில் சரளமாக பேசுபவள். பம்பரமாக சுழன்று
பல்வேறு வகைகளில் எனக்கு  உதவினாள்.
நோயாளிகளைப் பதியும் பகுதியில் லதா அமர்ந்திருந்தாள். அவள்
நல்ல நிறத்தில் மொழுமொழுவென்று பேசும் பொம்மையை நினைவூட்டினாள்.
நோயாளிகள் வருவதும் போவதுமாக இருந்தனர். மாலையில்தான் சற்று
ஓய்வாக இருந்தது.
அப்போது கமலா என்னை சிகிச்சை அறைக்கு அழைத்தாள். அங்கே ஒரு
விசித்திரம் காத்துள்ளதாகவும்  கூறினாள். நான் அவளைப் பின்தொடர்ந்தேன்.
சக்கர வண்டியில் ஒரு மலாய் மூதாட்டி அமர்ந்திருந்தார். பாஜு
கூரோங் எனும் மலாய் உடை அணிந்திருந்தார்.
” அம்மா, உங்களுக்கு என்ன செய்கிறது? ” என்று மலாய் மொழியில் கேட்டேன்.
என்னை ஏறெடுத்துப் பார்த்த அவர், ” கடுமையான கால் வலி டாக்டர் ” என்றார்.
” எந்த காலில் எத்தனை நாளா வலிக்குது ? ” என்று கேட்டேன்.
” இதே காலில் ஆறு மாதமா வலிக்குது டாக்டர் . ” என்று
சொல்லியவாறே கால்களை மறைத்திருந்த ஆடையைத்  தூக்கினார்.
அவருக்கு ஒரு கால்தான் இருந்தது. இடது காலைக் காணவில்லை.அது
முழங்காலுக்குமேல் துண்டிக்கப்பட்டு தொங்கியது.
” உங்களுக்கு இனிப்பு நீர் வியாதியா? ”
” ஆமாம் டாக்டர். காலை எடுத்து ஒரு வருஷமாவுது. ஆனா இன்னும்
வலிக்குது.” என்று சொன்னவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்.
” அதான் கால் இல்லையே? பின்பு எங்கே வலிக்குது அம்மா? ”
” அந்த கால் இன்னும் இருப்பதுபோல் அங்கேதான் வலிக்குது. நான்
உண்மையை சொன்னால் யாரும் நம்பமாட்டேன் என்கிறார்கள்.” என்று கூறியவாறு
அவரைக் கூட்டி வந்துள்ள மகளைப் பார்த்தார்.
” சரியம்மா. நீங்கள் சொல்வது எனக்குப் புரியுது. இதை சரி
செய்துவிடலாம் கவலை வேண்டாம்.” அவருக்கு ஆறுதல் கூறினேன்.
என் அருகே நின்ற கமலா ஒன்றும் புரியாமல் என்னைப் பார்த்து
விழித்தாள். அதில் லேசான குறும்பு சிரிப்பும் இழையோடியது.
நான் கமலாவுடன் என் அறைக்கு திரும்பினேன்.
” என்னங்க டாக்டர் இது? இல்லாத கால் இன்னும் வலிக்குது
என்கிறாரே? ” கமலாவின் குழப்பம் இன்னும் தீரவில்லை.
” அவர் கூறுவது உண்மைதான் கமலா.இதை கற்பனை கால் வலி என்று
கூறலாம்.அவருடைய கால் துண்டிக்கபட்டபோது நரம்புகள் மூளைக்கு தவறான செய்தி
அனுப்பி அந்த கால் இன்னும் இருப்பதாகவே உணர்த்தியதால், அதுவே உண்மை என்று
மூளை நம்பி வலி உணர்வை இன்னும் தந்து கொண்டிருகிறது.  ” நான்
விளக்கினேன்.
இது கேட்டு வியந்துபோன கமலா, ” இதை எப்படி குணப்படுத்துவது
டாக்டர்? ” எனக் கேட்டாள்.
” வேறு வழியில்லை. வலி குறைக்கும் மாத்திரைகள் தரலாம்.
அத்துடன் துண்டிக்கப்பட்டுள்ள பகுதியின் நரம்புகளுக்கு மசாஜ்  போன்ற
பயிற்சியும் தரலாம். மருத்துவக் கலையில் இதுபோன்ற வினோதமான நிகழ்வுகளும்
இருக்கவே செய்கின்றன!”
நான் சொன்னதைப்  புரிந்துகொன்டவள்போல் தலையை ஆட்டினாள் கமலா.

“““““““““““““““

““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`

“““““““““““““““““““`

Series Navigationபேரரசுவின் திருத்தணிமனிதாபிமானம்!!
author

Similar Posts

12 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    மதிப்பிற்குரிய டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

    இது போன்ற கற்பனைக் கால்வலி யை இப்போது தான் முதன் முதலாகக் கேள்விப் படுகிறேன்.
    அதற்கு தாங்கள் அளித்துள்ள விபரம் ஆச்சரியமாக இருந்தது. இதுவும் சாத்தியமா? என்று எண்ணத் தூண்டியது.
    எத்தனை அறிவியல் முன்னேறி இருந்தாலும் மூளையின் செயல் பாடுகள் அனைத்தும் மனிதனுக்கு எட்டாத அதிசயமே.
    தங்களின் இந்த அனுபவம் எனக்குப் படிக்கும்போது புதுமையானது தான்.

    நன்றி.

    வணக்கத்துடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்

  2. Avatar
    எஸ். பழனிச்சாமி says:

    டாக்டர் ஜி. ஜான்சன் அவர்களுக்கு,
    தாங்கள் எழுதியுள்ள கற்பனை கால்வலி அனுபவம் புதுமையாக இருந்தது. இல்லாததை இருப்பது போலவும், இருப்பதை இல்லாதது போலவும் காட்டுவது மனத்தின் ஒரு வகையான விசித்திரம்தான். அதற்கு தங்களது விளக்கம் விஞ்ஞானபூர்வமாக இருந்தது. நன்றி!

  3. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு, என் சிறுகதையைப் படித்துப் பாராட்டியுள்ளதற்கு நன்றி. நீங்கள் கூறியுள்ளதுபோல் மனிதனின் மூளை விசித்திரமானதுதான். மூளைக்கு நரம்புகள் தகவல்கள் கொண்டுசெல்வதும், அதை மூளை புரிந்துகொண்டு உடனுக்குடன் உறுப்புகளுக்கு செயல்படச் சொல்லி உத்தரவு இடுவதும் வினோதமனதுதான். இந்த வியாதியில் அந்த மூளையே ஏமாந்து போவது இன்னும் விசித்திரமானது!…டாக்டர் ஜி.ஜான்சன்.

  4. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி. மனம் என்பது மூளையின் பிரதிபலிப்பே என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு….டாக்டர் ஜி. ஜான்சன்.

  5. Avatar
    வணிஜெயம் says:

    சிறுகதை என்பது நெத்திலி மீனைப் போன்றது.வடிவில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது ஒரு சிறுகதைகான கூறுகளை கொண்டிருக்க வேண்டும்.அதுபோல கற்பனை கால் வலி சிறியதாக இருப்பினும் சிறப்பாகவே இருந்தது.இரசித்தேன்

  6. Avatar
    Dr.G.Johnson says:

    கதையை ரசித்து பாராட்டியுள்ள வாணி ஜெயம் அவர்களுக்கு நன்றி….டாக்டர். ஜி . ஜான்சன்.

  7. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு டாக்டர் ஜான்சன் அவர்களுக்கு,

    நச்சென்று அழகு தமிழில் ஒரு சிறுகதை. மருத்துவத்தில் எத்தனையோ சுவாரசியமான முடிச்சுகள் உள்ளன. அதனை அழகாக வெளிக்கொணர்ந்துள்ளீர்கள். அருமை ஐயா.

    அன்புடன்
    பவள சங்கரி

  8. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரிஅவர்களே. என் கதையையும் அதற்கு மேலாக என் தமிழையும் அழகு எனக் கூறிய உங்களுக்கு நன்றி! …டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      seethaalakshmi says:

      அன்பு ஜான்
      சிறுகதையில் அரிய செய்தி. தாங்கள் ஒரு மருத்துவர். உணர்வுகளை உள்ளபடி கூற முடிகின்றது. இன்று வாழ்க்கையில் இப்படிப்பட்ட நிலைமையில் ஒருவர் புலம்பினால் பிரமை என்று கேலி செய்வர். பெரியவர்களானாலும் சில அச்சங்கள் தோன்றுவதற்கும் இப்படிப்பட்ட அதிர்ச்சிகள் சிறுவயதில் ஏதாவது ஏற்பட்டிருகலாமோ. இது போன்ற கதைகள் எழுதி எங்களுக்கு ஓர் தேளிவை ஏற்படுத்துங்கள். உங்கள் எழுத்து மலேசியாவுடன் நிற்க வேண்டாம். விஞானக்கதைகள் எழுதும் சக்தி தங்களூக்குண்டு. திண்ணையிலும் உங்கள் எழுத்தைப் பார்க்க விரும்புகின்றேன்
      சீதாலட்சுமி

  9. Avatar
    Ram says:

    இத்துறையில் பத்மபூஷன் வில்லியனூர் ராமச்சந்திரனின் பங்களிப்பு மிகவும் சிறந்தது. அவரது Phantom Limbs என்ற புத்தகம் மிகவும் சுவாரசியமானது. மேலும் அவரது சொற்பொழிவுகள் discovery channel வழியாக youtube ல் கிடைக்கிறது.
    அவரது கண்ணாடி மூலம் மூளையை ஏமாற்றி குணப்படுத்தும் முறை கமலாவிற்கு உதவுமா?
    அதாவது இல்லாத கால் பக்கத்தில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து , உள்ள காலினை ஆட்டும்/இயக்கும் பயிற்சியை செய்தால், நாளடைவில் இந்த வலி மறைவதை அவர் ஆவணப்படுதியுள்ளார்.

  10. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள சீதாலட்சுமி அவர்களுக்கு, வணக்கம். எனது சிறுகதையைப் .பாராட்டி ஊக்கம் தந்துள்ள உங்களின் நல்ல மனதிற்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி….உங்களின் வேண்டுகோளின்படி இனி வெளி உலகம் வலம் வருவேன்….மீண்டும் சந்திப்போம் இந்த அருமையான இலக்கியத் தமிழ் உலகில்!…டாக்டர் ஜி.ஜான்சன்..

  11. Avatar
    Dr.G.Johnson says:

    திரு. ராம் அவர்களின் கருத்துக்கு நன்றி. ஈராக் யுத்தத்தில் இதுபோன்ற ஒரு கால் இழந்துபோன போர் வீரர்களுக்கு கண்ணாடி காட்டி வலியை குறைக்கலாம் என்று டாக்டர் ஜாக் சாவோ எனும் மருத்துவர் கூறி ஈடுபட்டார். இதை ஆராய்ந்து ரோனல்ட் மேட்சக் எனும் மற்றொரு நிபுணர் அங்கீகரித்தார்.அனால் இது எப்படி சாத்தியமாகிறது என்பது இன்னும் புதிராகவே உள்ளது. இந்த கற்பனை கால் வலியை உண்டுபண்ணுவது மூளை. இல்லாத அந்த காலை இருப்பதாக எண்ணி அதை அசைக்க உத்தரவு இடுவதால் இந்த வலி உண்டாகிறது. கண்ணாடியை காட்டி அதே மூளையை தற்காலிகமாக ஏமாற்றி வலி இல்லாமல் செய்யலாம். இந்த முறை பயன் தருவதால் இதையும் செய்து பார்க்கலாம். பத்மபூஷன் வில்லியனூர் டாக்டர் ராமச்சந்திரன் இதைச் செய்து வெற்றி கண்டுள்ளது பாராட்டுதற்குரியது.தகவலுக்கு நன்றி….டாக்டர் ஜி .ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *