ஜெயந்தி சங்கரின் “ திரிந்தலையும் திணைகள்”

This entry is part 23 of 31 in the series 31 மார்ச் 2013

                                             சுப்ரபாரதிமணியன்

 

வேர்களோடு பிடுங்கி தமிழ்ச்சமூகத்தை எங்கும் தனியெ நட்டு விட முடியாது. வாழ்வியலும் உறவுகளூம் தமிழமும், புலம்பெயர்ந்த இடமும் என்று அலைக்கழிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அலைக்கழிப்பை எப்போது தமிழ் சமூகத்திற்கானதாக்க் கொண்டு இயங்கி வருபவர் ஜெயந்தி சங்கர் அவர்கள். சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் ( ஓரளவு மேல் தட்டு வர்க்கம், மத்திய வர்க்கம் ) சமகாலவாழ்வை கூர்ந்து பார்த்து எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து சிங்கப்பூர் இலக்கீயத்தில் தமிழர் வாழ்க்கை பதிவுகளை முக்கியத்துவம் உள்ளதாக்கி இருக்கிறார் என்பது அயலக இலக்கியச் சாதனையில் ஒன்றாகவும் சொல்லலாம்.அவரின் சமீபத்திய இந்த நாவலில் இந்திய சமூகமும், சிங்கப்பூர் சமூகமும் என்று மாதிரிப் பாத்திரங்களைக் கொண்டு இருநாட்டிலும் வாழும்  சாதாரண சமூகங்களின்  படிமங்களைக் காட்டியிருக்கிறார்.. இந்த நாவல்  சாதாரண் மத்தியதரத்து மக்களின் சின்னச் சின்ன கன்வுகளையும், அதை எட்ட முயலும் முயற்சிகளையும் கொஞ்சம் சிதைவுகளையும் காட்டுகிறது.

சுப்பையா, சரவணனின் வீடு பற்றிய கனவுகள்,  ரேணுவின் இரண்டாம் திருமணமாவது சுமூகவாழ்க்கையாக  இருக்கவேண்டிய கனவுகள்,  சரவணன் பத்மாவின் சாதாரண லவுகிய வாழ்க்கைக் கனவுகளைப் பற்றி இந்நாவல் பேசுகிறது.குழந்தைகளின் உலகம் பற்றி அவரின் சிந்தனை தொடர்ந்து அவரின் படிப்புகளில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. அர்ச்சனாவின் இயல்பான உலகமும், நவீனின் உளவியல் ரீதியான முரண்பட்ட உலகமும்  எதிமறை அனுபவங்கள்  கொண்டவை. சரவணன் பத்மா,  ரவி ரேணு வின் உலகங்களிம் மறு பதிப்பானவை.  சகமாணவன் ஸிஹாவ்வின் சேஸ்டைகளின் உலகமும், ரவியின் மனப்பிறழ்வு நடவடிக்கைகளால் அவனது மகன் நவீனின் எதிர் விளைவுகளும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.குழந்தைகளின் உலகம்  போலவே முதியவர்களின் உலகத்தையும் நுணுக்கமாக்க் காட்டுகிறார்.பருத்த உடம்பு கொண்ட அமாட்டின் நடத்தைகள், லீவிங்கீன் மரணம் அதுவும் கொலையில், சுப்பையாவின் சக்கர நாற்காலி வாழ்க்கை என்ப்தாய் விரிந்து கொண்டே இருக்கிறது. வயதானவர்களின் உலகமும் இந்த இளைய தலைமுறையினருடன் ஓடிக் கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு கோவிலுக்குள் வாக்க்கிங் போவதும், பழனி திருவண்ணாமலி என்று  புனித யாத்திரை போவதும் பிடித்திருக்கிறது.ஒரு வகையில் இந்த வித்தியாச உலகத்தைக் காட்ட இவை உப்யோகப்படுத்தப்பட்டுள்ளன.

 

சிங்கப்பூர் நகரின் வளர்ச்சியோடே இவர்களின் வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது.முருகன் கோவில் கட்டப்படுதல், விரிவாக்கத்தில் சிதைபடுகிற இடங்கள், வெள்ள காலம், செம்பவாங் சாலை வளர்ச்சி என்று தொடர்கிறது.எலந்த மரம் பாலசுப்ரம்ணியர் பின்னர் புனித மரம் பாலசுப்ரமணியன் என்று பெயர் மாறி வெள்ளைக்காரனின் பெருந்தன்மையும் காட்டப்படுகிறது.

 

காலம் மெல்லிய நதியாய் நாவல் முழுவது ஒடிக்கொண்டிருகிறது. இந்திராகாந்தி சுடப்பட்ட பள்ளி காலம்.., யிசின் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிசேக விசேசம், முருகனைத்துரத்திவிட்டு   தண்டவாளம் போடும் ஆர்ச்ச்ர்ட் எமார் டிக்க்காலம், தூன்மேரா தில் வேலியா படம் திரையிடல் காலம் என்று நுணுக்கமானக் குறிப்புகளால் நாவலின் காலம் கதையில் கால் பதியாத மனிதனின் ஓட்டம் போல் ஓடிக்கொண்டேயிருக்கிறது.இவை பற்றியக் குறிப்புகள்  நாவலினை காலம்  சார்ந்து நகர்த்திக் கொண்டே இருப்பது முக்கிய அம்சம்.

.

ரவியின் நட்த்தையில் இருக்கும் மனப்பிறழ்வு அம்சங்கள் குடும்பத்தை திடுக்கிடச் செய்கின்றன. அதற்கான காரணங்கள் சரியாக முன் வைக்கப்பட்டிருகிறது.

இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் என்று மாறி மாறி தமிழ்க்குடுமப்ங்களின் வாழ்க்கை பத்மா, ரேணுகா குடுமபங்கள் மட்டுமின்றி கவிதா, ரேவதி, தர்ஷினி, மீனா குடுமபங்களின் வாழ்க்கை முறையாலும் நீள்கிறது.எல்லா மனிதனும் தான் அணைத்துக் கொள்ள நீளும் இடங்களிலெல்லாம் அகப்படுபவர்களைச் சேர்த்துக் கொள்வது போல் இந்த கதாபாத்திரங்கள் வந்து சேர்கின்றன.இந்திய வாழ்க்கை சென்னை என்று மட்டுமில்லாமல் பூனா, பம்பாய்ம் தில்லி என்று காட்டப்படிருகிறது. இந்திய சமூகத்தின் பல்வேறு கலாச்சார நிலைகளையும், மொழி சார்ந்த நிகழ்வுகளையும் முறையாக எடுத்தியம்ப இந்த்  விரிவாக்கம் உதவுகிறது. ஆனால் அரசியல் ரீதியான முனைப்புகளோ நிகழ்வுச் சிதறல்களோ இல்லாமல் இருப்பது தமிழ் சமூகம் அரசியலை புறம் தள்ளி விட்டு வாழ்வைக் கட்டமைப்பது வருத்தமே தருகிறது

இதில் வரும் சீன மனிதர்களும் வாழ்க்கையும் அவரின் சீனப் படைப்புகளின் மீதான அக்கறையும் சீன மொழிபெயர்ப்புப் பணிகளையும் நினைவூட்டுகிறது..சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்கள், சீனக்கோவிலக்ள், சீனர்கள் குணநலன்கள் என்று  சில முக்க்கியப் பதிவுகளையும் இந்நாவலில் கட்டமைத்திருக்கிறார்.

ஜெயந்தி சங்கரின் மொழிபெயர்ப்புப் பணிகளைத் தொடர்ந்து கவனிக்கிறபோது இன்னும் ஆச்சயம் குறையாது. வாழுமிடத்து கலாச்சாரம், நம்பிக்கை, தொன்மம் முதற்கொண்டு பலவற்றை கிரகித்து, மொழிபெயர்த்து அவர் இருப்பை நியாயப்படுத்த அவர் செய்யும் முயற்சிகள் ஆச்சர்யப்பட வைப்பவை. சீன நாடோடிக் கடைகள் முதற்கொண்டு தொன்மக்கதைகள் வரை பல  பாலியல் உவ்வே சமாச்சாரங்களை  மிகவும் எளிமையாக மொழிபெயர்த்து  வரும்   அவரின் மொழிபெயர்ப்பு  உட்பட   நூல்களின் பட்டியல் 25 தொடும் சீக்கிரம். அவரின் கடைசி இரண்டு நாவல்கள் மனப்பிரிகை, குவியம்  சரியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவை..சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையை அவ்வளவு கூர்மையாக அவதானித்து நேர்கோட்டுப்பாணி தவிர்த்த வடிவத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.  அவரின் ” வாழும் புத்தர்  “  என்ற  சமீபத்திய  மொழிபெயர்ப்புக் கதை இப்படி முடிகிறது            “  நிச்சயமாக இவ்வுலகில் தெய்வங்கள் இருக்க முடியாது. ஆனால் முட்டாள்தனத்தினால் எதன் மீதாகிலும்  முக்கிய நம்பிக்கை வைக்கவும்  மனிதன் தெய்வங்களை உருவாக்குகிறான். சக மனிதர்கள்  அவனை வணங்கும் போது தானும் தெய்வம்தான் என்றே  எண்ணத்தலைபடுகிறான்.  தெய்வமாக நடந்து கொள்ளவும்  ஆரம்பிக்கலாம். மனிதர்களும் முன்பை விட அதிகமாக அவனினை நம்பவும் பைத்தியமாக வழிபடவும்  ஆரம்பிக்கலாம். மக்களுக்குக் தெரியாது அவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது. சொல்லப்போனால் தெய்வமாக்கப்பட்டிருக்கும் மனிதனுமே ஏமாற்றப்பட்டிருக்கிறான். ஆனால், காலம் செல்ல அம்மனிதன் வேறு வழியில்லாமல் தெய்வத்தைப்போலவே நடக்க முயற்சிக்க வேண்டியதிருக்கிறது. இது மக்களை மேலும் முட்டாளாக்கும் வேலை. இதே போன்று ஏமாற்று வேலைகளில் பல்லாண்டுகள் கழிந்து போயின.  அவ்வருடங்கள்  அபத்தங்கள்  நிறைந்தவை. அபத்த வருடங்கள் எல்லாம் போனது போனதுதான். அதே மக்களால்தான் வரலாறும் எழுதப்படும் என்பதுதான் மிகவும் வேடிக்கை.”

 

அபத்த உலகம் தான். அபத்த நிகழ்வுகள்தான்.இந்த அபத்த்த் தன்மை நவீன் மிகு வேக வாழ்க்கையில் விரவி விட்டது. “ போக்குவரத்து வசதிகள் மேம்பட்ட வாழ்வில் நிலப்பரபுகளின் எல்லைகள் கலந்து மங்கி மறந்து விட்ட்தில் ஒவ்வொரு தனி மனிதனும் தனியொரு  திணையாகித் திரிவதை உணர்ந்து “ அதை இலக்கியப் படிவமாக்கியிருக்கிறார் ஜெயந்தி சங்கர். மனப்பிரிகை, குவியம் போன்ற  முந்தின நாவல்களில் கட்டமைக்கப்பட்ட நேர்கோட்டு வடிவச் சிதைவு,  பாகங்களின் நிரப்புதலில் டைரிக்குறிப்புகள், குறுஞ்செய்திக்குறிப்புகள், கடிதங்கள் பாணி இதிலில்லாமல்

நேர்கோட்டுப்பாணி கதை கூறலில் இந்திய சமூகம், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதி வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் சுவையாகக் கட்டமைகப்பட்டிருக்கிறது. இந்நாவலில்

 

( ரூ 175, சந்தியா பதிப்பகம், சென்னை )

subrabharathi@gmail.com  / 8-2635 pandian nagar, tiruppur  641 602

Series Navigationநான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………23 சுஜாதா – ‘இரயில் புன்னகை’தாகூரின் கீதப் பாமாலை – 58 தனிமை விளிம்பிலே வனிதை !
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *