This entry is part 16 of 46 in the series 5 ஜூன் 2011

தாளத்துக்கேற்ற நடனம்

வசிய பார்வை

விஷம புன்னகை

மழலை பேச்சு

அடிமை பட்டுக்கிடக்கும்

ஒரு ரசிகனாய்

நீ ரசிக்க

பட்டாம்பூச்சிகளுக்கு வலிக்க வலிக்க

பிடித்துத் தருகிறேன் காதலாய்

கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்க

சிறகில் ஒன்று உடைந்து போகிறது

அருவருப்பாய் தூக்கி எறிகிறாய்

அதிலிருந்த சிவப்பொன்று

என் முகத்தில் தெறிக்க

வண்ணமா ரத்தமா?

பாவத்தின் அச்சத்தோடு

தலையில் கை வைத்தமர்கிறேன்!

சாக துடிக்கும் அப்பூச்சியின்

கன்னங்களை அள்ளி பார்த்திட

அதன் மர்ம புன்னகை

என் முகத்தில் அறைந்து இறக்கிறது..

கண்ணீர் சிலுவையில் நான்!

ரசிகன்

 

Series Navigationமெய்ப்பொருள் காண்ப தறிவுவ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்