This entry is part 20 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

பிறந்தநாள் குழந்தைக்கு
அணிவகுத்து வருகின்றன
கரடி பொம்மைகள்..
கலர் சாக்குகளில்
பொட்டலமாய் முடியிட்ட
முடிச்சைப் பிடித்து
கைபோன திசையெல்லாம்
அசைக்கிறது குழந்தை.

பிய்த்து உதிரும் பெயர் போக
மிச்சமாய் இருக்கும் பொம்மைகளில்
தொற்றி இருக்கும் அட்டையின்
சில பெயர்கள் குழந்தையின்
அம்மாவின் பிரியத்தை
இழந்ததாய் இருக்கின்றன.

அச்சத்தோடும்., கோபத்தோடும்
வெறுப்போடும்., ஆதங்கத்தோடும்
ஒதுக்கப்படும் அவை
பெயர் அட்டை பிய்க்கப்பட்டு
கட்டிலுக்குக் கீழ் இருக்கும்
பழைய பெட்டியில்
அடைக்கலமாகின்றன.
இன்னொரு குழந்தையின்
பிறந்தநாளுக்குப் பயணப்படுவதற்காக.

Series Navigationஇரவுகளின் இலைமறை உயிர்ப்புகள்வாளின்பயணம்