மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நினைவில் வைத்துக் கொள் இதை :
ஆன்மீகச் சிந்தனை மனிதனின்
இயல்பான சுய நினைப்பு ! தங்கக் கட்டிக்கு அதை விற்று விட முடியாது. இன்றைய உலகத்தின் மற்ற செல்வத்தைப் போல் அதைச் சேர்த்துக் குவிக்க இயலாது. செல்வந்தர் தமது ஆன்மீக உணர்வை உதறித் தள்ளி விட்டுத் தமது தங்கக் கட்டிகளை அணைத்துக் கொள்கிறார். அதே சமயத்தில் இளைஞரோ தமது ஆன்மீகச் சிந்தனையைப் புறக்கணித்துச் சுயநலமிகளாய்ச் சிற்றின்பத்தை தேடித் திரிகிறார்.”
கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்)
என் ஆத்மா
எனக்கு உபதே சிக்கும் :
நாக்கும் உதடுகளும்
குரல்வளை நாண்களும்
உரைக் காத
குரல்களுக்குச் செவி சாய்க்கச்
சொல்லிக் கொடுக்கும் !
என் ஆத்மா
உபதே சிக்கும் முன்பு
குழப்ப மான கூக்குரல்
ஒப்பாரி மட்டும் கேட்டேன்
இப்போது
மௌன யுகத்தின்
கூட்டிசைப் பாக்களைக்
கேட்கிறேன் !
புலப்படாப் புதிர்களின்
கீதங்களைக் கேட்கிறேன் !
+++++++++++
என் ஆத்மா போதிக்கும் :
கிண்ணத்தி லிருந்து
ஊற்ற இயலாத மதுவையும்
அழுத்தம் பெறாத
ஒயினையும் குடிக்க
எனக்கு அறிவுரை புகட்டும் !
என் ஆத்மா
உபதே சிக்கும் முன்பு
என் தாகம்
சாம்பல் குவியலில்
ஒளிந்தி ருக்கும் தீப்பொறி
போல் இருந்தது !
ஒரு வாய் நீரில் அணைத்தால்
ஓய்ந்து போகும்
மறைந்த தீப்பொறி போல்
இருந்தது !
+++++++++++
இப்போது என்னிச்சையே
எனது மதுக் கிண்ணம் !
என் பரிவு இதயமே
எனக்கு ஒயின் மது !
என் தனிமைத் துயரே
எனக்குப் போதை தருவது !
எனினும்
இந்த தீராத தாகத்தில்
நித்திய
இன்பம் உள்ளது !
என் ஆத்மா
எனக்கு உபதே சிக்கும் :
மனிதப் பிறவி அல்லாத
மற்ற உயிர்களைத்
தொடு என்று !
நாம் தொடுவ தெல்லாம்
நம் இச்சையின்
ஓர் பாகம் என்று
ஓதிடும் என் ஆத்மா !
(தொடரும்)
+++++++++++++
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 31, 2011)
- பல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி
- அப்பா…! அப்பப்பா…!!
- சொர்க்கமும் நரகமும்
- வண்ணார் சலவை குறிகள்
- ‘யாரோ’ ஒருவருக்காக
- காயகல்பம்
- ஆயுதங்களும், ஊழலும், மனித உரிமை மீறல்களும்
- குரூரமான சொர்க்கம்
- அன்னா ஹசாரே -ஒரு பார்வை
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011
- எது சிரிப்பு? என் சிரிப்பா ?
- புதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்
- பேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….
- கதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா
- மத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி
- ஊடகம் காட்டிய உண்ணாவிரதம்
- National Folklore Support Centre Newsletter September 2011
- முகம்
- வலியது
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6
- எனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)
- அடுத்த பாடல்
- பிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள்
- பிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!
- பீமாதாயி
- புவிமையச் சுழல்வீதியில் சுற்றிக் கருந்துளை ஆராயும் ரஷ்ய வானலை விண்ணோக்கி (Russian Satellite in Geocentric Orbit to Probe Black Holes )
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -3)
- அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்
- குமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு
- பரீக்ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி
- காணாமல் போனவர்கள்
- அவன் …அவள் ..அது ..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)
- எங்கிருக்கிறேன் நான்?
- கருணையாய் ஒரு வாழ்வு
- ஜ்வெல்லோன்
- மானும் கொம்பும்
- திரும்பிப் பார்க்க
- அந்த ஒரு விநாடி
- மன்னிப்பதற்கான கனவு
- சில்லரை
- நிலா மற்றும்..
- காரும் களமும்
- கனவு
- குப்பைத்தொட்டியாய்
- தாகம்
- ஜென் ஒரு புரிதல் பகுதி 9
- சித. சிதம்பரம் அவர்களின் பூம்புகார்க் கவிதைகள் பரப்பும் புதுமணம்
- உன் இரவு
- கனவுகளின் விடியற்காலை
- முன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்
- அசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.