மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து

author
1
0 minutes, 6 seconds Read
This entry is part 8 of 37 in the series 27 நவம்பர் 2011

வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள்
&கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து நிகழ்த்துகலைஞர்களை கௌரவிக்கும்
விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறது.அமரர் சடையன் வாத்தியார் நினைவு
விருது அறுவர்க்கும், அமரர் துரைசாமி வாத்தியார் நினைவு விருது
ஒருவர்க்குமாக ஏழு மூத்த கலைஞர் பெருமக்களுக்கு விருதும் பணமுடிப்பும்
வழங்கப்படவிருக்கிறது.

அவ்வமயம் கவிஞர் கறுத்தடையான் அவர்களின் ஊட்டு கவிதைப்பிரதி
வெளியீடும், தோற்பாவை, கட்டபொம்மலாட்ட, கூத்துக்கலைஞர் அம்மாபேட்டை
கணேசன் அவர்களை குறித்த விதைத்தவசம் என்றவோர் ஆவணப்பட திரையிடலும்,
அண்ணாரது சூர்ப்பனகை கர்வபங்கம் தோற்பாவைக்கூத்தும், களரி
தெருக்கூத்துப்பயிற்சிப்பட்டறை வழங்கும் பாஞ்சாலி சபதம் தெருக்கூத்தும்
நிகழ்த்தப்படவிருக்கிறது.

பேராசிரியர்கள் சே.ராமாநுஜன் செ. ரவீந்திரன், அ. மார்க்ஸ்,தழிழச்சி
தங்கபாண்டியன், எழுத்தாளர் இராசேந்திர சோழன்,நாஞ்சில்நாடன் ஆகியோர்
விழாவை சிறப்பிக்க வருகின்றனர்.மற்றும் எங்கள் பெருமைக்குரிய
வாத்தியார்கள் ஜெயா செல்லப்பன்,மாயவன், ஏகாபுரம் சுப்ரு, கூலிப்பட்டி
சுப்ரமணி ஆகியோரும் வருகை தரவிருக்கிறார்கள். முகநூல் அன்பர்களும்
இவ்விழாவில் பங்குபற்ற அன்புடன் அழைக்கிறேன்.விழா அழைப்பிதழ் தயாரிப்பில்
உள்ளது. பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

இவண்

மு.ஹரிகிருஷ்ணன்

9894605371

9677520060

குறிப்பு:

பெரும் நிதிவேண்டும் இக்காரியத்திற்கு அன்பர்கள் குறைந்தபட்சம் ரூபாய்
ஐநூறு அளவில் கீழ்காணும் வங்கி கணக்கெண்ணிற்கு பணம் அனுப்பி உதவினால் அதை
மணல்வீட்டிற்கான ஐந்தாண்டு சந்தாவாக பதிந்து அவர்களுக்கு வரும் ஜனவரி
முதல் மணல்வீடு இதழ் அனுப்பி வைக்கப்படும். அத்துடன் விதைத்தவசம் ஆவணப்பட
வட்டும் ஒரு பிரதி உண்டு.

kalari heritage and charitable trust

,a\c.no.31467515260

sb-account

state bank of india

mecheri branch

branch code-12786.

ifsc code-SBIN0012786

MICRCODE-636002023

Series Navigationபகிரண்ட வெளியில்…இதயத்தின் தோற்றம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    பெ. பழனிவேல் says:

    ஐயா. வணக்கம். மணல்வீடு சந்தாதாரராகவிரும்புகிறேன்….கலைஞர்களின் கலையுனர்வை மேலும் மேலும் அறிந்து கொள்ள பயனுள்ள வகையில் இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்….. நன்றி.. விலாசம் -பெ. பழனிவேல் , தமிழாசிரியர், க. எண் 66,மதுரைவீரன்நகர்,சீலநாயக்கன்பட்டி,சேலம்-636201கைபேசிஎண்:9944499268.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *