‘கனவு மெய்ப்பட வேண்டும்’ – துபாய் ‘அமீரகத் தமிழ் மன்றத்தின்’ பெண்கள் விழா

‘கனவு மெய்ப்பட வேண்டும்’ – துபாய் ‘அமீரகத் தமிழ் மன்றத்தின்’ பெண்கள் விழா

கணினியில் தமிழைப் பரப்புவதை இலட்சியமாகக்கொண்டு கடந்த 12 ஆண்டுகளாக துபாயில் இயங்கி வரும் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் `கனவு மெய்ப்பட வேண்டும்` என்ற தலைப்பில் வெகு சிறப்பாக துபாய் ஸ்டார் இண்டர் நேஷனல் பள்ளிக்கூட வளாக…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.

(கட்டுரை : 80) (Newfound Exoplanet may turn to dust) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     உப்பி விரியும் பிரபஞ்சத்தில் புதிய பூமியைத் தேடுது கெப்ளர் விண்ணோக்கி ! நுண்ணோக்கி ஒளிக்கருவி விண்மீன்…

இரண்டு குறும்படங்கள்

யூ டியூப்பில் அருமையான குறும்படங்கள் காணக்கிடைக்கின்றன. நல்ல நடிப்பு, துல்லிய ஒளிப்பதிவு என அமர்க்களப்படுத்துகின்றன அவைகள். சில காதலில் சொதப்பும் ரகம். சில பிரச்சார நெடி. இனி நான் பார்த்த இரண்டு குறும்படங்கள் பற்றிய எனது பார்வை. ஹரியின் “ 1680…

பிரேன் நிசாரின் “ இஷ்டம் “

முதலில் ஒன்று சொல்லியாக வேண்டும். விமலுக்கு இந்தப் படத்தில் தொள தொள பேண்ட் இல்லை. அழுக்குச் சட்டை இல்லை. சார்லி சாப்ளின் நடை இல்லை. ஆள் மாநிறத்திலிருந்து, சிகப்புக்கு மாறி இருக்கிறார். வரவேற்கத்தக்க மாற்றம். கதாநாயகி நிஷா அகர்வால், காஜல் அகர்வாலின்…

கொல்கத்தா தமிழ் மன்றத்தில் மலேசியத் தமிழ் இலக்கிய அறிமுகக் கருத்தரங்கு

(கே.எஸ்.செண்பகவள்ளி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியக் கருத்தரங்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.பெ.இராஜேந்திரனின் அரிய முயற்சியில் இந்தியாவிலே மிகவும் தொன்மை வாய்ந்த நகரமும், முதலாவது தலைநகரமுமான கொல்கத்தாவில் மிகவும் சிறப்பாக நடந்தது.…
துருக்கி பயணம்-3

துருக்கி பயணம்-3

  அண்ட்டால்யா - கொன்யா - கப்படோஸ் - நாகரத்தினம் கிருஷ்ணா மார்ச்-28 காலை 7.30க்கு பேருந்தில் இருக்கவேண்டுமென சொல்லப்பட்டிருந்தது. எங்கே உறங்கினாலும் இரவு எத்தனை மணிக்கு உறங்கப்போனாலும் அதிகாலை நான்கு மணிக்கு முன்பாக விழித்துக்கொள்வதென்பது பள்ளிவயதிலிருந்தே பழகிப்போனது. விழித்துக்கொண்டபோதும் அறையில்…

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 27

30. நள்ளிரவைக் கடந்து மூன்று சாமங்கள் கழிந்திருக்கலாம். செண்பகம் மொட்டைமாடியில் உறங்காமல் குட்டிபோட்ட பூனைபோல உலாத்தினாள். குளிர்ந்தகாற்றுடன் கரிய இருளும் உடலைத் தொட்டுக் கடந்து சென்றாலும் மனதைபோலவே உடலும் அனலாய்க் கொதித்தது. கவிழ்ந்திருந்த வானத்தில் நட்சத்திரங்கள்கூட மெருகு குலைந்த கற்கள்போல பொலிவிழந்திருந்தன.…

ஆவணப்படம்: முதுமையில் தனிமை

சீனாவில் தற்போதைய மக்கள் தொகையில் 32 மில்லியன் பையன்கள் பெண்களைவிட அதிகமாக ( இருபது வயதிற்குட்பட்டவர்களில்) அதிர்ச்சியைத் தருகிறது. கருச்சிதைவும், குழந்தைகளின் வளர்ப்புச் சிரமங்களும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. திருமண வயதையொட்டிய ஆண்களின் பெண் தேடலில் இது சிக்கல்களை…

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றொன்று

1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை சாயந்திர வெய்யில் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப் புறத்துக்கு அலாதியான சோபையைக் கொடுத்திருந்தது. ஊர்ந்து கொண்டிருக்கிற டிராம்களில் இருந்து குதித்து ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் பாய்ந்து கொண்டிருந்தவர்கள் முகத்தில் அலாதியான மகிழ்ச்சி இருந்ததாக…

பஞ்சதந்திரம் தொடர் 45

பொன் தந்த பாம்பு ஒரு ஊரில் ஒரு பிராம்மணன் இருந்தான். உழுவதே அவன் தொழில். அதில் ஆதாயம் ஒன்றும் அவனுக்குக் கிடைக்காமல் இருந்து வந்தது. ஒருநாள், கோடைக்கால முடிவில், வெய்யில் தாங்க முடியாமல் அவன் தன் வயல் மத்தியிலே ஒரு மரத்தின்…