நிம்மதி தேடி

author
14
0 minutes, 0 seconds Read
This entry is part 25 of 31 in the series 4 நவம்பர் 2012

மு.கோபி சரபோஜி
செருப்பை
எங்கு மறைவாய் வைப்பது?

அர்ச்சனையை

யார் பெயருக்கு செய்வது?

உடைக்க வாங்கிய தேங்காய்
எப்படி இருக்கப்போகிறது?

தட்டோடு நிற்பவர்களுக்கு தர
எவ்வளவு சில்லரை இருக்கிறது?

இப்படியான குழப்பங்களோடு
நிம்மதி தேடி
சந்நிதி நுழைந்ததும்
அர்ச்சகரின் குரல் ஒழித்தது

“நடை சாத்தி
நாழியாயிற்று” – என்று!

மு.கோபி சரபோஜி
சிங்கப்பூர்.
Series Navigationஉல(தி)ராத காயங்கள்வாழ நினைத்தால்… வீழலாம்…!
author

Similar Posts

14 Comments

 1. Avatar
  Kavya says:

  Overlooking spelling mistakes, we can proceed to go to the climax.

  கிளைமாக்ஸ் என்ன‌தான் சொல்கிற‌து? இக‌ப‌ர‌ எண்ண‌ங்க‌ளை இறைவ‌ன் வெறுத்தானென்றா? அஃதை அர்ச்ச‌க‌ர் மூல‌ம் ந‌க்கலாக‌ச் சொல்கின்றானா இறைவ‌ன்?

  இல்லை க‌விஞ‌ர்தான் ந‌ம் க‌வ‌ன‌த்தை தன்வசப்படுத்தும் அச்சிந்த‌னைக‌ள் த‌வ‌றென்கிறாரா? ச‌ரி, அவை எப்ப‌டித்த‌வ‌றாகும்?

  ஆன்மிக‌ம் இருவ‌கை: ஒன்று ஞானிக‌ளுக்கு; ம‌ற்றொன்று கிர‌ஹ‌ஸ்த‌வ‌ர்க‌ளுக்கு. வாழ்வுட‌ன் இண‌ந்த‌தே ந‌ம் ஆன்மிக‌ம்; இறைவ‌ழிபாடு.

  கோயிலென்ப‌து அதைச்சுற்றி ம‌தில்க‌ளை எழுப்பி உள்ளிருக்கும் கோடிபெறும் ந‌கைக‌ளை திருட‌ர்க‌ள் கொள்ளைய‌டிக்காம‌ல் செய்வ‌தும் ஆகும். (திரும‌ங்கையாழ்வார் திருவ‌ர‌ங்க‌மட‌த்துத் த‌லைவ‌ரான‌ பின் செய்த‌ முதற்கைங்கர்யமிது. அவ‌ர்க‌ட்டிய‌ ம‌தில்க‌ளால் அக்கோயில் பிழைத்த‌து. இன்னும் அவை இருக்கின்ற‌ன‌!) அத‌ற்குப்பின்தான் அர்ச்ச‌னை. கொத்தனார்தான் முதலில் வேண்டும் கோயிலைக்கட்ட‌. கட்டக்கடைசியில் அர்ச்சகர் வருவார்.

  இறைவ‌ன் ஒன்றும் க‌ட்ட‌ளைக‌ள், க‌ண்டிச‌ன்க‌ள் போட‌வில்லை. நாமே வெறும் க‌ற்பனை ப‌ண்ணுகிறோம். அக்க‌ற்ப‌னைய‌த்தான் இக்க‌விதை சொல்கிற‌து.

  க‌வ‌னம் கொள்க‌: கோயில் திருவிழாவில் சாமியைப்பார்த்து நீங்க‌ள் ப‌ர‌வ‌ச‌ப்ப‌டும்போது உங்க‌ள் த‌ங்க‌ச்செயின் ப‌றி போகலாம். “Trust in God, but tie up your caravan” அல்லாதான் க‌ட‌வுள் என்று முதலில் ப‌றைந்த‌ அராபிய‌ர்க‌ளின் முதுமொழி.

  ச‌ரி, அப்ப‌டியெல்லாமில்லாம‌ல் நான் நிம்ம‌தி தேடிச்செல்கையில் என் த‌ங்க‌ச்ச‌ங்கிலி ப‌றிப்போய்விடுமே! என் புதுச்செருப்பு காணாம‌ல் போய் விடுமே ! வாங்கிய‌ தேங்காய் ந‌ல்ல‌தாக‌ இருக்க‌வேண்டுமே !! என்ற‌ சிந்த‌னைக‌ள் உம்மை வ‌தைத்து ச‌ந்நிதியின் இறைவ‌ண‌க்க‌ம் செய்வ‌த‌ற்கு இட‌ராக‌ இருக்குமென‌ நீர் நினைத்தால், என்னைப்போல‌ போகும்: நாலுமுழ‌ வேட்டி, வெறுங்கால். ம‌டியில் க‌ண‌மில்லை. ம‌னதும் வெற்றிட‌ம். இறைவ‌ன் வ‌ந்து போக‌ ஃப்ரீ ஸ்பேஸ் ரொம்ப‌ங்காணும். ஒருவேளை, என் க‌டைசி வ‌ரியைத்தான் இக்க‌விதை ம‌றைமுக‌மாக‌ச் சொல்கிற‌தோ. அப்ப‌டியெனில் ஒரு ச‌பாஷ் !

  1. Avatar
   மு.கோபி சரபோஜி says:

   கருத்துக்கு நன்றி…..கேள்விகளே அற்ற வெற்று மனத்தோடு இறைவனை வழிபடத்தான் ஆலயம் செல்கிறோம்.அத்தகைய வழிபாட்டின் மூலம் மட்டுமே கொஞ்சம் நிம்மதி கிடைத்த மனநிலையை பெற முடியும்.ஆனால்,ஆலயம் நுழைவதற்கு முன் வராத சிந்தனைகள் அங்கு நுழைந்தவுடன் வந்து விடுவதால் கேள்விகளால் நம்மை நிரப்பிக் கொண்டு இறைவனை காண வருகிறோம்.அப்படியான சமயங்களில் இறை பக்தி அங்கு முழுமையற்றதாகி விடுகிறது.அப்புறம் ”ஆலயம் சென்றும் நிம்மதி இல்லை” என்று குறைபட்டுக் கொள்கின்றோம்.இப்படியான மன நிலையோடு இறைவனை காண வருவதில் ,வழிபட வருவதில் எந்த பயனுமில்லை என்பதைக் குறிக்கும் அடையாளமாகத் தான் கடைசி வரியை அர்ச்சகர் சொல்வதாய் அமைத்துள்ளேன்.

   1. Avatar
    Kavya says:

    எதற்கு கோயிலுக்குப் போகிறோம் என்பதுதான் இங்கு பிர்ச்சினை. நிம்மதி தேடி என்பது பொதுவான கருத்து. அந்த நிம்மதி நம் வாழ்க்கையின் கேட்கப்படவேண்டிய எதிர்நோக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை – சிறியவையோ, பெரியவையோ – எதிர் நோக்கஞ்சி கோயிலுக்கு ஓடி அவையில்லா உலகில் சஞ்சரித்து இறைவனை வணங்கிப்பெற முடியாது. ஒரு பொய்யை உருவாக்கினால் இறைவணக்கம் சாத்தியாமாகுமென்கிறீர்கள். இல்லையா? இஃது எப்படி ஆன்மிகமாகும்? இஃது எப்படி பகதியாகும்? இதை ஞானிகள் கண்டித்திருக்கின்றனர். இறைவனையும் வாழ்க்கையையும் பிரிக்கின்றீர்கள். ஒரு பொய்யான உலகைச் சிருஸ்டித்து அங்கு உங்கள் இறைவனை வரவேற்கத்துடிக்கிறீர்கள். இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆத்திக‌ர்க‌ள் வெறுக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். இவ‌ர்க‌ளை நாத்திக‌ர்க‌ளும் ப‌ரிகாச‌ம் பண்ணினால் த‌வ‌றில்லை. சான்டி வ‌ந்து நியு யார்க் ம‌க்க‌ளை பாடாய்ப்ப‌டுத்த‌ ம‌ர‌த்தான் ந‌ட‌த்த‌ வேண்டுமென்ற‌ நிலை. அந்ந‌க‌ர‌ மக்க‌ள்ப‌டும் இவ்வேத‌னைக்கிடையில் ம‌ர‌த்தான் என்ற‌ கேளிக்கை தேவையா? என்று ம‌ர‌த்தான் கைவிட‌ப்ப‌ட்ட‌து.

    இதுதான் இங்கே. கோயிலுக்கு வெளியே சாக்க‌டை ஓடுகிற‌து. கொசுக்க‌ள் மேய்கின்ற‌ன‌. அக்கொசுக்க‌ளால் டெங்கு ப‌ர‌வுகிற‌து. நீங்க‌ள் போய் க‌ண்ணை மூடி இறைவ‌னைத் தியானித்தால் எப்ப‌டி? தாயையும் த‌க‌ப்ப‌னையும் ப‌ட்டினி போட்டுவிட்டு அல்லாவையோ இயேசுவையையோ முருக‌னையோ வ‌ண‌ங்க‌ முடியாது. அஃது இறைவ‌ண‌க்க‌ம‌ன்று. இறை நிந்த‌னையே.

    கோயிலுக்கு வெளியே போட்ட‌ செருப்பு காணாம‌ல் போய்விடுமே? அர்ச்ச‌க‌ருக்கு கொடுக்க‌ ப‌ண‌மில்லையே? தேங்காய் நல்ல‌ தேங்காயா ? என்ற‌ கேள்விக‌ள் ச‌ன்ன‌தியில் நிற்கும்போது வ‌ந்தால் த‌வ‌றொன்றுமில்லை. இறைவ‌ன் உங்க‌ளைத்த‌ண்டிக்க‌ப் போவ‌தில்லை.
    இறைவ‌ன் இப்ப‌டிச்சொல்வ‌தாக‌ க‌ற்ப‌னை ப‌ண்ணிக்கொள்ளுங்க‌ள்; அல்ல‌து நானே சொல்வ‌தாக‌ எடுத்துக்கொள்ள‌லாம்:

    செருப்பைக் க‌ண்ட‌யிட‌த்தில் க‌ழ‌ற்றி வைக்காம‌ல் காசுகொடுத்து வைக்குமிட‌த்தில் வையுங்க‌ள்; அப்ப‌டியிட‌மில்லாவிட்டால் தேங்காய் க‌டைக்கார‌ரிட‌ம் கொஞ்ச‌ம் காசுகொடுத்தால் பார்த்துக்கொள்வார்.

    அர்ச்ச‌க‌ருக்குக் காசு கொடுக்க‌ வேண்டுமென‌க் க‌ட்டாய‌மில்லாத‌தால் அஃதொன்றும் பிர‌ச்சினையில்லை. அப்ப‌டியே நீங்க‌ள் விரும்பினால், வீட்டிலிருன்து செல்லும்போதே எடுத்துச்செல்லுங்க‌ள்.

    இப்ப‌டியாக‌ உங்க‌ள் பிர‌ச்சினைக‌ளைத் தீர்க்க‌ முடியும். தீர்த்த‌ பின்ன‌ர் லேசான‌ ம‌ன‌தில் கோயிலுக்குப் போக‌லாம். தீர்க்க‌ முடியாப்பிர‌ச்சினைக‌ள் வேறு. அவையே உங்க‌ள் பிரார்த்த‌னைக‌ள் இறைவ‌ன் முன். அவ‌ற்றைப்ப‌ற்றி உங்க‌ள் க‌விதை பேச‌வில்லை.

    Urgency and God are anti thetical. God can wait for u till u come. Resolve your trivial problems first however long it will take to do so. W/o doing that, dont go to temple and then, blame yourself in a poem.

    1. Avatar
     மு.கோபி சரபோஜி says:

     தனி மனித தீர்வுகளுக்கு ஒருவன் ஆலயம் வரும் போதும், இறைவனை நாடும் போதும் தான் நீங்கள் சொல்வது போல ”நிம்மதி”என்பது அளவுகோலாக இருக்கும். அதுவும் கூட எந்த மனிதனும் தீர்வு கேட்டு வருவதில்லை.அப்படி நினைப்பது ஒரு மாயை. அல்லது அவரவர் நம்பிக்கை. ஒரு தனி மனிதனின் பிரச்ச்னைகளை,எண்ண உணர்வுகளை இன்று காது கொடுத்து கேட்பதற்கு எந்த சக மனிதனும் தயராக இல்லை. தன் பிரச்சனையை எந்த வித எதிர்ப்புமின்றி காது கொடுத்து கேட்கும் ஒரு நண்பனை நாடி வருவதைப் போல தான் இறைவனை நாடி வருகிறான்.தன் பிரச்சனையை முழுமையாக பகிர்ந்து கொண்ட பின் அவனுக்குள் ஏற்படுகின்ற ஒரு வகையான அமைதியை தான் ”நிம்மதி” என்று நம்புகின்றான். எந்த நிலையிலும் கடவுளிடம் இருந்து தீர்வுகள் கிடைப்பதில்லை என்ற போதும் அத்தகைய ஒரு பகிர்தலுக்கு பின் அந்த பிரச்சனைக்கான தீர்வை சுயமாகவே கண்டறிந்து கொள்வதற்கான ஒரு தெளிவு அவனுக்கு கிடைக்கிறது. தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஒருவர் கிடைக்கும் போது அவன் இறைவனை நாடுவதில்லை.
     //சான்டி வ‌ந்து நியு யார்க் ம‌க்க‌ளை பாடாய்ப்ப‌டுத்த‌ ம‌ர‌த்தான் ந‌ட‌த்த‌ வேண்டுமென்ற‌ நிலை. அந்ந‌க‌ர‌ மக்க‌ள்ப‌டும் இவ்வேத‌னைக்கிடையில் ம‌ர‌த்தான் என்ற‌ கேளிக்கை தேவையா? என்று ம‌ர‌த்தான் கைவிட‌ப்ப‌ட்ட‌து.
     இதுதான் இங்கே// என்பது சரியானதல்ல என்று நினைக்கிறேன்.ஒரு வருட தீபாவளியன்று கையில் பட்டாசு வெடித்து விட்டது என்பதற்காக தீபாவளியே வேண்டாம் என்பது சரியானதா?அதுபோல தான் சில விசயங்களை சரிசெய்து கொள்ள முடியாது, சில முறகளை பின்பற்ற முடியாது என்பதற்காக ஆலயம் செல்லவே வேண்டாம் என்பது சரியல்லவே?
     //கோயிலுக்கு வெளியே சாக்க‌டை ஓடுகிற‌து. கொசுக்க‌ள் மேய்கின்ற‌ன‌. அக்கொசுக்க‌ளால் டெங்கு ப‌ர‌வுகிற‌து. நீங்க‌ள் போய் க‌ண்ணை மூடி இறைவ‌னைத் தியானித்தால் எப்ப‌டி? தாயையும் த‌க‌ப்ப‌னையும் ப‌ட்டினி போட்டுவிட்டு அல்லாவையோ இயேசுவையையோ முருக‌னையோ வ‌ண‌ங்க‌ முடியாது. அஃது இறைவ‌ண‌க்க‌ம‌ன்று. இறை நிந்த‌னையே//என்கிறீர்கள். இது ஒரு பொது பிரச்சனை. இதற்கு தீர்வு தேடி மனிதன் ஒரு போதும் இறைவனை நாடுவதில்லை.ஏனென்றால் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பலர் ஒன்று கூடுகிறார்கள்.பிரச்சனை பகிர்வு அங்கு சாத்தியமாகிறது.
     தவறுக்கு இறைவன் நம்மை தண்டிக்கப் போவதில்லை.ஆனால், அது நடந்து விடும் போது மனிதன் தன்னைத்தானே வருத்திக் கொள்கின்றான்.கவலையடைகிறான்.அதன் பின் ஆலயம் வந்ததன் நோக்கமே மாறி விடுகிறது.
     தீர்க்க முடியாத பிரச்சனைகள் இறைவனிடம் பிரார்த்திப்பதால் தீர்ந்து விடுவதில்லை.பின் எதற்கு பிரார்த்தனை எனலாம்? ஒரு கல்லை புரட்ட நம்மை சாராத சிலரின் கை பலம் தேவை படுவதைப் போல நம்பிக்கை உடையவர்கள் இறைவனிடமும் ஒரு கை பலம் கேட்கிறார்கள்.நம்பிக்கையற்றவர்கள் கேட்பதில்லை.

  2. Avatar
   ஜெயஸ்ரீ ஷங்கர். says:

   அன்பின் திரு. மு.கோபி சரபோஜி ,

   /////என்னைப்போல‌ போகும்: நாலுமுழ‌ வேட்டி, வெறுங்கால். ம‌டியில் க‌ண‌மில்லை. ம‌னதும் வெற்றிட‌ம். இறைவ‌ன் வ‌ந்து போக‌ ஃப்ரீ ஸ்பேஸ் ரொம்ப‌ங்காணும். ///

   அட.ஆச்சரியமாயிருக்கே…! எந்த ஊர் கோவிலில் இப்படி ஒரு அர்ச்சகர் இருக்கார்.?
   வெறும் நாலுமுல வேட்டி; வெறுஙகையென்றால் அர்ச்சகரே நும்பக்கம் திரும்பிப்பார்க்க மாட்டரெனப்தையும் நினைவிற்கொள்க ! ஞானிகள் அவர்கள் காலத்தில் மதிக்கப்படுவதில்லை.///// இது சரி தான்.

   கோவிலுக்குள் செல்லும்போது செருப்போடு சேர்ந்து கோவில் வாசலில கவலை மனதையும் கழட்டி வைத்து விட்டு பக்தி சிந்தனையோடு உள்ளே சென்றால் போதும்…நடை சார்த்தி இருந்தாலும்
   அந்தக் கவலை சிறிதுமின்றி இறைவனை உணரலாம். இல்லாத பட்சத்தில் இந்த கவிதை சொல்வது தான் நடக்கும். சிந்திக்க வைத்த நல்ல கவிதை. மிக்க நன்றி.

   ஜெயஸ்ரீ ஷங்கர்.

   1. Avatar
    மு.கோபி சரபோஜி says:

    உங்கள் கருத்துக்கு நன்றி..ஜெயஸ்ரீ ஷங்கர்.

 2. Avatar
  Kavya says:

  வெறும் நாலுமுல வேட்டி; வெறுஙகையென்றால் அர்ச்சகரே நும்பக்கம் திரும்பிப்பார்க்க மாட்டரெனப்தையும் நினைவிற்கொள்க ! ஞானிகள் அவர்கள் காலத்தில் மதிக்கப்படுவதில்லை.

  1. Avatar
   மு.கோபி சரபோஜி says:

   இறை வழிபாட்டில் சில விசயங்கள் முறைப்படி நடக்க வேண்டும். அதை நடத்து வதற்கு தான் அர்ச்சகர்……அவர் நம்மை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.இந்த மனநிலையால் தான் பல ஆலயங்களில் இறைவனை விட மேலானவராக அர்ச்சகர் பார்க்கப் படுகிறார்.ஞானிகளாகவும் வேண்டாம்,ஆடம்பரமாகவும் வேண்டாம்…..ஒரு சாதாரண பக்தனாக என்னிடம் வா…இது தான் இறை வழிபாட்டின் மையம். இதை உணர்ந்து ஆலயம் சென்று அவனடி தொழுதலே சிறப்பு…

   1. Avatar
    K A V Y A says:

    உங்கள் கவிதை இதைச்சொல்லவேயில்லை. U r making homilies apart from your poem, I am afraid.

    மேலும் உங்கள் கவிதையின் தாக்கத்தை எழுதுகிறேன். பின்னர்.

    But why dont others write to say what all this poem about?

 3. Avatar
  K A V Y A says:

  //கோவிலுக்குள் செல்லும்போது செருப்போடு சேர்ந்து கோவில் வாசலில கவலை மனதையும் கழட்டி வைத்து விட்டு பக்தி சிந்தனையோடு உள்ளே சென்றால் போதும்…நடை சார்த்தி இருந்தாலும்
  அந்தக் கவலை சிறிதுமின்றி இறைவனை உணரலாம். இல்லாத பட்சத்தில் இந்த கவிதை சொல்வது தான் நடக்கும்// Written by Jayashree Shankar. Exactly what I am targetting at.

  இதுதான் என்னால் விமர்சிக்கப்படுகிறது. கவலையையும் மனதையையும் கழற்றி வைக்கவே முடியாது. அப்படிக் கழற்றிவைத்ததாக ஒரு பாவ்லா பண்ணலாம். அந்தப் பாவ்லாவை பக்தி என்கிறீர்கள். மேலும் இறைவனையே மிகவும் மட்டமாக எடை போடுகிறீர்கள். இறைவன் உங்களை கவலையையும் மனதையையும் கழற்றி வைத்து விட்டு வாவென்று சொன்னதாக நீங்கள் நினைத்தால், அஃது உங்களை என்றுமே உண்மையான பக்திக்குக் கொண்டு செல்லாது. எல்லாமே போலி உங்களைப்பொறுத்தவரை என்பதுதான் என் வாதம். அப்போலியை ஒரு கவிதையாகச் சொல்கிறார்.

  கவலைகள் இருந்தால் அவற்றோடேயே செல்லுங்கள் இறைவன் முன். வெட்கமேன்? இறைவன் உங்களை, கவலையோடு வராதே அல்பம்! உன்னை நிராகரிக்கிறேன் பார் !! என்று சொன்னால் அப்படிச்சொல்பவ்ரே இறைவன் என்று நீங்கள் கருதினால், I am sorry I dont agree with such a concept of God.

  The poem spreads a false value and calls it bakti. God cant be separated from our personal life. An individual lives with the consciousness of a God and therefore, the God that abides in temples is not a Being different from the One within him; or in his consciousness. Temples were built not to upset your God but to replicate it there as a convenience. Your consciousness is always with you. How is it possible for you to completely disrobe yourself and stand naked before God ? For you, as a grahastha. For Gnani, the expectations are different. The poem is for not gnanis. That is the only small bit of truth in this poem for which a small congrats to the poet !

  A poet ought to be a deep thinker. If not, his or her poems will be frivolous like the ones written by adolescent boys to their fancied girls.

 4. Avatar
  Ram says:

  கவலைகளும் rilative தானே.. இந்த சிறு கவலைகளே (காலணி முதலியன) மற்றவற்றை மறக்க வைக்க முடியுமெனின் உங்கள் நிம்மதியின் தேவை சிறியதாகவே இருக்கும். அதற்கு ஆண்டவன் வரை செல்ல வேண்டுமா? ஒரு நல்ல படம் ஓடும் சினிமா தியேட்டரோ , அமைதியான பூங்கவோ போதுமே?

  1. Avatar
   மு.கோபி சரபோஜி says:

   ராம்…எதை தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் விருப்பம்…..ஆலயம், தியேட்டர், பூங்கா மூன்றுமே பொது இடம் தான்.ஆனால்,மூன்றும் பல விதங்களில் வித்தியாச படுகிறது…..ஒரு குழந்தைக்கு சாக்லேட்டும், இன்னொரு குழந்தைக்கு பிஸ்கட்டும் பிடிப்பதில்லையா?

 5. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர். says:

  இன்று காலை கூட சிதம்பரத்திலிருந்து கிளம்பி திருவஹிந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலுக்குச் செல்ல முடிவு செய்து கிளம்பினேன். பஸ்ஸை ப் பிடித்து கிளம்பி கோவிலுக்குச் சென்று சேந்து உள்ளே நுழைந்ததும்…அர்ச்சகர் சொல்கிறார்….நடை சார்த்தியாச்சு. இனி நாலு மணிக்குத் தான் நடை திறக்கும் என்று.

  இவர் எழுதிய இந்தக் கவிதை தான் நினைவுக்கு வந்தது.

  அமைதியாக வெளிப் பிரகாரத்தை சுற்றி வந்து சிறிது நேரம் அமர்ந்து விட்டு கிளம்பிவிட்டேன்.

  கோவிலுக்குள் இருந்ததே மனதுக்கு நிம்மதி தான்.

  இறைவன் இருப்பது கோவிலில் இல்லை…அது ஒவ்வொருவரின் இதயத்தில் தான்….நம் இதயம் தான் இறைவன் வசிக்கும் வீடு…இதெல்லாம் புரிந்தும்…கோவிலுக்குச் சென்று அந்த சாநித்தியத்தில் கிடைக்கும் அலாதி உணர்வை ஓரிடத்தில் இருந்து கொண்டு நானே கடவுள்…என்பதில் கிடைக்காது.

  கவிதையில் ரொம்ப யதார்த்தமான ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்.

  1. Avatar
   K A V Y A says:

   I strongly object to the penultimate para, denigrating the very purpose of building temples. But I dont want to write on it. Instead, only this:

   மன்னிக்கவும் தாயே. என்னைச் சிரிக்க வைத்துவிட்டீர்கள். அவர் கவிதை அவர் கோயில் நேரத்தைத் தெரியாமல் போய் நடை சாத்தியிருந்து ஏமாறினார் என்று சொல்லவில்லை. நடை சாத்தியதற்கும் அவர் குழப்பங்களுக்கும் தொடர்பேயில்லை. நீங்களோ ஒரு கோயிலுக்கு – அதுவும் ஒரு திவ்யதேசத்திற்கு – அதன் வழிபாட்டு நேரங்களையறியாமல் சென்று நடை சாத்தியிருந்ததை என்னவோ அவர்கள் தப்பென்ற மாதிரியும் அத்தப்பையும் நான் வென்று விடுவேனாக்கும் என்று ஓரமாக உட்கார்ந்து வீடு திரும்பியிருக்கிறீர்கள். எதார்த்தமான கவிதையன்று; ஒரு சென்சேஷனல் கவிதை மட்டுமே.

   ஒன்றுக்கொன்று தொடர்பில்லா சம்பவங்கள். தங்கள் தங்கள் செய்த தவறுகளை சாமி மீதும் கோயில் மீதும் போடும் வாழ்க்கை முறைகள். என்ன செயவது? எவர்தான் தன் குறைகளை ஒத்துக்கொள்வார்?

   கோயிலுக்குப் போவதற்குமுன், அக்கோயிலின் சில அடிப்படை விடயங்களைத் தெரிந்து கொள்வது நன்று: எ.கா நடை திறந்திருக்கும் நேரம்; அக்கோயிலின் விசேட வழிமுறைகள் (சில கோயில்களில் மேலாடை ஆண்கள் அணியக்கூடாது. குருவாயூர். வேட்டி அணியவேண்டும். அய்யய்யோ நான் வேட்டி கொண்டு போகவில்லை. எனவே ஓரமாக உட்கார்ந்து விட்டு வந்து விட்டேன். அப்போது இக்கவிதை நினைவுக்கு வந்தது என்றால், எப்படி? எனவெதான் நான் சிரித்துவிட்டேன்) சில கோயிலகள் மாலை வெளிச்சமாக இருக்கும் போதே நடை சாத்தப்படும். எ.கா சோழிங்கர் (சோழ சிம்ம புரம்) சில கோயிலகள் ஒரேயிடத்தில் இடைவெளிவிட்டு இருக்கும். ஆனால் அவற்றில் ஓரிரண்டு வெவ்வேறு நேரங்களை அனுஸ்டிக்கும். எ.கா திருவைகுண்டம் நவ திருப்பதிகள். The timings are staggered in order to safeguard the assets therin which may attract robbers. In the 1970s, a priest was murdered by a robber at 8 p.m. when the temple had no other visitor.

   In Sholinger, the time taken to climb up and down the hill will be more than an hour. Further, it is unsafe for both the devotee and the priest to be lonely at the top.

   Considering the safety aspect, the Government of TN has fixed the hours of worship only during the daytime. Well done.

   நேரம் தெரியாவிட்டால் போக வேண்டா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *