வைரமுத்துவின் குமாரி எமிலி டேவிடும், நியூ சயண்டிஸ்ட் இதழும்

வைரமுத்துவின் குமாரி எமிலி டேவிடும், நியூ சயண்டிஸ்ட் இதழும்

(ஓர் அறிவியல் மாணவன்)   வைரமுத்துவின் அண்மைய பெஸ்ட் செல்லரான “மூன்றாம் உலகப் போர்” நாவலில் எமிலி டேவிட் என்னும் அழகான அமெரிக்கப் பெண் வருகிறாள். அவள் நியூ சயண்டிஸ்ட் இதழில் எழுதிய ஒரு கட்டுரை இந்த நாவலின் கருவாக அமைந்துள்ளது.…
க. நா. சுவும் நானும்(2)

க. நா. சுவும் நானும்(2)

ஆனால் அந்த நாட்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் நிறைந்த நாட்கள். க.நா.சுவின் எழுத்துக்களை தமிழ் பத்திரிகைகளிலோ ஆங்கிலப் பத்திரிகைகளிலோ பார்க்கும் போது நான் அடைந்த உற்சாகம் சொல்லித்தீராது. அவர் எழுத்து மாத்திரம் அல்ல. தில்லியில் எனக்குப் பார்க்கக் கிடைத்து வந்த நாடகம்,…

கையெழுத்து

  பொன்மலை ரயில்வே ஸ்டேஷனின் மேற்குப் புறத்தில் குறுக்கில் கிடக்கும் தண்டவாளங்களைத் தாண்டி வகிடெடுத்த மாதிரி போகும் ஒத்தையடிப் பாதையில் நடந்தால், கால் மணி நேரத்தில் சங்கிலியாண்டபுரம் போய்விடலாம். அந்தச் சங்கிலியாண்டபுரத்தில்தான், என்னோடு கொஞ்ச நாள் ஸ்கூலிலும் பின் கல்லூரியிலும் படித்துக்கொண்டிருக்கும்…
ரசமோ ரசம்

ரசமோ ரசம்

மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் என்று பத்மினி பாடுவார்.  மனித முக பாவங்களில் நவரசம் மட்டும்தான். ஆனால் நாம் அதற்கு மேலும் ரசங்கள் தயாரிக்கலாம். நான் சாப்பிடும் ரசம் பத்தி சொல்றேன்பா.   குங்குமம் தோழியில் இணைப்புக்காக இப்ப குளிர்காலம் ஆயிற்றே என…
ஒரு க‌ண்ணீர் அஞ்ச‌லி!

ஒரு க‌ண்ணீர் அஞ்ச‌லி!

"சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு..." பாரதி மும்பை நகர் வீதிகளில் தேடினான். கவிதை என்றால் இலக்கியம் நினவுக்கு வந்தது. "காண்டேகரின்"எழுத்துக்களின் மின்னல் பீலிகளாய் அந்த "கிரவுஞ்ச வதம்" அவ‌ன் கண்ணுக்குள் நிழல் காட்டியது. அந்த‌ காவிய‌க்க‌சிவோடு "சேரத்து தந்தம்"தன்னை பண்டமாற்றம்…

மணலும், நுரையும்! (4)

SAND AND FOAM (Khalil Gibran) (4)     பவள சங்கரி செவியொன்றைத் தாரும் எமக்கு, குரலொன்றைத் தருவேன் யான் உமக்கு. நம் மனம் என்பதோர் நுரைப்பஞ்சு; நம் இருதயமோ ஓர் சிற்றாறு. நம்மில் பெரும்பாலானோர் ஓடுவதைக் காட்டிலும் உறிஞ்சுவதைத்…

கவிதைகள்

பலி மாக்கல் நந்தி வளருகிறதாம் பிள்ளையார் பால் குடிக்கிறதாம் மண்ணடி இயேசு மறுபடி வருவாராம் புத்த பிக்குகள் அஹிம்சையை தொலைத்துவிட்டார்கள் பாம்பு சீண்டினால் தான் சீறும் கங்கையில் தொலைப்பதற்காகத்தான் பாபங்களை சுமக்கின்றீர்களா பணமுதலைகளா வாருங்கள் உங்களுக்கு தங்கத்திலான சிலுவை தயாராக இருக்கிறது…
வதம்

வதம்

கனவிலாவது பெருங்கனவானாக இருக்கக் கூடாதா சுற்றம் இவனிடம் பவிசாக நடந்து கொள்ளக் கூடாதா நடப்பவை தெரியவந்தால் அசுவாரஸ்யம் ஏற்படாதா மாரிக்காலத்தில் ஒளிந்து கொள்ளத் தெரியாதவன் பகலவனா தேவதாசிகளின் அழகு அத்தனையும் முருகனுக்கா காடு,மலை,கடல் நவகிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொள்வதில்லையா அன்னாபிஷேகத்துக்கு பசியோடு…

அக்னிப்பிரவேசம் -10

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நிர்மலா எல்லா வார, மாதப் பத்திரிகைகளை வாங்கி வரச் செய்வாள். அதுதான் அவளுடைய பொழுதுபோக்கு. மதுரையிலிருந்து வெளிவரும் ஒரு மாதப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தவள் ஓரிடத்தில் அப்படியே நின்று…

நம்பிக்கை ஒளி! (7)

நம்முள் இருப்பது அனைத்துமே நல்ல குணங்கள், தம்மால் அனைவருக்கும் உதவியே அன்றி உபத்திரவம் இல்லைபோன்ற எண்ணங்களெல்லாம் நம்மையறியாமல் நமக்குள் ஒரு செருக்கை விதைதுவிடுவதோடு அது விரைவாக எதிர்வினையையும் கூட ஏற்படுத்திவிடுகிறது. ‘தான்’ என்ற அகங்காரம் என்று இதைத்தான் சொல்கிறார்களோ? எது எப்படியோ,…