வங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்

author
19
0 minutes, 3 seconds Read
This entry is part 11 of 28 in the series 27 ஜனவரி 2013

அயீஷா அஸ்கார்

(எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் என்ற பாக்கிஸ்தான் பத்திரிக்கையில் ஜனவரி 4 2013இல் வெளியான கட்டுரை)

488993-AyeshaAsgharnew-1357315839-882-640x480பெரும் போரில் பாலியல் பலாத்காரம் எவ்வாறு ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். 1971இல் கிழக்கு பாகிஸ்தான் போரின்போது, பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராக கிளம்பிய குரல்களை நசுக்க, பல்லாயிரக்கணக்கான பெண்கள் கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஒவ்வொரு வருடமும், பாகிஸ்தானிகள் போரின்போது சிறைப்படுத்தப்பட்ட போர்வீரர்களை பற்றி புலம்புவார்கள். ஆனால், அவர்கள் செய்த கொடூரமான செயல்களை பற்றி வாயே திறக்க மாட்டார்கள்.

சில ஜனநாயக சமூகங்களில், விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட சமூகத்தினரின் மீதுஆயுதமாக பாலியல் பலாத்காரம் உபயோகிக்கப்படுகிறது. அப்போது மற்ற சமூகங்கள் தங்களிடம் ஒன்றுமில்லை என்பது போல வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள். பாகிஸ்தானில், பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் ஒருபோது நீதிக்கு முன்னால் நிறுத்தப்படுவதில்லை. பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் கூக்குரல், ”மேற்கத்திய ஏஜெண்டுகளின் அஜண்டாவாக” பிரச்சாரம் செய்யப்பட்டுவிடுகிறது.

முஸ்லீம் பெண்களை பலாத்காரம் செய்தது பற்றி பேசினாலோ, இஸ்லாமிய இமாம்கள், அந்த பெண்ணின் குணத்தை பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்து, பாலியல் பலாத்காரம் செய்த ஆணின் குற்றத்தை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் குற்றமாக மாற்றி ஏற்றிவிடுகிறார்கள். ஆனால், இந்துப்பெண்களின் மீது நடக்கும் பாலியல் பலாத்காரம் பற்றி பேச ஆளே இல்லை. ஒரு இஸ்லாமிய இமாமும் அதனை பற்றி பேசுவதே இல்லை. ஏனெனில் இங்கே இனவெறி கொளுந்து விட்டு எரிகிறது. இந்துக்கள் அரசியல் சட்ட அமைப்பின்படி ”தங்களது மதத்தை பின்பற்ற உரிமை உள்ளவர்கள்” என்று ஏட்டில் எழுதிவைத்துவிட்டு அதனை பற்றி ஒருவரும் கவலைப்படுவதில்லை. ஒருவர் சிந்து மாகாணத்தை சேர்ந்த கிராமப்புறத்தில் வாழும் ஒரு சிந்தி இந்து பெண்ணாகவோ ஏழையாகவோ இருந்தால், பாகிஸ்தானில் எல்லா விஷயங்களுக்கு அவருக்கு எதிராகவே இருக்கும். எவ்வளவுதான் அந்த பலாத்காரங்களை எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், அது தொலைக்காட்சிகளில் செய்தியாகக்கூட வராது. ஏனெனில், பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காட்ட தகுந்த விஷயம் அல்ல.

டிசம்பர் மாதம் முழுவதும், பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக உமர் கோட் நகரத்தில் போராட்டம் நடந்துகொண்டே இருந்தது. ஆனால், அவை தொலைக்காட்சிகளில் காட்டப்படவேஇல்லை. மிகச்சமீபத்தில், இந்து குடும்பத்தை சேர்ந்த ஆறு வயதும் 14 வயதுமான இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது இளம்பிராயமும், மனிதமும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலியல் பலாத்காரங்கள் முதலுமல்ல, அதிகாரத்திலிருப்பவர்கள் செய்த முதல் அட்டூழியமும் அல்ல. சிந்தி இந்துக்கள் வெகுகாலமாகவே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அதிகாரத்திலிருப்பவர்களால், இந்த இந்துக்களின் குரல் வெகுகாலமாகவே அமுக்கப்பட்டே வந்திருக்கிறது. இருப்பினும், இந்த அதிகாரத்திலுள்ளவர்களும்,பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் இஸ்லாமிய இமாம்களும், பெண்களின் உரிமைகளை பற்றி பேசுவது நாராசமாகவே உள்ளது.

 

பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால், அவர்களை அதிகாரிகள் பாதுகாத்தால், ஒருவேளை சிந்து மக்களை அடக்குமுறை செய்வது அந்த அரசியல் கட்சியின் முக்கியமான உரிமையோ என்னவோ. பாலியல் பலாத்காரம் செய்தவர்களை பற்றி பேசுவதும், அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்பதும், ”ஜனநாயகத்தை” அவதூறு செய்வது என்று போலி அறிவுஜீவிகள் முழங்குகிறார்கள். ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மக்களின் முன் நின்றாகவேண்டும் என்பதை இந்த போலி அறிவுஜீவிகள் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது. பெரிய முஸ்லீம் ஜமீந்தாரர்களுக்கோ இந்த ஏழை இந்துக்களையும் பெண்களையும் சுரண்டுவது எளிய விஷயம். அதன் பின் அதனை நியாயப்படுத்த இந்த போலி அறிவுஜீவிகளை அனுப்பிவிட்டால் முடிந்தது.

பாகிஸ்தானில் ஒவ்வொரு மாதமும், 20-25 இந்து பெண்கள் கட்டாயமாக மதம் மாற்றப்படுகிறார்கள், பாலுறவு பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று 2010 ஆசியன் மனித உரிமை கமிஷன் அறிவிக்கிறது. சிந்தி மொழி செய்தி பத்திரிக்கைகள் இதனை பிரசுரித்து வருகின்றன. ஆனால், ஆங்கில உருது மொழி பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இந்த செய்திகளை அமுக்கிவிடுகின்றன. ஏனெனில் இந்த உருது ஆங்கில மொழி ஊடகங்களுக்கு எகிப்து, சிரியா, இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் பாலுறவு பலாத்காரமே முக்கியம். பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினர் மீது நடக்கும் பாலியல் பலாத்காரங்கள் முக்கியமல்ல.

உமர் கோட்டில் பாலுறவு பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட இந்து சிறுமிகள் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் மீது நடந்த வன்முறைக்கு எந்த விதமான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. கிராம ஆஸ்பத்திரிகளில் கிடக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினருக்கு நீதி ஒவ்வொரு தினமும் மறுக்கப்படுகிறது. அதற்கப்புறமும், பாகிஸ்தானில் மேலடுக்குகளில் வாழும் பாகிஸ்தானிகளுக்கு சிந்து மாகாணத்திலிருந்து இந்துக்கள் வெளியேறுவது ஆச்சரியமாக இருக்கிறது!

 

Published in The Express Tribune, January 5th, 2013.

 

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3அக்னிப்பிரவேசம்-20
author

Similar Posts

19 Comments

 1. Avatar
  punaipeyaril says:

  நிச்சயம் உலகம் ஒரு நாள் திரளும். இவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். அது மதமல்ல… “மதம்” கொண்ட கும்பலின் கூட்டமைப்பு…

 2. Avatar
  suvanappiriyan says:

  பாகிஸ்தானில் நடக்கும் கொடுமைகளை கஷடப்பட்டு ஆர்வத்தோடு தேடி மொழி பெயர்ப்பதை குறை காணவில்லை. அந்த ஆர்வத்தில் பாதி அளவேனும் நம் இந்தியாவில் நம் தமிழகத்தில் நடக்கும் பெண் கொடுமைகள், தலித் கொடுமைகள், இஸ்லாமியருக்கு எதிரான கொடுமைகளை விளக்கி கட்டுரைகள் வந்தால் நமது நாடு செழிப்புறும்.

  பாகிஸ்தானைப் பொறுத்தவரை அந்த நாடே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிது. அங்கு தடி எடுத்தவன எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை. பலுசிஸ்தானில் அரசு அதிகாரிகள் பல இடங்களில் உள்ளேயே நுழைய முடியாத நிலை. அன்றிலிருந்து இன்று வரை இது தான் நிலை. முஸ்லிம்களின் நிலையும் அங்கு இதே போல்தான். எனவே இந்துக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதாக சொல்வதும் சற்று மிகைப்படுத்தலே. அதற்காக அங்கு தவறுகளே நடக்கவில்லை என்று சொல்லவில்லை. அதிகம் அங்கு பிரச்னை ஏற்பட்டால் நமது நாடு ராணுவ நடவடிக்கை எடுத்து அந்த நாட்டை சீர் செய்ய முயல வேண்டும்.

 3. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \பாகிஸ்தானைப் பொறுத்தவரை அந்த நாடே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிது.\

  ஜெனாப் சுவனப்ரியன், பாக்கி ஸ்தான் (Baqi Sthan) மட்டும் என்ன அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சூடான், எகிப்து, சிரியா, ஈரான், ஈராக், லெபனான், பாங்க்ளாதேஷ் – இதெல்லாம் என்ன சுபிக்ஷத்தை நோக்கியா சென்று கொண்டிருக்கின்றன. சவூதியும் வெகு தூரத்தில் இல்லை இந்த லிஸ்டில் இருந்து.

  நோய் நாடி நோய் முதல் நாடி – என்பது வள்ளுவர் வாக்கு.

  உலகத்தில் இஸ்லாம் என்றாலே பயங்கரம் என்ற படிக்கு நிகழ்வுகளை நிகழ்த்துபவர்கள் இந்த தேசத்தினர். பயங்கரவாதத்திலிருந்து இஸ்லாம் முற்றோடு என்று தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளுமோ அன்று தான் இத்தேசங்களுக்கு விமோசனம்.

  அதற்கு வழி வஹாபிய இஸ்லாத்திலிருந்து மீண்டு ஸூஃபி இஸ்லாத்துக்குத் திரும்புவது. ஆனால் வினாச காலே விபரீத புத்தி என்ற சான்றோர் வாக்கு என்றும் பொய்யாகாதே.

  \ நம் இந்தியாவில் நம் தமிழகத்தில் இஸ்லாமியருக்கு எதிரான கொடுமைகளை \

  இதில் லவலேசமும் உண்மை என்பது எங்காவது இருக்கிறது?

  ஹிந்துஸ்தானம் முழுதும் ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளே அதிகம். உலகில் ஏதாவது இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் அகதிகளாக ஆகி ஓட வேண்டியுள்ளதா சொல்லுங்கள். ஆனால் ஹிந்துஸ்தானத்து காஷ்மீர ஹிந்துக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே இஸ்லாமிய பயங்கரவாதத்தால் தங்கள் சொந்த மண்ணை விட்டு அகதிகளாக மற்ற ப்ரதேசங்களில் வாழ நேருகிறது.

  மேல் விஷாரத்தில் இஸ்லாமியர்கள் ஹிந்துக்களை விரட்டியடித்தது போதாது என்று கீழ் விஷாரத்தையும் கபளீகரம் செய்ய விழைகையில் தங்களை தனி தெஹ்சிலாக அறிவிக்க கீழ் விஷாரத்தினர் ந்யாயாலயத்தில் போராட வேண்டியிருந்தது.

  ஒரு கபள சோற்றில் முழுப் பூஷணிக்காயை மறைக்கும் முயற்சியை ஏன் செய்கிறீர்கள் அன்பரே.

 4. Avatar
  மலர்மன்னன் says:

  இஸ்லாமியருக்கு எதிரான கொடுமைகளா? ஹிந்துஸ்தானத்திலா? தொலை நோக்குப் பார்வை சிறிதுமின்றி. அப்போதைய நிலவரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சிறுபான்மையினருக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்ற ஒரே நல்லெண்ணத்துடன் பெரும்பான்மையினரான ஹிந்துக்களால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் பயன்களை நன்கு சுவைத்து மகிழ்வது போதாதென்று வாக்கு வங்கி அரசியலை உருவாக்கி எல்லா அரசியல் கட்சிகளையும் எலும்புத் துண்டுக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு பின்னால் ஓடி வரும் நாய்களாக மாற்றம் செய்து அனுபவிக்கும் சுகம் போதவில்லையா? 60 ஆண்டுகளுக்கு முன் இதே ஹிந்துஸ்தானத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த ஹிந்துக்கள் பிரிவினை காரணமாக இன்று விவஸ்தை கெட்ட இரு அந்நிய நாடுகளில் சிக்கிக் கொண்டு படுகிற அல்லல்களை இங்கு எந்த முகமதியக் குடும்பமோ கிறிஸ்தவக் குடும்பமோ அனுபவிக்கிறது? விஸ்வரூப உருட்டல் மிரட்டல் ஒன்று போதாதா பிரத்தியட்ச நிலையை நிரூபிக்க? வறுமையும் கல்லாமையும் ஹிந்துக்களிடையேயும்தான் உள்ளன. விகிதாசாரப்படிப் பார்த்தால் வித்தியாசம் ஏதும் இல்லை என்பது விளங்கும்.
  -மலர்மன்னன்

 5. Avatar
  மலர்மன்னன் says:

  தலித்கள் பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கும் நாடகம் நாம் அறிந்ததே!
  அவர்களை முகமதியராக மாற்றி எண்ணிக்கை பலத்தை உயர்த்திக் கொள்ளத்தான் இந்த நீலிக் கண்ணீர் என்பதும் தெரிந்த விஷயம்தான்! கொலை வழக்கில் சிக்கிக் கொண்டவர்களிடம் பேரம் பேசி முகமதியராக மாற்றிய கதை தெரியாதா?
  ஹிந்துஸ்தானத்தில் முகமதியர்கள் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழத்தான் வேண்டுமா? குஜராத் குஜராத் என்று கூவியபோதும் அங்கிருந்து எந்த முகமதியரும் பாகிஸ்தானில் தஞ்சமடையப் போகாததன் மர்மம் என்ன? பாகிஸ்தான் எல்லையில் உள்ளதுதானே பாகிஸ்தான்?
  -மலர்மன்னன்

 6. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!

  //ஹிந்துஸ்தானத்தில் முகமதியர்கள் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழத்தான் வேண்டுமா? குஜராத் குஜராத் என்று கூவியபோதும் அங்கிருந்து எந்த முகமதியரும் பாகிஸ்தானில் தஞ்சமடையப் போகாததன் மர்மம் என்ன? பாகிஸ்தான் எல்லையில் உள்ளதுதானே பாகிஸ்தான்?//

  அதற்கு பெயர்தான் நாட்டுப் பற்று. உங்கள் ஆட்களோ அமெரிக்கா சிடிசனுக்கு ஏங்குபவர்களாகத்தான் உள்ளார்கள். இந்த நாட்டு வரிப்பணத்தில் பட்டங்களை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகி விடுகிறீர்கள். இந்திய பிரிவினையின் போதே போகாதவர்கள் நாங்கள். பாரதம் எங்கள் மண். எங்களின் உயிரும் இந்த மண்ணிலேதான் போகும். மோடியைப் போன்று இன்னும் 10 முதல்வர்கள் வந்தாலும் இஸ்லாமிய வாசத்தை பாரதத்திலிருந்து எடுத்து விட முடியாது.

  அடுத்து தலித்களை பார்ப்போம். நீங்கள் அவர்களை ஒழுங்காக நடத்தினால் அவர்கள் ஏன் இஸ்லாத்தை நோக்கி ஓட வேண்டும். இன்றும் பூணூலின் பெருமைகளை பேசிக் கொண்டுதானே பலரின் காலம் ஓடுகிறது? நீங்கள் பண்ணும் வர்ணாசிரம கொடுமை தாங்க முடியாமல் அவன் கண் முன் தெரியும் விடுதலையை நோக்கி ஓடுகிறான். இதில் என்ன தவறு?

  1. Avatar
   தங்கமணி says:

   அன்புள்ள சுவனப்பிரியன்,
   //உங்கள் ஆட்களோ அமெரிக்கா சிடிசனுக்கு ஏங்குபவர்களாகத்தான் உள்ளார்கள். இந்த நாட்டு வரிப்பணத்தில் பட்டங்களை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகி விடுகிறீர்கள்//
   அதென்ன உங்கள் ஆட்கள்? வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகும் மக்களெல்லாம் வெறும் இந்துக்கள் மட்டும்தானா? இந்திய முஸ்லீம்கள் அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆவதில்லையா? இந்திய கிறிஸ்துவர்கள் அமெரிக்கா ஐரோப்பா என்று சென்று அங்கு குடியுரிமை வாங்கி செட்டில் ஆவதில்லையா?

   ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முஸ்லீம்களாக இருக்கும் அல் அக்தும் போன்ற கருப்பினத்தவரையே படு கேவலமாக முஸ்லீம் அரபியர்கள் நடத்துவது அல்ஜஜீராவிலேயே அசிங்கப்பட்டுவிட்டது. ஊடகங்கள் இல்லாத, ஊடகங்கள் இஸ்லாமிய சமூகங்களை பற்றி வெளியில் சொல்லாத காலத்தில் ஏமாறி தலித்துகள் ஒருவேளை இஸ்லாமில் மரியாதை கிடைக்கும் என்று சென்றிருக்கலாம். இப்போதும் தலித்துகள் ஏமாளிகளாகவா இருக்கிறார்கள்?

   தலித்துகள் முஸ்லீம்களாகும்போது அவர்களுக்கு ஒரு காலத்தில் மற்ற இந்துக்கள் மரியாதை கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லீம்களுக்கே இன்று மரியாதை கெட்டுக்கிடக்கும் சூழலில் இஸ்லாமுக்கு போனால் சக இந்துக்கள் மரியாதை கொடுப்பார்கள் என்று யார் நினைப்பார்கள்?

 7. Avatar
  suvanappiriyan says:

  திரு க்ருஷ்ணகுமார்!

  //ஜெனாப் சுவனப்ரியன், பாக்கி ஸ்தான் (Baqi Sthan) மட்டும் என்ன அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சூடான், எகிப்து, சிரியா, ஈரான், ஈராக், லெபனான், பாங்க்ளாதேஷ் – இதெல்லாம் என்ன சுபிக்ஷத்தை நோக்கியா சென்று கொண்டிருக்கின்றன.//

  இந்த நாடுகள் எல்லாம் ஒரு காலத்தில் மிக அமைதியாகவே இருந்தன. பெட்ரோல் காசுக்காகவும் கனிம வளங்களை கொள்ளை அடிக்கவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பிரிட்டனும் கூட்டு சதி செய்து அந்த நாடுகளின் அமைதியை அழித்து வருகின்றன. கூடிய விரைவில் நிலைமை சீரடையலாம்

  //சவூதியும் வெகு தூரத்தில் இல்லை இந்த லிஸ்டில் இருந்து.//

  கெடுவான: கேடு நினைப்பான் என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. அமெரிக்கா கேட்கும் எலும்புத் துண்டுகளை அவ்வப்போது சவுதி வீசி விடுவதால் வாலை ஆட்டிக் கொண்டு அமெரிக்கா சேவகனாகவே இருக்கும். சவுதிக்கு ஒரு பாதகமும் இல்லை கவலை வேண்டாம்.

  //அதற்கு வழி வஹாபிய இஸ்லாத்திலிருந்து மீண்டு ஸூஃபி இஸ்லாத்துக்குத் திரும்புவது. ஆனால் வினாச காலே விபரீத புத்தி என்ற சான்றோர் வாக்கு என்றும் பொய்யாகாதே.//

  25 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகளும் கலவரங்களும் நடந்து வந்தன. வஹாபியம் ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்’ என்ற பெயரில் ஒரு சிறந்த அமைப்பாக மாறி பல லட்சக்கணக்கான இளைஞர்களை உறுப்பினராக்கி இன்று பல பொது நல சேவைகளை செய்து வருகிறது. இரத்ததானத்தில் தமிழகத்தில் வருடா வருடம் முதல் இடத்தை பெறுகிறது. வட்டியில்லா கடன் மாற்று மதத்தவர்களுக்கும் கொடுக்கிறது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை ‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழமெங்கும் செயல்படுத்துகிறது. எனவே வஹாபியத்தால் சமூகத்துக்கு நன்மையே.

  இதில் லவலேசமும் உண்மை என்பது எங்காவது இருக்கிறது?////

  தமிழகத்திலும் கேரளாவிலும வெளி நாட்டு சம்பாத்தியத்தால் ஓரளவு முஸ்லிம்கள் வளமுடனே உள்ளனர். நான் ஒட்டு மொத்த இந்தியாவில் முஸ்லிம்களின நிலையை சொன்னேன். தற்போதுதான் படிப்பில் ஓரளவு ஆர்வம் செலுத்கின்றனர் முஸ்லிம்கள். இன்னும் 10 ஆண்டுகளில் மிகச் சிறந்த மறுமலர்ச்சி இந்திய முஸ்லிம்களுக்கு உண்டு. நீங்களும் நானும் பார்க்கத்தான் போகிறோம்

  //மேல் விஷாரத்தில் இஸ்லாமியர்கள் ஹிந்துக்களை விரட்டியடித்தது போதாது என்று கீழ் விஷாரத்தையும் கபளீகரம் செய்ய விழைகையில் தங்களை தனி தெஹ்சிலாக அறிவிக்க கீழ் விஷாரத்தினர் ந்யாயாலயத்தில் போராட வேண்டியிருந்தது.//

  அரசு வேலை பார்க்கும் இந்துக்கள் கிராமங்களில் உள்ள வீடுகளை விற்று விட்டு சென்னையில் சொந்த வீடு வாங்கி பலர் குடியேறி விடுகின்றனர். அல்லது அமெரிக்கா போய் செட்டிலாகி விடுகின்றனர். அதனால் விலைக்கு வரும் வீட்டை யாருமே வாங்கத்தானே செய்வர். இதில் என்ன தவறு கண்டீர்கள்? எல்லோரும் இந்தியரே என்ற பக்குவத்துக்கு வாருங்கள் நண்பரே!..

 8. Avatar
  ஷாலி says:

  //வறுமையும் கல்லாமையும் ஹிந்துக்களிடையேயும்தான் உள்ளன. விகிதாசாரப்படிப் பார்த்தால் வித்தியாசம் ஏதும் இல்லை என்பது விளங்கும்.//
  அறுபது வருடமாக இந்தியாவை ஆளுவது யார்?காஷ்மீர் பண்டிட் மோதிலால் நேரு குடும்பமும்,உங்க சாஸ்த்திரி,மொராஜி,வாஜ்பேய் கூட்டமும்தானே!வறுமையும் கல்லாமையும் ஏன் தலித் ஹிந்துக்களிடம் இருக்கு.மலர் மன்னன் விரும்பும் ராம ராஜ்ஜியம் வந்தாளும் கல்லாமை நீங்க வாய்ப்பில்லையே! சம்பூகனுக்கு நேர்ந்த கதி நீங்கள் அறியாததா…”குலவித்தை கல்லாமல் பாகம்படும்” எனும் குலக்கல்வி திட்டத்தால் மலம் அள்ளும் தோட்டியும், செருப்பு தைக்கும் சக்கிலியனும் வறுமை நீங்கி வளம் பெறுவது எப்படி? பெரியவர் எழுத்தில் வன்மமும் குரோதமுமே வழிகிறது.

 9. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  // வஹாபியம் ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்’ என்ற பெயரில் ஒரு சிறந்த அமைப்பாக மாறி ….. இந்து முஸ்லிம் ஒற்றுமையை ‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழமெங்கும் செயல்படுத்துகிறது. எனவே வஹாபியத்தால் சமூகத்துக்கு நன்மையே. //

  பதிலுக்கு பதில் பாட விரும்பவில்லை எனினும், ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல விழைகிறேன் :

  இதே தவ்ஹீத் அமைப்பின் பீ.ஜே ஆரம்பித்து வைத்த அரக்கத்தனத்தால்தான் இன்று விஸ்வரூபம் திரைப்படத்தை வைத்து கமல் என்ற தனிமனிதரை மண்டியிட வைத்து முடக்கிப்போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  இதே தவ்ஹீத் என்ற சிறந்த அமைப்பின் பீ.ஜே-தான் மனுஷ்யபுத்திரனை ‘மிருக புத்திரன்’, ‘இடுப்புக்கு கீழே இயங்க முடியாதவன்’ இன்னபிற உயர்நாகரிக நடையில் விமர்சித்திருக்கிறார். கமலின் மகளை பார்த்து ‘நீ உன் அப்பனோடு படுக்க விரும்புகிறாயா ?’ என்று வினவி இருக்கிறார் ; பாரதிராஜாவை ‘உன் குடும்பத்தை விபசாரம் செய்ய வைக்க விரும்புகிறாயா’ என்றெல்லாம் மிக நாகரீகமாக கேட்டுள்ளார்.

  யப்பாஆஆஆஆ …. எவ்வளவு நன்மை சமூகத்துக்கு.

 10. Avatar
  தங்கமணி says:

  காஷ்மீர் பண்டிட் மோதிலால் நேரு குடும்பமும்,உங்க சாஸ்த்திரி,மொராஜி,வாஜ்பேய் கூட்டமும்தானே!//
  நேரு குடும்பத்தை இன்று பிராம்மணர் குடும்பம் என்று சொல்லமுடியுமா? அது பார்ஸிகளும், இத்தாலியர்களும் கொண்ட குடும்பம் அல்லவா?
  அது கிடக்கட்டும், சாஸ்திரியின் பெயரில் சாஸ்திரி இருப்பதால் அவர் பிராம்மணர் இல்லை. மொரார்ஜி வாஜ்பாய் பிராம்மணர்களாக இருந்தாலும் மற்ற பிரதமர்களான தேவே கௌடா, சரணசிங், விபி சிங்,சந்திரசேகர் என்று இவர்கள் பிராம்மணர்கள் இல்லையே.
  வறுமையும் கல்லாமையும் போக்குவதற்கு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கொடுத்து சிறப்புற அவர்களை இந்திய அரசு முன்னேற்றித்தானே வருகிறது. (அதாவது உங்க பார்வையில் இந்து அரசு?)
  முஸ்லீம்களால் கொண்டுவரப்பட்ட மலத்தை மனிதன் அள்ளும் திட்டத்தை சட்டப்பூர்வமாக ஒழித்து, அதனை நடைமுறைப்படுத்த செலவு செய்வதும் இந்த இந்து அரசுதானே?

  அது சரி, எப்போது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முஸ்லீம்களாக இருக்கும் அல் அக்தம் போன்ற கருப்பின முஸ்லீம்களை மனிதர்களாக நடத்தப்போகிறார்கள் அரபிய தூய முஸ்லீமகள்? அதன் பிறகு தலித்துகள் மீதான உங்களது போலி அக்கறையை காட்டலாமே?

 11. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  அமெரிக்க சிடிசனாவதற்கு ஏங்குவது இந்துக்கள் மட்டுமா ? வாய்ப்பு கிடைத்தால் இஸ்லாமியனும் வரத்தான் செய்வான். என்ன சார் ஜோக்கடிக்கிறீர்கள் ? ஏன் நீங்கள் சவுதியில் இல்லையா ? அது மட்டும் புண்ணியஸ்தலமா ?

  ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இந்தியாவில் இருந்து விசாவில் வந்து வேலை பார்க்கிறார் ஒரு இஸ்லாமிய அன்பர். பேசுவது முழுக்க முழுக்க அமெரிக்க எதிர்ப்பும் இஸ்லாமிய தேச ஆதரவும்தான். ஆனால் அன்பருக்கு ஊருக்கு போக விருப்பமில்லை, அமெரிக்காவிலேயே நிரந்தரமாக செட்டில் ஆகத்தான் விருப்பம். இன்னும் அதிக சம்பளத்துக்காக அடுத்த வேலை தேடிக்கொண்டிருக்கிறார். ‘நீங்கள் திரும்பிப்போவதாக எண்ணம் உள்ளதா’ என்று கேட்டு, எனக்கும் அப்படி ஒரு ஆசை இருப்பதாக சொல்லவே என்னை இந்தியாவில் என்ன இருக்கிறது என்று கேட்டு இங்கேயே செட்டில் ஆகச்சொல்லி அறிவுரையும் தந்தார்.

  அமெரிக்க ஆசைக்கு மதவேறுபாடெல்லாம் கிடையாது. வாய்ப்பு கிடைக்காதவரைக்கும் அமெரிக்க செல்பவனை எள்ளி நகையாடலாம் அவ்வளவுதான்.

 12. Avatar
  மலர்மன்னன் says:

  பிரிவினையின்போது முகமதியர்கள் அனைவரும் பாகிஸ்தான் செல்லாமல் இங்கேயே தங்கி விட்டமைக்குக் காரணம் அவர்களுக்கு இங்கு எவ்விதப் பாரபட்சமும் காட்டப்பட மாட்டாது என்று அளிக்கப்பட்ட உத்தரவாதம். உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி. அதன் பிறகும் இங்கு கலவரங்களைத் தொடங்கி வைத்து விஷமம் செய்வதில் குறைச்சல் இல்லை. இங்கேயே அவர்கள் நீடிப்பதற்குக் காரணம் இங்கு மத அடிப்படையில் எவ்விதத் தடையும் இன்றி எல்லாத் துறைகளிலும் முன்னேறுவதற்கு உள்ள வாய்ப்பு. நீதி மன்றத்தில் வாதாடி பரிகாரம் தேடுவதற்கு உள்ள உரிமை. எவரும் கடத்திச் செல்லப்பட்டு மத மாற்றம் செய்யப்பட மாட்டார்கள் என்ற அச்சமற்ற நிலை. சொத்து சுகங்களுக்குப் பாதுகாப்பு. பாரதத்தின் சகல பகுதிகளிலும் முகமதியர் பல்வேறு துறைகளிலும் நன்கு முன்னேறி வசதிகளுடன் சுபிட்சமாகவே வாழ்கிறார்கள். முகமதியர் என்ற காரணத்திற்காக அவர்கள் ஒதுக்கப்படவில்லை. முன்னேற்றம் காண அவர்களுக்கு இங்கு தடை ஏதும் இல்லை. மும்பை திரை உலகமே அவர்கள் கையில்தான். பல முக்கிய வியாபாரங்களும் அவர்கள் வசம். உத்தர பிரதேசம்,பிஹார், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஆந்திரம் (ஹைதராபாத்) என எல்லா மாநிலங்களிலுமே பெரும் பணக்காரர்களாகவும் வர்த்தகம், தொழில் பிரமுகர்களாகவும் முகமதியர் இருப்பதைக் காணலாம். விளையாட்டு, இலக்கியம், கலை என எங்கும் அவர்களை முதல் வரிசையில் காண முடியும். இப்படி ஒரு ஹிந்துவையாவது பாகிஸ்தானிலோ பங்களாதேஷிலோ காட்ட முடியுமா? மேலும் வெகு விரைவில் நமது எண்ணிக்கை அதிகரித்து ஆட்சி அதிகாரம் சகலமும் நம் கைக்கு வந்துவிடும் என்பதில் முகமதியருக்கு உள்ள அசாத்திய நம்பிக்கை. மதச்சார்பின்மை என்ற பெயரால் எல்லா அரசியல் கட்சிகளுமே ஓட்டுப் பொறுக்கிகளாக முகமதியரைச் சரணடையும் அதிருஷ்டம். இவையெல்லாம்தான் இங்குள்ள முகமதியர்களை இங்கேயே தங்கியிருக்கச் செய்கின்றன. பாகிஸ்தானிலிருந்தும் பங்களா தேஷிலிருந்தும் ஹிந்துக்கள் துன்பம் தாங்காமல் ஹிந்துஸ்தானத்திற்கு ஓடி வருகிறார்களே அதுபோல் இங்கிருந்து ஒரு முகமதியராவது துன்பம் தாளாது பாகிஸ்தானுக்கோ பங்களா தேஷுக்கோ ஓடியதாக சரித்திரமே இல்லை. குஜராத்தில் கோத்ராவில் ரயில் பெட்டியில் இருந்த ஹிந்துக் குடும்பங்களை உயிரோடு கொளுத்தியதுதான் கலவரம் தொடங்குவதற்கே மூல காரணம் என்பதை செளகரியமாக மறப்பதும் மறைப்பதும் ஏன்?
  -மலர்மன்னன்

 13. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \//சவூதியும் வெகு தூரத்தில் இல்லை இந்த லிஸ்டில் இருந்து.//
  கெடுவான: கேடு நினைப்பான் என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. அமெரிக்கா கேட்கும் எலும்புத் துண்டுகளை அவ்வப்போது சவுதி வீசி விடுவதால் வாலை ஆட்டிக் கொண்டு அமெரிக்கா சேவகனாகவே இருக்கும். சவுதிக்கு ஒரு பாதகமும் இல்லை கவலை வேண்டாம்.\

  ஜெனாப் சுவனப்ரியன்,

  கெடுவான் கேடு நினைப்பான். உண்மை தான். ஆனால்,

  ஒரு ஹிந்து எப்போதும்,

  ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து – எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே.

  என்ற தாரக மந்த்ரத்தை நாள்தொறும் ஓதுபவன். எல்லோரும் என்பதில் ஜாதி, மதம், மொழி என்ற வித்யாசமெல்லாம் கிடையாது.

  ஆனால் உலகத்தில் தன் உடலில் குண்டு கட்டிக்கொண்டு நூறு பேரை கொலை செய்ய வேண்டும் என்று தானாக நினைப்பவர்களை அந்த இறைவனாகப் பார்த்து திருத்தினாலொழிய திருந்துதல் என்பது கிடையாது. இந்த மாதிரிப் பேர்வழிகளுக்கு பண உபகாரம் செய்வது சவூதி வஹாபிய / ஸலாஃபி ராஜாங்கம். அவர்களுக்கு கொம்பு சீவி பயிற்சி அளிப்பது பாக்கி ஸ்தானம் (Baqi sthan). இது கசப்பான ஆனால் அழுத்தம் திருத்தமான உண்மை.

  எப்படி எப்படி,

  \எலும்புத் துண்டுகளை அவ்வப்போது சவுதி வீசி விடுவதால் வாலை ஆட்டிக் கொண்டு அமெரிக்கா சேவகனாகவே இருக்கும்.\

  உலகமறிந்த விஷயம் சவூதி அமேரிக்காவுக்கு சேவகம் செய்வது. அது எப்படி உல்டாவாக சொல்ல இயலும்.

  \ இன்னும் 10 ஆண்டுகளில் மிகச் சிறந்த மறுமலர்ச்சி இந்திய முஸ்லிம்களுக்கு உண்டு. நீங்களும் நானும் பார்க்கத்தான் போகிறோம்\

  அன்பரே ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் ஒவ்வொரு ப்ரஜையும் வளமுடன் இருக்க வேண்டும் என்று தான் தேசபக்தி உள்ள ஒவ்வொரு ஹிந்துஸ்தானியும் நினைப்பான். அதை ஹிந்து, முஸல்மான், க்றைஸ்தவன், பலான பலான ஜாதி, தலித் என்றெல்லாம் கூறு போடுவது ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதியின் நிலைமை. பத்தாண்டுகள் ஏன் அதற்கும் குறைந்த ஆண்டுகளில் ஹிந்துஸ்தானம் மிகப்பெரும்பாலான ஹிந்துஸ்தான ப்ரஜைகளும் முழுதும் வளமாக வாழவே நான் விரும்புகிறேன். முழு ஹிந்துஸ்தானத்தில் இங்கு வாழும் முஸல்மான் களும் அடக்கம்.

  \எல்லோரும் இந்தியரே என்ற பக்குவத்துக்கு வாருங்கள் நண்பரே!..\

  அன்பரே உங்களுக்கு அப்படியான மனோபாவம் இல்லாததால் தான் இன்னும் பத்து ஆண்டுகளில் சிறந்த மறுமலர்ச்சி முஸ்லீம்களுக்கு உண்டு என தனித்துச் சொல்லச் சொல்கிறது

  \இதே தவ்ஹீத் அமைப்பின் பீ.ஜே ஆரம்பித்து வைத்த அரக்கத்தனத்தால்தான் இன்று விஸ்வரூபம் திரைப்படத்தை வைத்து கமல் என்ற தனிமனிதரை மண்டியிட வைத்து முடக்கிப்போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  இதே தவ்ஹீத் என்ற சிறந்த அமைப்பின் பீ.ஜே-தான் மனுஷ்யபுத்திரனை ‘மிருக புத்திரன்’, ‘இடுப்புக்கு கீழே இயங்க முடியாதவன்’ இன்னபிற உயர்நாகரிக நடையில் விமர்சித்திருக்கிறார். கமலின் மகளை பார்த்து ‘நீ உன் அப்பனோடு படுக்க விரும்புகிறாயா ?’ என்று வினவி இருக்கிறார் ; பாரதிராஜாவை ‘உன் குடும்பத்தை விபசாரம் செய்ய வைக்க விரும்புகிறாயா’ என்றெல்லாம் மிக நாகரீகமாக கேட்டுள்ளார்.\

  ஜெனாப் சுவனப்ரியன், நீங்கள் விரும்புவது வஹாபியமா அல்லது ஸூஃபி இஸ்லாமா என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் தவ்ஹீத் என்ற இயக்கம் வஹாபியத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால் அன்பர் பொன் முத்துக்குமார் அவர்கள் தெரிவித்த அடைக்குறியிட்ட தகவலின் படி அடிப்படை மனித நாகரீகம் மேற்கண்ட பேச்சுக்களில் அறவே இல்லை என்பது வெட்ட வெளிச்சம். எனக்குப் பரிச்சயமான ஹிந்துஸ்தானி இசை நிபுணர்கள் வஹாபியத்தை அறவே வெறுப்பவர்கள் ஸூஃபி சம்ப்ரதாயத்தினர். ஆனால் அவர்களின் தெஹ்ஜீப் (tehzeeb) (பண்பான பேச்சுக்கள்) போற்றத் தக்கன. தங்களுடன் கருத்துப்பரிமாற்றம் செய்வதன் காரணமே தங்களுடைய தெஹ்ஜீப். ஆனால் தாங்கள் முன்வைக்கும் வஹாபியத்தை இயக்க ரீதியாக முனையும் ஒரு அமைப்பின் பேச்சுக்களுக்கும் பண்பு சார்ந்த உரையாடலுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம் என்பது வெட்ட வெளிச்சம். க்ஷமிக்கவும் ஒரு பொதுஜன உரையாடல் இவ்வமைப்பின் குமட்டலான மொழியில் நடக்க இயலாது.

  \ மும்பை திரை உலகமே அவர்கள் கையில்தான். பல முக்கிய வியாபாரங்களும் அவர்கள் வசம்.\

  ஸ்ரீ மலர்மன்னர் மஹாசயர் சொன்னபடி மும்பை திரை உலகம் மிகப்பெரும்பாலும் முஹமதிய சஹோதரர்களின் கையில் இருக்கும் போதிலும் ஜெனாப் ஷாரூக் கான் அவர்கள் தான் புறக்கணிக்கப்படுவது போல் நாடகமாடுவதும் Baqi Sthan அமைச்சர் ரெஹ்மான் மாலிக் அவர்கள் ஹிந்துஸ்தானத்திற்கு அறிவுரை செய்வதும் சாதாரண ஹிந்துஸ்தான ப்ரஜைக்கு எரிச்சல் கொடுக்கும் விஷயம். போதாதென்பதற்கு உக்ரவாதி ஜெனாப் ஹஃபீஸ் சையீத் ஜெனாப் ஷாரூக் கானுக்கு கொடுக்கும் Baqi Sthan க்கு வா என்ற அறிவுரை. ஹிந்துஸ்தானப் பிரிவினையின் போது இங்கு வந்த படானியர் குடும்பம் ஜெனாப் ஷாரூக் கானுடைய குடும்பம். மதவெறியில் உருவான வெறுப்பு நிலப்பரப்பில் வாழ்வது கடினம் என்பதால் தானே ஹிந்துஸ்தானம் வந்தனர் இவரின் குடும்பத்தினர். இங்கு வாழ்ந்து சொத்து சுகம் சேர்த்து மக்களின் அன்பைப் பெற்று இந்த தேசத்திற்கு இழிவு சேர்க்கும் வகையில் ஜெனாப் ஷாரூக் கான் பேசுவதும் அதற்கு Baqi Sthan அமைச்சர் மற்றும் ஜிஹாதி பயங்கரவாதிகள் ஒத்துப்பாடுவதும் மதவேறுபாடுகள் இன்றி எந்த ஒரு ஹிந்துஸ்தானியரையும் எரிச்சலடையச் செய்யும். அன்னமிட்ட வீட்டிற்கு ஜெனாப் ஷாரூக் கான் கன்னகோல் வைக்க நினைப்பது பச்சைத் த்ரோஹமான செயல் அதுவும் ஹிந்துஸ்தானத்தில் கணக்கிடமுடிந்த ஒரு கோடீஸ்வரராக இருந்த பின்பும்.

  ஜெனாப் ஆமீர்கான் அவர்களைப் பார்த்து தேசம் என்ன எனக்கு செய்கிறது என்பதற்குப் பதில் நான் தேசத்திற்கு என்ன செய்துள்ளேன் என்பதை யோஜித்துப் பார்க்கலாம்.

  அல்லது ஜெனாப் ரெஹ்மான் மாலிக் மற்றும் ஹாஃபீஸ் சையீத் அவர்களின் பேச்சு இனிக்கிறது என்றால் எல்லை தாண்டி இருக்கும் ஸ்வர்க்கம் என்ற கொடு நரகத்திற்கு போகலாம்.

  எனக்குப் பரிச்சயமான அனைத்து ஹிந்துஸ்தான முஸல்மான் களும் ஜெனாப் ஷாரூக் கான் அவர்கள் பேசிய விஷமத்தனமான பேச்சுக்காக மிகவும் மனம் வருந்தினர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

  \பாகிஸ்தானிலிருந்தும் பங்களா தேஷிலிருந்தும் ஹிந்துக்கள் துன்பம் தாங்காமல் ஹிந்துஸ்தானத்திற்கு ஓடி வருகிறார்களே அதுபோல் இங்கிருந்து ஒரு முகமதியராவது துன்பம் தாளாது பாகிஸ்தானுக்கோ பங்களா தேஷுக்கோ ஓடியதாக சரித்திரமே இல்லை.\

  ஸ்ரீ மலர்மன்னன் மஹாசய, இது சார்ந்த இன்னொரு விஷயம்.

  Baqi Sthan மற்றும் பாங்க்ளாதேஷிலிருந்து ஹிந்துக்கள் ஹிந்துஸ்தானத்துக்கு துன்பம் தாங்காது ஓடி வருகிறார்கள். அதுபோலவே முஸல்மான் கள் இங்கு இருக்கும் வளமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் நமது பொருளாதாரத்தை சுரண்டுவதற்கும் எல்லை மாகாணங்களை கபளீகரம் செய்வதற்கும் வருகிறார்கள்.

  ஐக்ய நாடுகள் சபையின் உலகளாவிய கோட்பாடுகள் படி ஹிந்துஸ்தானத்தில் நுழையும் ஹிந்துக்கள் சரணார்த்திகள்; முஸல்மான் கள் சரணார்த்திகள் அல்லர். இங்கு நுழையும் ஹிந்துக்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியது ஹிந்துஸ்தானத்தின் மற்றும் எந்த ஒரு மனிதாபிமான அடிப்படை கொண்ட ஒரு தேசத்தின் கடமை. அது போல பொருளாதார வளத்தை சுரண்ட வரும் முஸல்மான் களை திருப்பி அனுப்புவதும் தேசத்தின் கடமை. அமேரிக்கா போன்ற முன்னேறிய தேசங்கள் கூட பொருளாதாரத்தை சுரண்ட வரும் குடியேறிகளை தயவு தாக்ஷண்யம் பார்க்காது திருப்பி அனுப்புகிறது என்பது நிதர்சனம்.

  ஆனால் ஹிந்துஸ்தானத்தில் நடப்பது என்ன. இங்கு சரணார்த்திகளாக வரும் ஹிந்துக்களை சர்க்கார் சரணார்த்தியாக அங்கீகரிப்பதற்குக் கொடுக்கும் தொல்லைகளுக்கு எல்லையே இல்லை. ஹிந்துஸ்தானத்தில் சரணார்த்தியாக வரும் ஹிந்துக்களுக்கு உயிருக்கு மட்டும் தான் பாதுகாப்பு. வாழ்வுரிமைகள் கிட்டுவதற்கு மாமாங்கம் பல காத்திருக்க வேண்டும். தில்லியில் மஞ்சு கா திலாவில் அவ்வப்போது Baqi sthan ல் இருந்து வரும் ஹிந்து சரணார்த்திகளுக்கு பொதுஜனங்கள் மட்டும் தான் உதவி செய்கிறார்கள். அரசியல் ஓட்டுப்பொறுக்கிகள் இவர்களை எல்லைக்கப்பால் உள்ள நரகத்துக்கு எப்படி விரட்டலாம் என்பதில் மட்டும் குறியாக உள்ளனர். சொல்பமாக இங்கு வரும் ஹிந்து சரணார்த்திகளிடம் ஓட்டுப் பொறுக்கி அரசியல் வ்யாதிகளால் ஓட்டுப் பொறுக்க இயலாது என்பதால் அவர்களை மனித நேயத்துடன் கூட பார்க்க இயலாது என்பது தானே ஓட்டுப் பொறுக்குதலை அடிப்படையாகக் கொண்ட போலி மதசார்பின்மை போதிக்கிறது. அதே இங்கு கள்ளத்தனமாக பொருளாதார வளத்தை சுரண்ட எல்லை தாண்டி வரும் முஸல்மான் களுக்கு ஓட்டுப் பொறுக்கி அரசியல் வ்யாதிகள் கள்ள ஓட்டர் அட்டை முதல் ரேஷன் கார்டு கொடுப்பது வரைக்கும் என்னென்ன அராஜகம் செய்ய முடியுமோ அனைத்தும் செய்வர்களே. புத்திஜீவிகள் இந்த அராஜகங்களுக்கு புனுகு பூசி என்னென்ன குதர்க்க ந்யாயங்கள் கொடுக்க இயலுமோ அனைத்தும் கொடுப்பர் அதே சமயம் உயிருக்குப் பயந்து ஹிந்துஸ்தானம் வரும் ஹிந்து சரணார்த்திகளை அனைத்து குதர்க்க ந்யாயங்களையும் பொழிந்து நரகத்திற்கு விரட்டவும் செய்வார்களே.

  \எல்லோரும் இந்தியரே \

  அனைவருக்கும் பொதுவான ஒட்டு மொத்த வளர்ச்சியை நல்கி அனைவரும் ஹிந்துஸ்தானத்தில் அடுத்தவருக்கு தொல்லை தராது வாழும் நிலையைத் தான் ஒவ்வொரு ஹிந்துஸ்தான ப்ரஜையும் விரும்புவான்.

  வெறியில் உருவான பாகிஸ்தான் வெறியினாலேயே பிளந்து Baqi sthan மற்றும் பாங்க்ளா தேஷ் எனப்பிரிந்தது சரித்ரம். ஆங்கு ஹிந்துப் பெண்களுகு இழைக்கப்படும் பாலியல் சார்ந்த அநீதிகள் மற்றும் அனைத்து ஹிந்துக்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் மதவெறி சார்ந்தது என்பது வெட்ட வெளிச்சமானது. அதைப்பற்றி ஹிந்துஸ்தான சர்க்கார் ஏதும் செய்ய விழையுமா என்பது மனித நேயத்தில் அக்கரை உள்ள ஒவ்வொரு ஹிந்துஸ்தான ப்ரஜையும் அறிய விழையும் விஷயம்.

  மத வேறுபாடின்றி மதவெறித் தொல்லைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாகும் எல்லைக்கப்பால் உள்ள சஹோதர சஹோதரிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய அனைவரும் யோஜித்தல் நன்று.

 14. Avatar
  மலர்மன்னன் says:

  ஸ்ரீ க்ருஷ்ணகுமார், மும்பை திரை உலகம் ஃபைனான்சியர்களாக நடமாடும் முகமதிய கள்ளக் கடத்தல்காரகள் வசம் உள்ளது என்பதையே குறிப்பிட்டேன். இது நம் நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்து. ஏற்கனவே இது நிரூபணமாகியுள்ளது. தாவூத் இப்ராஹிம் ரிமோட் கண்ட்ரோலாக இயங்கி மும்பை படத் தயரிப்பாளர்கள் பலரை ஆட்டிப் படைப்பதாகக் கேள்வி. துபாயில் நடக்கும் நட்சத்திரக்கலை விழா ஆபாச நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவனும் இவனே! நம மும்பை ஆண் பெண் நடிகர்கள் அதில் போய் ஆட்டம் போட்டுவிட்டு வருகிறார்கள்!
  -மலர்மன்னன்

 15. Avatar
  Fathima.S says:

  “That is, All women should be learn any Self Protection/Martial Art. If you find any wrong with the society , take the action with out hesitatation”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *