இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் எழுத்தாளர் சுந்தா அவர்களின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப் பட்ட்து. இந்தக் கொண்டாட்ட்த்துக்கு ஏற்பாடு செய்திருந்த்து கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை. பேராசிரியர் கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பொன்னியின் புதல்வர் எனும் தலைப்பில் பல்லாண்டுகளுக்கு முன்னால் எழுதிய ஆசிரியர் சுந்தா என்பது இதற்கு ஒரு கூடுதல் காரணமாகும். இவ்விழாவுக்குச் செல்லா விட்டாலும், அது பற்றிய சேதிகளை அறிந்து மகிழ்ந்ததற்குக் காரணம் சுந்தாவை நான் சந்தித்து அளவளாவியுள்ளதுதான். அந்தச் சந்திப்பின் போது அவருடைய மேன்மைகளைப் புரிந்துகொள்ள வாய்த்தது.
1990 இன் தொடக்கம் என்று நினைவு. திருநெல்வேலி, பாட்டப்பத்து கிராமத்தைச் சேர்ந்த என் அலுவலகத் தோழி – எனக்கு மிகவும் மூத்தவர் – ஒருவர் சுந்தாவின் குடும்பத்தை அறிந்தவர். சென்னைத் தியாகராய நகரில் குடியேறியிருந்த அவரை ருக்மிணி எனும் அந்தத் தோழி என் வீட்டுக்கு ஒரு நாள் வந்திருந்த போது அவரைச் சந்திக்க வேண்டும் எனும் தன் விருப்பத்தைக் கூற, எனக்கும் பெரிய எழுத்தாளரான அவரைக் காணும் அவா இருந்த்தால் நாங்கள் இருவரும் ஒரு நாள் பிஞ்சாலா சுப்பிரமணியம் தெருவில் இருந்த அவரது வீட்டுக்குச் சென்றோம்.
இலக்கிய உலகம் பற்றியும், தமது சில அனுபவங்கள் பற்றியும், சில புகழ்பெற்ற பத்திரிகைகளின் ஆசிரியர்கள் பற்றியும் பல விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். ‘யாரிடமும் இவற்றையெல்லாம் சுந்தா சொன்னதாய்ச் சொல்லிவிட மாட்டாய்தானே?’ என்று என்னிடம் கேட்டுக்கொண்ட்தன் பிறகே அவற்றை யெல்லாம் பகிர்ந்து கொண்டார்!
அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கூட மனம் விட்டுப் பேசினார். பேச்சு வாக்கில், ‘நான் இளைஞனாக இருந்த போது மிகவும் அழகாக இருப்பேன்…’ என்று அவர் தொடங்கியதும், ‘ஏன்? இப்பவும்தான்! இல்லையா மாமி?’ என்று எங்களோடு அமர்ந்திருந்த திருமதி சுந்தா அவர்களைப் பார்த்துக்கொண்டே நான் வினவ, இருவருமே சிரித்து மகிழ்ந்தார்கள்.
சுந்தா தொடர்ந்தார்: ‘சின்ன வயதில் நான் அழகாய் இருப்பேனா? அதனால் என்னைச் சுற்றி எப்போதும் பெண்களின் கூட்டம் இருக்கும்!’ என்று அவர் ஆங்கிலத்தில் தொடர, “Even now you are surrounded by ladies! – இப்போதும் உங்க்ளைச் சுற்றிப் பெண்கள்தான் இருக்கிறார்கள்!” என்று நான் இடைமறித்தேன்.
‘இவளுக்கு இருக்கிற குசும்பைப் பாத்தியா? இப்பவும் என்னைச் சுத்திப் பெண்கள்தான் இருக்காளாம்!’ என்று அவர் தம் மனைவியிடம் முகம் சிவந்து கூறிச் சிரிக்க, அந்த அம்மாளும் கொல்லென்று சிரித்தார்.
தமது பேச்சிடையே பயங்கரமும் அருவருப்பும் நிறைந்த ஒரு தகவலையும் சுந்தா வேதனையுடன் கூறினார். அவ்வூரில் சிவப்புத் தோல் படைத்த பெண்கள் இறந்தால், அவர்களின் பிணங்களோடு உடலுறவு கொண்ட பின்னரே சுடுகாட்டு வெட்டியான்கள் அவற்றை எரிப்பார்களாம்! பிற ஆண்கள் சிலருக்கும் இப்பெண்பிணங்களை அனுபவிக்க வசதி செய்து கொடுத்து அவர்களிடமிருந்து காசு வசூலித்துக்கொள்ளுவார்களாம். இப்படியும் செய்வார்களா என்று அதிர்ந்து போனோம். இந்த அருவருப்பும், அநீதியுமான கொடுமையைச் சுந்தா அவர்கள் அக்கிராமத்தின் செல்வாக்கு மிகுந்த ஊழியரான பிறகு தலையிட்டு நிறுத்தினாராம். அதாவது, பெண்களின் சடலங்களை உடனடியாகவே உறவினர்கள் முன்னிலையில் எரித்தாக வேண்டும் என்று சட்டம் இயற்றினாராம்.
கல்கி பொன்விழாப் போட்டியில் மணிக்கொடி எனும் எனது வரலாற்றுப் புதினம் பரிசு பெற்றபோது நடந்த விழாவுக்கு வந்து என்னை நேரிலும் பாராட்டினார். இந்திய விடுதலைப் போராட்டப் பின்னணியில் அமைந்த அந்நாவல் மேலும் பரிசுகளையும் கவனிப்பையும் பெறும் என்று எனக்குக் கடிதமும் எழுதினார். அது உண்மையாயிற்று.
கல்கியில் அந்நாவல் தொடராக வெளிவந்து முடிந்த பிறகு கல்கிக்குத் தாம் எழுதிய பாராட்டுக் கடித்த்தில், ‘இந்தியாவுக்குக் காந்தியடிகளால் மட்டுமே விடுதலை கிடைத்துவிடவில்லை. பகத்சிங், நேதாஜி போன்ற புரட்சியாளர்களின் பங்கும் அதில் உள்ளது’ எனும் முடிவை நான் அதில் வெளியிட்டிருந்த துணிச்சலைப் பாராட்டி, சர்ச்சைக்குரிய கடிதத்தை அவர் எழுதினார்.
நாங்கள் விடை பெற்றுக் கிளம்புவதற்கு முன்னால், ‘என்னோட பொண்ணு ரமாமணி எவ்வளவு அழகாயிருப்பா, தெரியுமா? சினிமா ஸ்டார் மாதிரி இருப்பாளாக்கும்!’ என்று கூறிய பின் தன் மகள் – எழுத்தாளர் – ரமாமணி சுந்தரின் புகைப்படத்தை எடுத்து வந்து ஒரு தந்தைக்குரிய பெருமித்த்துடன் எங்களுக்குக் காட்டினார்.
அவர் பல பிரபலங்கள் பற்றிக் கூறியவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள முடியாவிட்டாலும் என்னை நம்பி அவற்றைச் சொன்ன அவர் பற்றிய வியப்பு இன்னும் எனக்கு அடங்கவில்லை.
(லண்டன் B.B.C. யில் பணியாற்றிய உயர் அதிகாரியாவார் திரு சுந்தா அவர்கள்.)
jothigirija@live.com
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19
- மருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி
- தாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்
- தூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்
- விளையாட்டு வாத்தியார் – 1
- ஒரு கவிஞனின் நாட்குறிப்பு
- வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்
- முனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 5
- நீங்காத நினைவுகள் – 2
- சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்
- வனசாட்சி – இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது
- தமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)
- புதிய வலை இதழ் – பன்மெய்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -1
- சுமைதாங்கி சாய்ந்தால் ……..
- ஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள் (க. சட்டநாதன், குப்பிழான் ஐ. சண்முகம்)
- மட்டக்களப்பில் வைத்து
- “ஓலைக்கிளிகள்” (அன்னையர் தினம்)….
- கொக்குகள் பூக்கும் மரம்
- ‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…
- பேரழகி
- ஒரு செடியின் கதை
- 2013 ஆண்டு அக்டோபரில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் இந்தியச் சுற்றுளவி மங்கல்யான்.
- கல்யாணக் கல்லாப்பொட்டி
- விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.
- புகழ் பெற்ற ஏழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏழை
- அக்னிப்பிரவேசம்-33