தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?

This entry is part 7 of 30 in the series 28 ஜூலை 2013

தாகூரின் கீதப் பாமாலை – 75

என்ன  திருவிளையாடல்  இது   .. ?

 Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

என்  காலை வெளிச்சத்தைத்

திரையிட்டு கண்களில் நீர்த் துளிகளைத்

திறந்து விட்டது  நம்மை

ஒருங்கிணைத்த பூமாலையை நீ  

அறுத்து  என்னைப்

பிரிந்த போது !

மிச்சம் விட்டுச் சென்ற தெல்லாம்

அர்த்த மற்றுப் போயின !

அமர்ந்தி ருக்கிறேன்  நானிங்கு

விழிகள் அப்பால்

தூரத் தொடுவானைப்

பார்த்தபடி !

 

அறிவு கெட்ட முறையில்  நான்

பிரிந்த பாதை நடுவே

தரைத் தூசியி லிருந்து எடுத்தேன்

ஓவ்வொன் றாகச் சிந்திய

பூக்களை !

அந்தப் பிரிவு நாட்களின்

அறிகுறி யாக 

எந்தச் சுவடும் எனக்குத்

தெரியாமல் போகு மென   

அறிந்திலேன்.

எந்தத் திருவிளை யாடலை நீ

அரங்கேற்றினாய்

புதிய வசந்தப் பொழுது

நழுவிச் செல்ல ? 

 

+++++++++++++++++++++++++++++

பாட்டு : 94   1929 டிசம்பரில் தாகூர்  68 வயதினராய்  இருந்த

போது  எழுதப்பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 23, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationவிண்ணப்பம்சிரட்டை !
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *