(1819-1892)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
எனதினிய உடம்பே !
மற்ற மனிதர், மாதர் விழையும்,
இச்சைகளை நான்
வெறுப்ப தில்லை !
ஊனுடல்
உறுப்புகளின் இச்சைகளைப்
புறக்கணிப்ப தில்லை !
ஆத்மாவின் இச்சைகளில் ஏற்படும்
வேட்கை, வெறுப்பில் நீ
விழுவதை நம்பி
ஏற்றுக் கொள்கிறேன் !
என் கவிதைகளில் உனக்கு
உண்டாகும்
விருப்பு, வெறுப்புகளை
வரவேற்கிறேன்.
மனிதர், மாதர், சதி பதிகள்,
சிறுவர்கள்,
தாய், தந்தையர்,
வாலிப ஆடவர், பெண்டிர்
காவியங்களை ஏற்று
ஆதரிக்கிறேன்.
ஆண், பெண் இருவரின்
அனைத்து உடல் அங்கத்துக்கும்
அளிப்பேன் மதிப்பு !
பெண்மை, மாதரின் அனைத்துப்
பண்புகள்,
பெண் கருவில் உதிக்கும்
ஆண் மகவு,
பெண்ணின் கருப்பை, முலைகள்,
முலைப்பால்,
முலைக் காம்புகள்,
கண்ணீர், சிரிப்பு, அழுகை,
காதல் நோக்கு,
காதல் மனக் கலக்கத் துயர்கள்,
மீட்சிகள், எழுச்சிகள்,
மாதர் வாயிதழ்க் குரலினிமை,
முணுமுணுப்பு,
எழுப்பும் கூக்குரல்,
இடுப்பழகு, நளின நடை,
எழில்முகம்,
கரம் சுற்றிய அணைப்பு,
உடல் கணப்பு,
உன்னிடத்திலும், என்னிடத்திலும்
உள்ளூறும் அமுத ரசம்,
பரிதி சுட்ட மேனி
உடல்நலம் செழித்த வாலிபம்,
இவை அனைத்தும்
உடல் உறுப்புகள் மட்டுமல்ல,
இவை ஆத்மா மூலம்
உருவானவை !
இப்போது சொல்வேன்
இவை யாவும்
ஆத்மா தான் என்று !
+++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.
****************
- சீதாயணம் நாடகம் -11 படக்கதை -11 சி. ஜெயபாரதன், கனடா
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 29
- பெண்ணுக்குள் நூறு நினைவா ?
- (அ)சிங்கப்பூர் அல்லது சிருங்காரப்பூர்
- வாக்காளரும் சாம்பாரும்
- முரண்பாடுகளே அழகு
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே [மீள் பதிப்பு] [பாரதி பிறந்த தினம் : டிசம்பர் 11]
- கர்ம வீரர் காமராசர்!
- ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்
- நீங்காத நினைவுகள் – 25
- அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1
- தாயகம் கடந்த தமிழ் 2014 கோயம்புத்தூர், இந்தியா ஜனவரி 20, 21,22
- மழையெச்ச நாளொன்றில்…
- முதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்
- அன்பின் வழியது
- எஸ்ஸார்சி கனவுமெய்ப்படும் – சாதிய கட்டமைப்பும் கட்டுடைப்பும்.
- அண்ணாத்தே ஹாசாரேயும், கேசரி வாலும்
- இலக்கியச்சோலை- வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி
- நிராகரிப்பு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் வடிப்பு ..!
- பாதை
- புகழ் பெற்ற ஏழைகள் – 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏழை
- பணம் காட்டும் நிறம்
- சில்லி விண்ணோக்கி முதன்முறையாக இரட்டை ஏற்பாட்டு விண்மீனைச் சுற்றும் விந்தைக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.
- நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்
- கடத்தலின் விருப்பம்
- திண்ணையின் இலக்கியத் தடம்-13
- மருமகளின் மர்மம் – 7
- ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு
- பாம்பா? பழுதா?
- ‘விஷ்ணுபுரம் விருது’