கொலு

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

ruthrapoem

 
அமெரிக்க மூதாதையர்களான 
செவ்விந்தியர்களின் ஒரு சிறு 
அழகிய அன்பான இனிய குடும்பம் இது.
அரிஸோனாவில் 
ஒரு தொல்பொருளியல் கண்காட்சியில் 
ஒரு சிற்பக்களஞ்சியமாக 
நவீனக்கலையில் வடிக்கப்பட்டுள்ளது.
இது.
 

கடல்கள் பிளந்தாலும்
மலைகள் மறைத்தாலும்
எல்லைகள் பிரித்தாலும்
தொப்பூள் கொடியின்
மலர்களில் 
என்றும் எப்போதுமே
அன்பின் மகரந்தங்கள் தான்.
 
மானிடவெளிச்சத்தின்
கொலு இது.
 
எல்லோருமாய்
பகுத்துண்டு வாழ்வதே
குடும்பம்
எனும்
குறுகிய வட்டம் கூட‌
சமுதாயமாய்
ஒரு நாடாய்
ஒரு உலகமாய்
விரியவேண்டும் என்பதே
மண் சுட்ட கனவு இங்கு.
வடிவு பிசைந்த கவிதை இங்கு.
 
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
 
எழுத்தாணி கொண்டு எழுதிய‌
வள்ளுவத்தை
சற்றே அழுத்தி
ஏ.கே நாற்பத்தி ஏழால்
சொல்லத்துடிப்பவர்களும் உண்டு.
அந்த துடிப்புகளின் மிச்சம்
துண்டு துண்டாய் சிதறிய கனவுகள்
மட்டுமே.
சோறில்லாமல்
குவியும் எலும்புக்கூடுகள் கூட‌
நவீனச்சிற்பங்களாய்
எத்தியோப்பியாக்களில்
கிடக்கின்றன.
கருப்பையிலிருந்து விழும்போதே
ரத்தம் இன்றி சதையும் இன்றி
எலும்புக்குப்பையாய்
ஜனிக்கும் தேசங்களும் உண்டு.
எங்கோ அவை கிடந்தால்
கிடந்து விட்டுப்போகட்டும்.
 
“அண்ணாந்து கும்பிடு.
கன்னத்தில் போட்டுக்கொள்.
அபிஷேகம் நடக்குது பார்”
 
தெய்வங்கள் பிணங்களாய்
கிடந்தாலும்
கோத்ரம் சொல்லி
அர்ச்சனை செய்தால் போதும்.
 

==========================

Series Navigationநெஞ்சு பொறுக்குதில்லையே…..தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2தினம் என் பயணங்கள் – 7பொறுமையின் வளைகொம்புகாத்திருப்புதொடுவானம் 5.எங்கே நிம்மதிவால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கைவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…திண்ணையின் இலக்கியத் தடம்- 24சீதாயணம் நாடகப் படக்கதை – 22
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *