பாலகுமாரசம்பவம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 21 of 22 in the series 16 நவம்பர் 2014

எஸ். ஸ்ரீதுரை

கடிந்து கொண்டவர்கள் கை நீட்டுகிறார்கள் –
முகத்தைத் திருப்புகிறான் மனிதன்,
முந்திச் சிரிக்கிறது குழந்தை;
புதிதாக வந்த அறிமுகம் புன்சிரிப்பு சிரிக்கிறது –
சந்தேகப் படுகிறான் மனிதன்,
சந்தனமாய்ச் சிரிக்கிறது குழந்தை;
வேற்று மனிதன் இனிப்பை நீட்டுகிறான் –
விலகிச் செல்கிறான் மனிதன்,
விரைந்து சுவைக்கிறது குழந்தை;
பறித்துக் கொண்டவனைப் பகைக்கிறான் மனிதன்,
பிடுங்கிய பொம்மை திரும்ப வந்ததும்
பழம் விடுகிறது குழந்தை;
விரோதம் சந்தேகம் வேற்றுமை பகைமை
எதுவும் பாராட்டாமல்
குழந்தைகளாகவே இருந்துவிட்டுப் போவோமே….!

Series Navigationநிலையாமைசாவடி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *