This entry is part 10 of 17 in the series 1 பெப்ருவரி 2015

 

– சேயோன் யாழ்வேந்தன்

(seyonyazhvaendhan@gmail.com)

 

முதலில்

நிறத்தில்

வர்ணம்

தெரிகிறதாவெனத்

தேடுகிறோம்

 

நெற்றியில் தெரியவில்லையெனில்

சட்டைக்குள் தெரியலாம்

சில பெயர்களிலும்

வர்ணம் பூசியிருக்கலாம்

 

வார்த்தையிலும்

சில நேரம்

வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்

 

நான்கு மூலைகளில்

மஞ்சள் தடவிய

திருமண அழைப்பிதழ்களில்

முந்தைய தலைமுறையின்

வால்களில்

வர்ணங்கள் தெரிகின்றன

 

சிவப்பு பச்சை நீலம்

அடிப்படை வர்ணங்கள்

மூன்றென்கிறது

அறிவியல்

நான்காவது

கறுப்பாக இருக்கலாம்

Series Navigationபொன்பாக்கள்சிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்