ஈரோடு புத்தகக் கண்காட்சி தமிழகத்தில் நடைபெறும் புத்தக்க் கண்காட்சியில் முக்கியத்துவம் பெற்றதாய் விளங்கி வருகிறது. மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு இரு முறை வருகை தந்து உரைகள் நிகழ்த்தியுள்ளார். அந்த உரைகளைத் தொகுத்து ஈரோடு புத்தகக் கண்காட்சியின் முக்கியத் தூணாக விளங்கும் . ஸ்டாலின் குணசேகரன் இந்நூலை வெளியிட்டுள்ளார். முதல் உரை “ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் “ என்ற தலைப்பில் அமைந்திருந்தது. கற்பனை சக்தி கொண்ட சமுதாயத்தை மூத்த பத்திரிக்கையாளர்கள் எழுதத் தூண்ட வேண்டும். புதிதாக வருகின்ற புதிய சிந்தனையுடன் இருக்கின்ற சமுதாய விழிப்புணர்வுடைய இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும். எழுத்தாளர்கள் நல்ல எண்ணங்களை உருவாக்கிப் பலப்பல லட்சியக்கனவுகளை எழுத்து மூலம் மக்களிடையே கொண்டு வரவேண்டும் . இவர்களுடைய எழுத்துக்கள் இளம் தலைமுறையினருக்கு எதிர்காலச் சிந்தனையை உருவாக்குவதோடு அந்த இளம் மனங்களை நல் வழிப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களை அந்த உரையில் வலியுறுத்தியுள்ளார். அவரது வாழ்க்கையில் மூன்று நூல்கள் அவரை வழி நடத்தியதாகக் குறிப்பிட்டார். 1. வில்லியன் வாட்சன் எழுடிய “ லைட் ப்ரம் மெனி லேம்ப்ஸ்” 2. திருக்குறள் 3. டெனிஸ் வைட்லி எழுதிய ” எம்பயர்ஸ் ஆப் தி மைண்ட் “ . இம்மூன்று நூல்களும் அவரின் வாழ்க்கையின் பல முக்கியக் கட்டங்களில் வழிநடத்தியிருப்பதை அவர் விரிவாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்.புத்தகம் எப்படி நம்மை அறிவார்ந்த சமுதாயத்திற்கு இட்டுச் செல்லும். அறிவார்ந்த சமுதாயத்தின் ஆரம்பம் என்ன, அறிவின் இலக்கணம் என்ன என்பதையும் விரிவாகச் சொல்லியிருந்தார். இரண்டாம் உரை “ புத்துலகை உருவாக்கும் புத்தகங்கள் “ என்ற தலைப்பிலானது. அந்த உரையில் மூன்று விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்திப் பேசியுள்ளார். அவர்கள் சர் ஹம்ப்ரி டேவி, மைக்கேல் பாரடே, தாம்ஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் அவர்கள். உலகின் வளர்ச்சியில் அபாரமான சாதனைகளுக்கு அச்சாரங்களாய் புத்தக வாசிப்பு இருக்கிறது. உலகத்திலேயே பெரிய சாதனையாளர்களை, பெரிய மனிதர்களைப் பற்றிப் படித்து வளர்ந்த மாணவர்களின் கற்கும் திறன் மென்மேலும் வளரும் . அப்படிப்பட்டப் புத்தகங்களைப் படித்து அகத் தூண்டுதல் ஏற்பட்ட பல அனுபவங்களைக் பற்றி அவ்வுரை எடுத்துரைத்திருக்கிறது. வாசிப்பு மூலமான சமுதாயத்தால் பண்பாடு நிறைந்த, தரமான கல்வி, சமூகப் பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியா மாற வேண்டும் என்ற ஆவல் அவரின் உரைகளில் தெளிவாகிறது.மற்றும் புத்தக வாசிப்பு மனித மனங்களை விரிவுபடுத்துவதையும் விளக்கியுள்ளார்
(( அப்துல்கலாம் உரைகள் .தொகுப்பு : த. ஸ்டாலின் குணசேகரன் ( வெளியீடு; என்சிபிஎச் , சென்னை ) ))
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 6 நேர்ஸ் சாந்தி
- அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.
- சுசீலா பெரியம்மா
- சொல்லியும் சொல்லாமலும் – பாகம் இரண்டு
- சொல்லியும் சொல்லாமலும் – பாகம் மூன்று
- சொல்லியும் சொல்லாமலும் – பாகம் ஒன்று
- மனிதம் உயிர்த்த பெரு மழை
- அடையாளம்…
- அப்துல்கலாம் உரைகள் .தொகுப்பு : த. ஸ்டாலின் குணசேகரன் -அறிவார்ந்த சமூகம் உருவாக…
- தாய்மொழி
- தொடுவானம் 142. தடுமாற்றம்
- தீபாவளி
- ”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”
- முகில் காடு
- வளவ. துரையன் எழுதிய ”சாமி இல்லாத கோயில்” [சிறுகதைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு நிகழ்வு
- செல்வி கார்த்திகா மகேந்திரனின் நூல் அறிமுகமும் இன்னிசை நிகழ்வும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! செங்குள்ளி விண்மீனை அண்டக்கோள் உருவாக்கும் பண்டைத் தட்டு சுற்றுவதைக் கண்டுபிடித்தார்
- கவி நுகர் பொழுது-12 பொம்பூர் குமரேசன் ( பொம்பூர் குமரேசனின்,’அப்பாவின் வேட்டி’, கவிதை நூலினை முன்வைத்து)
- நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடு