பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
++++++++++++++++++
[43] நண்பர்காள், மதுக் கூத்தடிப்புத் துணிவில்
நடந்ததென் வீட்டில் எனக்கிரண்டாம் திருமணம்;
காரணம் இல்லை, பழங் கட்டிலுக்கு மணவிலக்கு
திராட்சைக் கொடி மகள் என் மனைவியாய் ஏற்பு.
[43]
You know, my Friends, with what a brave Carouse
I made a Second Marriage in my house;
Divorced old barren Reason from my Bed,
And took the Daughter of the Vine to Spouse.
++++++++++++++++++
[44] மாலையில் மதுக்கடை வாசலில் வாய் பிளந்து
மங்கிய வேளையில் வந்தது ஓர் தேவதை போல்
பானை ஒன்றைச் சுமந்து கொண்டு தோளில்;
சுவைக்கச் சொன்ன தென்னை, திராட்சை ரசம்.
[44]
And lately, by the Tavern Door agape,
Came stealing through the Dusk an Angel Shape
Bearing a Vessel on his Shoulder; and
He bid me taste of it; and ’twas – the Grape!
+++++++++++++++
[45] திராட்சை, தர்க்கப்படி பூரண மானது
எழுபத்தி ரண்டு குண்டா எதிராய்ச் சொல்லும்
எளிய ரசவவாதி சில நேரத்தில் மாற்றுவான்
வாழ்வின் ஈய உலோகத்தைத் தங்கமாய்.
[45]
The Grape that can with Logic absolute
The Two-and-Seventy jarring Sects confute:
The subtle Alchemest that in a Trice
Life’s leaden Metal into Gold transmute.
+++++++++++++++++
- அசோகமித்திரன் நினைவுகள் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.
- அசோகமித்திரன் – கோட்டோவியம் – ஒரு அஞ்சலி
- சூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளுடோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறது
- உயிரோட்டம்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 5
- புஜ்ஜிம்மா…….
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்
- தொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்
- தமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …
- ஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள்
- சமையல்காரி
- பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) – இடைக்காலம் தொடர்ச்சி
- அம்பலம்