என் உலகத்தில் நீ இல்லை

This entry is part 8 of 15 in the series 21 மே 2017

 

 

 

 

அறைந்து

பூட்டப்பட்டுவிட்டது கதவு !

 

அதன் சாவி

ஒரு முரட்டுக் கரத்தால்

யாரும் மீட்டெடுக்க முடியாத

ஆழ் கடலில் வீசப்பட்டுவிட்டது !

 

மனிதர்களுக்குப் புரியாத

குயிலின் குரலில்

அதை நான்

முகரியில் இசைத்துக் கொண்டிருக்கிறேன்

 

எனக்கான உலகத்தில்

தனிமையின் விரல் பிடித்தபடி

என் கூடவரும் சொற்களால்

வண்ண வண்ண

உருவங்கள் செய்து மகிழ்கிறேன் !

 

எப்போதும்

கோடையின் தகிப்பை உண்டு

காலம் நொண்டியடிக்கிறது !

 

சாத்தான்கள் பழித்த வண்ணம்

என்னைக் கடக்கின்றன

மனிதர்கள் சூடா மாலைகளை

எனக்கு அணிவித்தபடி …

 

 

என் உலகத்தில் நீ இல்லை

என்ற எண்ணம்

வான் வெளியாய்ப் பரவுகிறது !

 

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Series Navigationவேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை கண்காட்சி  கிருஷ்ணா !
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *