“ ஸ்ரீ: “
நடந்து செல்லக்
கைத்தடி தேவைப்படுகிறது
எதற்குக் கிளம்பினேன் என்பதே
அவ்வப்போது மறந்து போகிறது
கண்ணாடி இருந்தும்
படிக்கின்ற எழுத்துக்கள்
தெளிவாக இல்லைதான்
காது கேட்கும் கருவியை
அடுத்த மாதம் பென்ஷன் வாங்கி
ரிப்பேர் செய்ய வேண்டும்
மூட்டு வலி மாத்திரையை
ஒருவேளை மறந்தாலும் ரணகளம்தான்.
எது எப்படிப் போனால் என்ன
எனக்கு ரஸ்தாளிப் பழம்
வாங்கித்தருவாயா என்று
ஆசையாய்க் கேட்கின்ற
என் அம்மா இருக்கும் வரையில்
நான் ஓர் எழுபது வயதுச் சிறுவன்தான்.
@@@@
மின்னஞ்சல் முகவரி : sriduraiwriter@gmail.com
- கதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சி
- “கால் பட்டு உடைந்தது வானம்” எஸ்தரின் கவிதைகள் குறித்து எனது பார்வை
- அளவளாவல். புத்தகம் பகிர்தல்
- அதனாலென்ன…
- ‘இலக்கிய வீதி’ அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது’
- Pusher Trilogy
- Ushijima the Loan Shark
- பெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வௌிப்படும் தீவிரவாதம்