முக கவசம் அறிவோம்

முக கவசம் அறிவோம்

முனைவர் ஜி.சத்திய பாலன் உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது  நோய் பாதிப்பில்  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் பல லட்சங்களை கடந்துள்ளது சீனாவில் கடந்த ஆண்டின் இறுதியில்   தொடங்கிய இந்த பெரும் கொள்ளை நோயானது இன்று…

கவிதைகள்

திறன் ஆய்வு அவருடன் அங்கிருந்த நான் கை குலுக்கவில்லை. ஆனால் அருகாமையில் நின்று கொண்டு பார்த்தவாறிருந்தேன். அவருக்கு மாறுகண். ஒற்றைக் கை.  மூன்று கால்கள். உதய வணக்கம்  கண்ணுக்கு நல்லது  என்று  கிழக்கே பார்த்துக் கும்பிட்டார். அது மேற்கே சரிந்த பார்வை…

வெகுண்ட உள்ளங்கள் – 6

கடல்புத்திரன் அங்கே பாபுவோடும் லதாவோடும் விளையாடுற ஆளைப் பார்த்த போது இருவருக்கும் விசயம் விளங்கி விட்டது. “மன்னி, அடுப்பிலே தண்ணி வைத்திருந்தா தேத்தண்ணி ஊத்துங்கோ” என்றான். “இண்டைக்கு, சமையல் மூக்கை துளைக்கிறதே” என்று வேறு கேட்டான். “உங்க வீட்டை விட என்ன…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

இல்லாதிருக்கும் அகழி காலத்தின் அடர்கருநிழல் படர்ந்த உருவம் கண்ணெதிரே நிற்கக்கண்டும் அடையாளந்தெரியாதுழலும் அக்கணம் தான் செய்யாத குற்றத்திற்காகத் தவித்துத் தண்ரனைையனுபவித்துக் கூனிக்குறுகி அவமானப்பட்டுநிற்கும் உள். அடையாளமெனல் தோற்றக்கூறுகளுக்கு அப்பாலும் நீண்டுகொண்டேபோக அப்பட்ட அந்நியமாதலைக் காட்டிலும் அவலமாய் அடுத்தடுத்து நிற்கும்போதும் இடையோடும் கண்ணுக்குத்தெரியா…

சாகித்ய அகாதமி விருது (2015) பெற்ற “இலக்கியச் சுவடுகள்” – ஆ.மாதவன்

ஜெ.பாஸ்கரன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆவுடைநாயகம் - செல்லம்மாள் தம்பதியினருக்குத் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் (1934) மாதவன். மலையாள வழிக் கல்வி கற்றாலும், தமிழின் மீதான பற்றால், தமிழ் இலக்கியங்கள் வாசித்து தமிழ் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். 50 களில் திராவிட இயக்கம்…

பவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்

கோ. மன்றவாணன் நம் திரையரங்குகளில் படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பும் இடைவேளையின் போதும் ஸ்லைடு போடுவார்கள். பெரும்பாலான ஸ்லைடுகளில் புகை பிடிக்காதீர்... எச்சில் துப்பாதீர்... முன் இருக்கையில் கால் நீட்டாதீர்... இருக்கை மாறி அமராதீர்... எனக் கட்டளைகள் இருக்கும். பின்னர் ஸ்லைடு…

கை கூட வேண்டும் அன்பு நடமாடும் கலைக் கூடம்

           எஸ். ஜெயஸ்ரீ         சமீபத்தில் பாவண்ணனின் ஒரு சிறுகதை படித்தேன். கிணறு என்ற தலைப்பிட்டு எழுதப்பட்டது.  ஒரு தெருக்கூத்தில் பாடப்பட்ட வரி “ பறையன் மாரப்பன் பாடெடுத்த வல்கிணற்றில் நிறைகுட நீர் எடுத்துத் திரும்பும் பெண்டிரை….” இந்த வரிகளை மனதில்…
தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)

தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)

ஸிந்துஜா  பல புத்தகங்களை எடுத்து நாம் படிக்கிறோம், அந்த நேரத்தைக் கழிக்கவென்று. சிலசமயம் சுவாரஸ்யம் மேலிட்டும்.  படித்து முடித்தபின் அவை புத்தக அலமாரிகளில் போய் மீதி வாழ்வைக் கழிக்கின்றன. அல்லது பேப்பர்காரரின் தராசை அடைகின்றன. ஆனால், சில புத்தகங்கள் ! அவற்றை…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

பறக்கும் பலூன்! சிறுமி அத்தனை ஆர்வமாய் அத்தனை ஆனந்தமாய் அத்தனை அன்பாய் அத்தனை அழகாய் ஒரு பலூனை ஊதுகிறாள். முழுமுனைப்போடு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஊதி ஒரு கால்பந்து அளவுக்கு அதை உப்பவைத்து ஒரு கையின் இருவிரல்களால் பலூனின் திறப்பை இறுகப் பிடித்தபடி…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ் இன்று (28 ஜூன் 2020) வெளியாகியுள்ளது. இந்த இதழ் எங்கள் 12 ஆம் ஆண்டின் துவக்கத்தையும் கொண்டாடுகிற ஒரு சிறப்பிதழ். இதை ஸ்பானிய மொழி எழுத்தாளர், ரொபெர்டோ பொலான்யோவை மையமாகக் கொண்ட…