சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று

This entry is part 11 of 11 in the series 5 ஜூலை 2020

அழகர்சாமி சக்திவேல் அந்த அதிகாலைப்பொழுதில், சிங்கப்பூரின், பெடோக் பேருந்து நிலையத்திற்குள், நான் வேகமாக உள்ளே நுழைந்தேன். சீக்கிரமே கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில், வீட்டில், தேநீர் கூட அருந்தாமல் வந்துவிட்டேன். எனது இந்தப் பயணம், மலேசியாவிற்குள் செல்லும் மூன்று மணி நேரப் பயணம் ஆகும். போகும் வழியில், தேநீர் அருந்தினால், போய்ச் சேரும் நேரம் அதிகமாகும். எனவே, இங்கேயே ஒரு தேநீர் குடித்துவிட்டு, அப்புறம் பஸ்ஸிற்குள் ஏறிக்கொள்வோமே” என்று மனது கட்டளையிட, தட்டமுடியாமல், நான் பேருந்துநிலைய வளாகத்திற்குள்ளேயே […]

தக்கயாகப் பரணி தொடர்ச்சி

This entry is part 10 of 11 in the series 5 ஜூலை 2020

                                           மதிதுரந்து வரவொழிந்த மதம் நினைந்து சதமகன் பதிதுரந்து படைஅயின்று சிறிதவிந்த பசியவே.          [131] [மதி=சந்திரன்; சதமகன்=இந்திரன்; பதி=இந்திரலோகம்; அயின்று=உண்டு; அவிந்த-அடங்கின] இந்திரன் சந்திரனை விரட்டுகிறான். அதனால் சந்திரன் வெளிவராமல் பாதுகாப்பாய் ஒளிந்து கொள்கிறான். இதைக் கண்ட பேய்கள். இந்திரலோகம் சென்று இந்திரனுடன் போர் செய்து அவனை விரட்டுகின்றன. அப்போரில் இறந்த தேவர்களின் உடல்களைத் தின்று சில பேய்கள் தம் பசி ஆறினவாம். =====================================================================================                                   கருநிறம் கொடுஉருவு கொம்பு வெருவும் உம்பர் கழிவிடும் […]

மாத்தி யோசி

This entry is part 9 of 11 in the series 5 ஜூலை 2020

கே விஸ்வநாத்  நான் எப்பவும் போல பொழுது போகாமல் வாட்ஸப் மெசேஜை, நோண்டிக் கொண்டிருந்தேன். என்னுடைய நண்பர் ஒருவர், அவருக்கு வந்த  ஒரு மெசேஜை எனக்கு  ஃபார்வட்    பண்ணி  இருந்தார். அதில் வந்த மெசேஜ்,   கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. அது ஒரு நிறுவனத்தின் விளம்பரம் மாதிரி தெரிந்தது. அதில்       “தக்க கொரோனா பாதுகாப்புடன், உங்கள் சௌகரியத்திற்கு ஏற்ப, சிறந்த முறையில் எல்லா விதமான ஹேர் கட்டிங், ஹேர் டையிங், ஷேவிங்,  உங்கள் […]

தனிமை

This entry is part 8 of 11 in the series 5 ஜூலை 2020

      இருவர் படுப்பதுபோலான அந்த அகலக் கட்டில் உறாலில் நடுநாயகமாய்க் கிடந்தது. அதை அந்த இடத்தில் கொண்டு வந்து போட்டது நான்தான். அதற்கு முன் எதிரேயுள்ள அறையில்தான் அது கிடந்தது. அங்கே குளிர் சாதனம் உண்டு. ஆனால் இரவில் அங்கே கதவை அடைத்துக் கொண்டு படுக்க எனக்கு பயம். யாரேனும் திருடன் நுழைந்து அறைக்கதவை வெளியே சாத்தி என்னை அடைத்து விட்டு, இருப்பதையெல்லாம் திருடிக் கொண்டு போய் விடலாம் என்று தோன்றியதால் அந்த இரும்புக் கட்டிலை உறாலுக்கு […]

முக கவசம் அறிவோம்

This entry is part 7 of 11 in the series 5 ஜூலை 2020

முனைவர் ஜி.சத்திய பாலன் உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது  நோய் பாதிப்பில்  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் பல லட்சங்களை கடந்துள்ளது சீனாவில் கடந்த ஆண்டின் இறுதியில்   தொடங்கிய இந்த பெரும் கொள்ளை நோயானது இன்று உலகம் முழுவதும் பரவி விட்டது இந்நிலையில் புதிய மருந்துகளுக்கான  ஆய்வுகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக ஆராய்ந்துகொண்டுள்ளது ஆனால்  தற்சமயம் மனிதர்களிடம்  இந்த நோயிடமிருந்து காப்பதற்க்கு உள்ள  பிரதான ஆயுதங்கள்  முக கவசம், தனிமனித இடைவெளி […]

கவிதைகள்

This entry is part 6 of 11 in the series 5 ஜூலை 2020

திறன் ஆய்வு அவருடன் அங்கிருந்த நான் கை குலுக்கவில்லை. ஆனால் அருகாமையில் நின்று கொண்டு பார்த்தவாறிருந்தேன். அவருக்கு மாறுகண். ஒற்றைக் கை.  மூன்று கால்கள். உதய வணக்கம்  கண்ணுக்கு நல்லது  என்று  கிழக்கே பார்த்துக் கும்பிட்டார். அது மேற்கே சரிந்த பார்வை போல்  எனக்கென்னவோ தோன்றிற்று.  ஒற்றைக் கையைப் பார்த்தபடி  பெருமிதமாக உரைத்தாராவர். ‘ஒற்றைக் கைக்கு  ஏது வலம்?  ஒற்றைக் கைக்கு  ஏது இடம் ? அன்னம் புசிக்க அதுவேதான். ஆய் கழுவவும் அதுவேதான்’. சிரித்தபடியே முன் சென்றார். […]

வெகுண்ட உள்ளங்கள் – 6

This entry is part 5 of 11 in the series 5 ஜூலை 2020

கடல்புத்திரன் அங்கே பாபுவோடும் லதாவோடும் விளையாடுற ஆளைப் பார்த்த போது இருவருக்கும் விசயம் விளங்கி விட்டது. “மன்னி, அடுப்பிலே தண்ணி வைத்திருந்தா தேத்தண்ணி ஊத்துங்கோ” என்றான். “இண்டைக்கு, சமையல் மூக்கை துளைக்கிறதே” என்று வேறு கேட்டான். “உங்க வீட்டை விட என்ன புதிதாய் இருக்கப் போகிறது தம்பி” என்றார். அண்ணன் கறிக்கு கொண்டு வார போது அவன் வீட்டயும் குடுத்து அனுப்பி விடுவான். அப்பன் கரையிலிருந்து மிச்சத்தை விற்று விட்டு வருவான். தண்ணியை எடுத்து அடுப்பிலே வைச்சவர். […]

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 4 of 11 in the series 5 ஜூலை 2020

இல்லாதிருக்கும் அகழி காலத்தின் அடர்கருநிழல் படர்ந்த உருவம் கண்ணெதிரே நிற்கக்கண்டும் அடையாளந்தெரியாதுழலும் அக்கணம் தான் செய்யாத குற்றத்திற்காகத் தவித்துத் தண்ரனைையனுபவித்துக் கூனிக்குறுகி அவமானப்பட்டுநிற்கும் உள். அடையாளமெனல் தோற்றக்கூறுகளுக்கு அப்பாலும் நீண்டுகொண்டேபோக அப்பட்ட அந்நியமாதலைக் காட்டிலும் அவலமாய் அடுத்தடுத்து நிற்கும்போதும் இடையோடும் கண்ணுக்குத்தெரியா அகழியில் மறைந்திருப்பன முதலைகளோ மூழ்கடிக்கப்பட்ட மூச்சுத்துளிகளோ மலர்களோ மறுவாழ்வோ இறங்கிப்பார்த்துவிடலாமென்றால் இல்லாதிருக்கும் அகழியின் நீராழம் கணுக்காலளவோ கழுத்தளவோ ……. கண்டறியும் வழியறியாது கலங்கிநிற்கும் கால்களைக் கீழிழுத்தவாறிருக்கும் பிணமாய் கனக்கும் மனம். ஒரு கதையின் கனபரிமாணங்கள் […]

சாகித்ய அகாதமி விருது (2015) பெற்ற “இலக்கியச் சுவடுகள்” – ஆ.மாதவன்

This entry is part 3 of 11 in the series 5 ஜூலை 2020

ஜெ.பாஸ்கரன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆவுடைநாயகம் – செல்லம்மாள் தம்பதியினருக்குத் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் (1934) மாதவன். மலையாள வழிக் கல்வி கற்றாலும், தமிழின் மீதான பற்றால், தமிழ் இலக்கியங்கள் வாசித்து தமிழ் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். 50 களில் திராவிட இயக்கம் விளைத்த விழிப்புணர்ச்சி தமிழிலக்கியத்துக்கே புதிய உத்வேகத்தைத் தந்தது – கேரளத் தமிழ்ப் பகுதிகளிலும் அதன் தாக்கம் இருந்தது. “மலையாளக் கதைகளின் மொழிபெயர்ப்பில் துவங்கி, பொழுதுபோக்கு காதல் கதைகள், திராவிட இயக்க எழுத்துக்களின் சொல் அலங்கார […]

பவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்

This entry is part 2 of 11 in the series 5 ஜூலை 2020

கோ. மன்றவாணன் நம் திரையரங்குகளில் படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பும் இடைவேளையின் போதும் ஸ்லைடு போடுவார்கள். பெரும்பாலான ஸ்லைடுகளில் புகை பிடிக்காதீர்… எச்சில் துப்பாதீர்… முன் இருக்கையில் கால் நீட்டாதீர்… இருக்கை மாறி அமராதீர்… எனக் கட்டளைகள் இருக்கும். பின்னர் ஸ்லைடு வழியாக விளம்பரம் போட்டார்கள். தற்போது விளம்பரங்கள் எல்லாம் குறும்படங்களாக உருவாக்கப்பட்டுத் திரையிடுகிறார்கள். இந்த Slilde என்பதைத் தமிழில் படச்சில்லு என்று சொல்லலாம். தற்காலத்தில் பவர் பாயிண்ட் என்ற மென்பொருள் வழியாகவே ஸ்லைடுகளை உருவாக்கிக் காட்சிப்படுத்துகின்றனர். […]