ஆர். வத்ஸலா
“நீங்க இருந்தா
நிறுத்த மாட்டா”
வெளியில் தள்ளி
கதவை சாத்தினாள்
இரக்கமற்ற ஆசிரியை
தெருக்கோடி போகும் வரை கதறல்
அம்மா…
தாத்தா…
எங்கள்
வயிறு கலங்க
திரும்பியதும்
அம்மா கேட்டாள்
“அழுதெயா?”
“கொஞ்சூண்டுதான்”
என்றது என் குஞ்சு
கன்னத்தில்
காய்ந்துபோன
கண்ணீர் கோட்டுடன்.