This entry is part 2 of 8 in the series 5 பெப்ருவரி 2023

கு.அழகர்சாமி

(1)

பாழ்

ஒன்றும்

இல்லாதிருத்தலே

இருத்தலாகிய

இருத்தல்

பிடிபடாது

போய்க் கொண்டே

இருத்தலின்

வியாபகமா?

ஒன்றும்

விளையாதவைகள்

வேர் விட்டு

கிளைத்து

விளைந்த

வெற்றின்

வெறுங்காடா-

விதானமில்லாதலிருந்து

தனக்குத் தானே

தூக்கிலிட்டுக் கொண்ட

சூன்யம்

எதுவோ

அதுவா-

பாழ்?

(2)

பொட்டல்

ஊரில் தெருத் தெருவாய்

சைக்கிள் விட்டுத் தேடினாலும்

தேட முடியுமா, இப்போது ஊராகிப் போன,

சிறு வயதில் நான் வியர்க்க வியர்க்க

சைக்கிள் ஓட்டிப் பழகிய

தெருக்களென்று இல்லாத பொட்டலின்

ஒரே தெருவில்லாத தெருவாய்

விரிந்திருந்த அந்தப்

பாழ் வெளியை?

கு. அழகர்சாமி

Series Navigationமொழிஓ மனிதா!