ரா. செல்வராஜ்
டீ ‘ சாப்பிடும் போது ஏற்படும் ஒரு சில சாகசங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
“டீ ” என்பது ஒரு ‘குடிநீர்’ என்பதைத் தாண்டி , அது ஒரு
ஊக்க சத்தியாக,
உந்து சக்தியாக,
சிந்தனைப் பெருக்காக,
சிறகடிக்கும் எண்ணங்களை சீர் செய்யும் ஒரு யாகமாக,
சமூக உரையாடல்களின் ஒரு அங்கமாக,
மேலும் சொல்லப் போனால் ஏழைகளின் பங்காளியாக ,
ஒரு விருந்துக்கு ஒப்பான ஒரு மனநிறைவை ஏற்படுத்தித் தரும் ஆன்ம பலமாக ….( அறிமுகம் ஏற்பட்டு ஒரு சில நொடிப் பொழுதில் நாம் அழைப்பது – வாங்க’ டீ ‘ சாப்பிட்டுக் கொண்டே பேசலாம். ஆக இங்கே பணம் பெரிது இல்லை ; பெரிதினும் பெரிது அகம் !!.)
நம்மிடையே குடி கொண்டு இருக்கும் இந்த ‘டீ ‘ அதிக செலவு இல்லாமல், நம்மை பலரிடம் அறிமுகம் செய்கிறது.
இந்த ‘உலவியலை’ ஆராய்ச்சி செய்பவரிடம் விட்டு விடுகிறேன்.
-என்னுடைய வாதம் ; ஏழை ,பணக்காரன் பேதம் இன்றி ஒரு சில நேரங்கள் நம்மை இணைக்கின்றன. (உதாரணமாக ரயில் பயணங்கள்)
இதை தமிழில் “தேனீர் ” என்று சொல்கிறோம்.
மீண்டும் – தேனீர் பற்றிய உண்மை தரவுகள் எழுத்து அறிவித்த இறைவனுக்கே சாத்தியம்.
ஆம் ! தேனும் , (ஆம் Tea Cation தேன் மாதிரி இருப்பதனால் ) பாலும் ஒரு சேரக் கலந்து அதில் சிறிது சர்க்கரை இட்டு நன்றாக ஆற்றி , இலஞ்சூட்டுடன் பருகும் போது ஏற்படும் ஒரு “தனிமை” ; முதல் தன்னை மறந்து பிறரிடம் உளாவும் போது ஏற்படும் ” அலப்பறை” வரை நம்மை கொண்டு செல்லும் சக்தி இந்த “தேனீருக்கு” உண்டு.
பல ரகசியங்கள் ‘டீ’ கடையில் உடைக்கப் படலாம்.
eg: வங்கியில் கிளை மேலாளரின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய புரிதல் “off -the record ” – வங்கி ஊழியர்களின் உரையாடல்கள் , மாலைப் பொழுதில் தேனீர் – கடைகளில் நடக்கும்.
ஆகவே நமக்கு முதலில் தோழனாய், சகோதரனாய், நண்பனானாய், உற்ற உறவினனாய் , ஏன் எதிரியை கூட சமாளிக்கும் உத்தியினை கற்றுக் கொடுக்க வள்ள திறன் வாய்ந்தது அந்த ” டீ” என்றால் மிகையாகாது. அந்த சமாளிக்கும் திறன் என்ற கற்பனை “டீ”யினால் தான் எனக்கு வந்தது. “டி” என் வந்தனம்.
ஆகவே ! ஒன்று மட்டும் உறுதியாய் சொல்வேன்.
நீங்கள் செலவு செய்ய வேண்டாம்.
ஏதாவது சந்தர்பத்தில், உங்களுக்கு வேலை செய்த பணியாளர்களிடம் சேர்ந்து “டீ” அறுந்துப் பாருங்கள்.
நாமும்” பாரதி “ஆகலாம். முதலில் “டீ” இருந்து தொடங்குவோம்.
ஜப்பானியர்கள் ” டீயை ” சொட்டு சொட்டாக அறுந்துவார்கள் என்றும், அது அவர்களின் கலாச்சார ,பண்பாட்டு குறியீடு என்றும் படித்து இருக்கிறேன்.
சரி, நம்ப விஷயத்துக்கு வருவோம்:
ஒரு பஸ் பிரயாணம் அல்லது ரயில் பிரயாணம் நாம் ஒரு 5 அல்லது 6 மணி நேர அலவலாவிய பிறகு பிரியும் நேரத்தில் “நம் சுயபுராணத்தையும் அவரது பெரிய புராணத்தையும்” மீண்டும் அசை போட்டு புதுப்பிக்க வல்ல வல்லமை” டீக்கு” உண்டு என்பதை அறிவேன்.
“டீக்கடை” என்றால் ‘ நாயர் ‘ கடை என்ற நிலைமை மாறி இன்று – ‘எல்லோரும் ஓர் குலம் ; எல்லோரும் ஒரு இனம்’ – என்று பாகுபாடு தெரியாமல் நம்மை இணைக்கும் ஒரு இனிய நாதமாய் எந்த பிரச்சாரமும் இன்றி மத நல் இலக்கணத்தை தெரு கோடி மக்களும் ஒன்று சேர்ந்து இசைக்கிறார்கள்.
அதனால்தான் என்னவோ “தலைவர்கள் டீ அருந்தும் புகைப்படம்” அதிக அளவில் Troll ஆகிறது.
“மீளும் ” நம் Tea Time.
ஒரு அசாதாரண கேள்வி.
நேர்காணல் செய்பவர் வேட்பாளருக்கு ஒரு கப் காபி ஆர்டர் செய்தார், வந்ததும், அது அவருக்கு முன்னால் வைக்கப்பட்டது, பின்னர் அவரிடம் கேட்கப்பட்டது:
_உங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறது?_
வேட்பாளர்: உடனடியாக TEA பதிலளித்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஏன் TEA என்றார் தெரியுமா ?
அது காபி என்று அவருக்கு தெரியும்?
கேள்வி: _”உங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறது”?_
(U எழுத்துக்கள்) பதில் TEA (T alphabet)
U என்ற எழுத்துக்கு முன் T என்ற எழுத்துக்கள் வருவதால்.
- படபடக்கிறது
- அகழ்நானூறு 17
- நினைவில் படபடத்த தட்டான் பூச்சி
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை விருதுகள்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- வெனிஸ் கருமூர்க்கன் – ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 10
- சுமைகள்
- சருகான கதை
- குவிகம் இணையவழி அளவளாவல் 05/03/2023
- வலி
- பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023
- சி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்
- பிரபஞ்சம் எத்தனை பெரியது ?
- விவசாயி
- புகை உயிருக்கு பகை
- வாங்க ” டீ” சாப்பிடலாம்.!!!
- தேடலின் முடிவு
- நாவல் தினை – அத்தியாயம் நான்கு CE 300 – CE 5000