நாவல் தினை – அத்தியாயம் நான்கு CE 300 – CE 5000

This entry is part 18 of 18 in the series 5 மார்ச் 2023

இரா முருகன் “அவை தாமே வாசிக்கத் தொடங்கி இருந்தன”. காடன் திரும்பத் திரும்பச் சொன்னான். குயிலியும் வானம்பாடியும் ஈரத் தலைமுடி நீர்த் திவலைகளைச் சிதறி நனைந்த மூங்கிலன்ன தோள்கள் பளிச்சிடச் சிரித்தார்கள்.   “காடரே, நாங்கள் தொழிற்நுட்பம் சிறந்த 4700 வருடங்கள் உங்களுக்கு  அப்புறம் உயிர்த்திருந்திருக்கலாம் தான். ஆனால் தானே வாசிக்கும் புல்லாங்குழல் போன்ற சின்னச்சின்ன ஆச்சரியத்தை உண்டு பண்ணும் வெட்டியான கருவிகளை உருவாக்க நேரம் வீணாகச் செலவழித்திருக்க மாட்டோம்”. அவர்கள் கொண்டு வந்த குழல்கள் வெளியின் […]

தேடலின் முடிவு

This entry is part 17 of 18 in the series 5 மார்ச் 2023

செந்தில் இயற்க்கையின் மடியிலமர்ந்து இடைவிடாமல் விகசிக்கிறான் மனிதன், “முழு முதற் காரணம் ஒன்று” உண்டென்றும் இல்லையென்றும்!  உண்டு என்பவன் உரைக்கிறான்  “அது இங்கே அங்கே இயற்க்கைக்கும் அப்பால்” என!   எதிலும் அது இல்லை, இல்லவே இல்லை  என்கிறான் அறுதியிட்டு மற்றவனோ! முடிவில்லாத “சத்தியமோ” இயற்க்கையின் இயக்கமாக, ஒன்றாக! பலவாக!  உளனாக! இலனாக!  ஒன்றும்  அற்றதாக! அனைத்துமாக! அல்லவை அனைத்துமாக! இயற்க்கைக்கு அப்பால் ஒரு கடவுள், அதற்க்கும் அப்பால் மற்றுமோர் கடவுளென முடிவற்ற  காரண  காரணி இயக்கம் தேடலின் மூலம் கண்டடைய இயலாத….சாத்தியமில்லாத ஒன்று! ஆதலின் கடவுளுக்குள் மனிதன், மனிதனுக்குள் கடவுள் என,மடியிலும் மனதிலும் வசிக்கும் மடியாத அந்த ஒன்று சாத்தியம்தான்!  

வாங்க ” டீ” சாப்பிடலாம்.!!!

This entry is part 16 of 18 in the series 5 மார்ச் 2023

ரா. செல்வராஜ் டீ ‘ சாப்பிடும் போது ஏற்படும் ஒரு சில சாகசங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். “டீ ” என்பது ஒரு ‘குடிநீர்’ என்பதைத் தாண்டி , அது ஒரு ஊக்க சத்தியாக, உந்து சக்தியாக, சிந்தனைப் பெருக்காக, சிறகடிக்கும் எண்ணங்களை சீர் செய்யும் ஒரு யாகமாக, சமூக உரையாடல்களின் ஒரு அங்கமாக, மேலும் சொல்லப் போனால் ஏழைகளின் பங்காளியாக , ஒரு விருந்துக்கு ஒப்பான ஒரு மனநிறைவை ஏற்படுத்தித் தரும் ஆன்ம பலமாக ….( […]

புகை உயிருக்கு பகை

This entry is part 15 of 18 in the series 5 மார்ச் 2023

முனைவர் என்.பத்ரி            இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், கனடா உட்பட உலகம் முழுவதும் இளைஞர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனைக்குரியது.புகைபிடிக்கும் ஒருவர், ஒருமுறை புகைபிடிக்கும்போது தன்னுடைய வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை இழக்கிறார். ’வாழ்நாள் முழுவதும் புகைபிடித்துக் கொண்டே இருப்பவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகள்  வரை  இழந்து விடுகிறார்’ என்கிறது உலக சுகாதார அமைப்பு. உலகம் முழுவதும் புகையிலையால் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் உயிரிழக்கிறார்’ என்கிறது அந்த அமைப்பின் […]

விவசாயி

This entry is part 14 of 18 in the series 5 மார்ச் 2023

கடல்புத்திரன் ரகுவும் , கோபியும் ஒரு வருசம் கழித்தே ஒன்றாய் திரும்ப தளத்திற்கு வந்து …இறங்கினார்கள் . ஐயா கறுத்துப் போயிருந்தார் . ஐயா பெரிதும் தனித்துப் போனார் . உடம்பிலே உயிர் இருக்கும் மட்டும் ஓடும் என்றாலும் கோபி இருக்கிற போதே துடிப்புடன் ஓடக் கூடியது . வீட்டிலே , அவன் இல்லாத சோகம் குமைந்து கொண்டிருந்தது . ரகுவின் அம்மாவும் , அவன் தங்கை விஜயாவும் அடிக்கடி வந்து அங்கேயும் உயிர் வளர்த்துக் கொண்டிருந்தார்கள் […]

பிரபஞ்சம் எத்தனை பெரியது ?

This entry is part 13 of 18 in the series 5 மார்ச் 2023

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் விரிவது யார் ஊதி ? பரிதி மண்டலக் கோள்களை கவர்ச்சி விசை ஈர்க்கிறது யார் ஓதி ? சுருள் சுருளாய் ஆக்டபஸ் கரங்களில் ஒட்டிக் கொண்ட ஒளிமயத் தீவுகள் நகர்பவை கால வெளியினிலே ! ஓயாத பாய்மரப் படகுகளின் உந்து சக்தியை அலைகள் எதிர்க்க மாட்டா ! விலக்கு விசை விரிவுப் பயணத்தில் ஒளிமய மந்தைகள் சுழலும் சோப்புக் குமிழி ! ++++++++++++++ “பிரபஞ்சத்தின் […]

சி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

This entry is part 12 of 18 in the series 5 மார்ச் 2023

சிறுவர் விருந்தை ஏற்பாடு செய்த வைகைச் செல்வி அறிவியல் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிவரும் சி. ஜெயபாரதன். கனடாவில் இருந்தபடி தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது முதல் விஞ்ஞான தமிழ்க் கட்டுரை, கணித மேதை “ராமானுஜனைப்” பற்றி கலைமகளில் 1960இல் வெளியானது. இவரது முதல் தமிழ் நூல் ‘ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” கலைமகள் வெளியீடு 1964இல் சென்னை பல்கலைக்கழக முதற்பரிசு பெற்றது. இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன. இப்போது 2022-2023இல் வல்லமை.காம், இவரது தமிழாக்க நாடகமான “ஏழ்மைக் காப்பணிச் […]

பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023

This entry is part 11 of 18 in the series 5 மார்ச் 2023

சுப்ரபாரதிமணியன் பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023 சென்னையில் 20-ம் தேதி ஆரம்பித்தது இந்த திரைப்பட துவக்க விழாவில் பேராசிரியர் மார்க்ஸ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் , உலக சினிமா பாஸ்கரன் போன்றோர் கலந்து கொண்டார்கள் ,பேரா மார்க்ஸ் விழாவின் துவக்க உரை நடத்தும்போது ” திரைப்படம் என்பது கற்பனையும் கற்பிதங்களும் கொண்டது. ஆனால் ஆவணப்படம் என்பது உண்மைகளை மட்டும் தருவது. நேரடியாக மக்கள் பங்கு பெற்ற அனுபவம் ஆவணப்படத்தில் இருக்கும். வரலாற்றில் மறைந்து போகும் […]

வலி

This entry is part 10 of 18 in the series 5 மார்ச் 2023

சாந்தி மாரியப்பன். ததும்பும் பேரன்புடன் வலி சொன்னதுநீஎனக்கு அடிமையாயிருஎன்னை ஆராதிதியானித்தாலோ கதி மோட்சம் கிட்டும்முடிந்தால்புண்பட்ட உடலோ மனதோஇன்னுங்கொஞ்சம் கீறிக்கொள்வலி கொண்ட மனதென்றால் எனக்குப்பிரியமதிகம்உனக்கும் பொழுது போகும்சிரங்குற்ற குரங்கின் கதையைகேள்வியுற்றிருப்பாய்தானே நீஆயுதங்களைப்போட்டு விட்டுசரணடைந்து விடுஎதிரிகள் இல்லாவிடத்தில்நாய்க்குட்டியாய்ச் சுருண்டிருப்பேன் நான் ******************ஒவ்வொரு முறையும்ஒரு குளிர் அலையைப்போல்வலி வந்து மூடும்போதுவிதிர்விதிர்த்துத் துடித்தடங்கும் உடம்பில்எங்கோதான் இருக்கிறதுஉடல்நடுக்க மையம்மெல்லெனக்கிளம்பி திடீர்க்கணத்தில்பின்னந்தலையில் சொடுக்கும்குரூர வலியிடம் இறைஞ்சுவதற்கு யாதுளதுகர்மாவோ கடனோஅனுபவித்துக்கழிப்பதொன்றே செய்யக்கூடியது இருப்பையுணர்த்தும் அவசியம் எனக்குஉண்மையில்உன்னை நானென்ன செய்ய வேண்டுமென்றுநீதான் தீர்மானிக்க வேண்டும்கங்கையாய்த் தாங்குவாயாஅல்லதுமுயலகனாய் அடக்கி வைப்பாயாசட்டெனச்சொல்காலம் […]

குவிகம் இணையவழி அளவளாவல் 05/03/2023

This entry is part 9 of 18 in the series 5 மார்ச் 2023

ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்குப் பிறகும் புதிய ஓலிச்சித்திரம் வெளியீடு மார்ச் 05,2023 மாலை 6.30 மணி தொடர்ந்துகுவிகம் ஒலிச்சித்திரம்நிகழ்வில் இணையZoom Meeting ID: 6191579931 – passcode kuvikam123அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38