This entry is part 7 of 9 in the series 4 ஜூன் 2023

பகலிலேயே வந்து மூடும்
இந்த இரவை என்னென்று சொல்வது?

கிளிகள் பழமுண்ணாமல்
பரிதவித்துத் தவிக்கின்றன.

தன் புண்னைக் கொத்தவரும்
காக்கையை விரட்ட முடியாமல்
காளை தலையை ஆட்டிப் பார்க்கிறது.

ஆந்தையின் மகிழ்ச்சியை
அந்தப் பொந்தினுள் கண்டேன்.

இரவின் இருளுக்குக்
கருமையென்றும்
நீலமென்றும்
வண்ணம் வடிக்கிறார்கள்.

பகலை விட்டுவிட்டு
இரவு மெதுவாக
வெளியே ஏறும்போது
நிலவு வந்து கொண்டிருந்தது.

இப்போதுதான்
அந்தக் கள்ள இரவு
உண்மையில் வந்து தீர வேண்டும்.

இந்த நிலவின் ஒளியில்
அப்போதுதான்
இரவை விரட்டி அடித்து
இன்பம் அள்ளலாம்.

Series Navigationபழுப்பு இலைநாவல் தினை அத்தியாயம் பதினேழு CE 5000