கோவிந்த் பகவான்
பொம்மைகளைக் கொண்டாடி மகிழும்
சிறுபிள்ளைத் தனமாய் இருக்கிறது
நாம் நம்மீது கொண்டது
அழுக்கடர்ந்து சட்டை கிழிந்தலையும்
பைத்தியத் தனமாய் இருக்கிறது
காலம் நம்மீது கொண்டது
நான் உன்னை அன்பு செய்கிறேன்
என பகிரியிலும் உரையாடல்களிலும்
எவ்வளவு அபத்தமாய் சொல்லியிருக்கிறேன்
நீயில்லாத வாழ்வை என்னால்
கற்பனை செய்தும் பார்க்க முடியாதென
நான் சொன்னதை இப்போது நீ நினைத்திருந்தால்
ஏளனமாய் சிரிப்பாய் தானே
அதனதன் போக்கில்
காலத்தை நாம் பழிவாங்கியது போல்
அதுவும் நம்மைப் பழி கொண்டது.
தீர்ந்தபின் வீசியெறிந்த
பனிக்கூழ் கோப்பையாய்
என்னை வீசி எறிந்தும்
உள்ளுக்குள் இன்னும் மிச்சமிருக்கிறது நிலா
உன் குளுமை.
– கோவிந்த் பகவான்
- முள்வேலிப் பூக்கள்
- ஆதியோகி கவிதைகள்
- நட்புக்காக
- தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டவர்
- பழித்தலும் பழித்தல் நிமித்தமும்
- மாணவர் சேர்க்கையும் பேராசிரியர்கள் நிலையும்
- நாவல் தினை அத்தியாயம் இருபது பொ.யு 1900
- உள்மன ஆழம்
- கற்றுத் தரல்
- காற்றுவெளி மின்னிதழ் – அமரர்.செம்பியன்செல்வன் ஞாபகார்த்த சிறப்பிதழ்
- பாடம்
- முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 1
- பல்லியை நம்பி
- வலி
- டைட்டானிக் கப்பலால் மீண்டும் உயிரிழப்பா?
- வாளி கசியும் வாழ்வு
- நான் ஒரு மலையாதல் அல்லது என்னில் ஒரு மலை உருவாதல்
- ரோஹிணி கனகராஜ் கவிதைகள்
- தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஒரு மகத்தான வாய்ப்பு – 2