விந்தையிலும் விந்தை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 4 in the series 11 பிப்ரவரி 2024

சசிகலா விஸ்வநாதன்

அள்ளி எடுக்கத் தான் ஆசை.
கிள்ளி விளையாடத் தான் ஆவல்.
துள்ளிக் துதிக்கையில் இன்பம்.
ஒளிந்து விளையாடுவதில் பேரின்பம்.
விசையோடு ஓடி விளையாடவும்;
இசைந்து பலதும் பேசிடவும்;
நேசத்துடன் கேலி பேசிடவும்;
பாசத்துடன் கட்டி அணைக்கவும்;
மடி மீது கண்மூடி உறங்கிடவும்;
மென்மையாய் தலை கோதிடவும்;
*மகனே* !
நீ என்றும் என் சேலை மடிப்பில் சிறு மதலையாய்;
என் மனதில் சிறு பிள்ளையாய்;
என் கனவில்  கள்ளம் கபடற்ற பாலகனாய்
இருக்க;
என் கண்ணெதிரில் மட்டும்;
முற்றிலும் வேறு ஒருவனாய்;
நினைவில் முதிர்ச்சியடைந்த
ஆண்மகனாய்
வளர்ந்த பெரியவனாய் நிற்கும் விந்தைதான்
என்னே! என்னே!


அள்ளி எடுக்கத் தான் ஆசை.
கிள்ளி விளையாடத் தான் ஆவல்.
துள்ளிக் துதிக்கையில் இன்பம்.
ஒளிந்து விளையாடுவதில் பேரின்பம்.
விசையோடு ஓடி விளையாடவும்;
இசைந்து பலதும் பேசிடவும்;
நேசத்துடன் கேலி பேசிடவும்;
பாசத்துடன் கட்டி அணைக்கவும்;
மடி மீது கண்மூடி உறங்கிடவும்;
மென்மையாய் தலை கோதிடவும்;
*மகனே* !
நீ என்றும் என் சேலை மடிப்பில் சிறு மதலையாய்;
என் மனதில் சிறு பிள்ளையாய்;
என் கனவில்  கள்ளம் கபடற்ற பாலகனாய்
இருக்க;
என் கண்ணெதிரில் மட்டும்;
முற்றிலும் வேறு ஒருவனாய்;
நினைவில் முதிர்ச்சியடைந்த
ஆண்மகனாய்
வளர்ந்த பெரியவனாய் நிற்கும் விந்தைதான்
என்னே! என்னே!

சசிகலா விஸ்வநாதன்

Series Navigationவாக்குமூலம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *