தள்ளாமை

author
0 minutes, 3 seconds Read
This entry is part 4 of 5 in the series 18 பிப்ரவரி 2024

ஆர் வத்ஸலா

தள்ளாடி தள்ளாடித் தான்

நடக்க முடிகிறது

இப்போதெல்லாம்

என் கால்களின் வழியே 

ஏற‌ முயற்சித்துக் கொண்டிருக்கிறது

தள்ளாமை

அதனை தோற்கடிக்கும் முயற்சியில்

தீவிரமாக நானும்

எதற்கும் இருக்கட்டும்  என்று

என்னவர் வாங்கி வைத்த

சக்கர நாற்காலி  

அமர்ந்திருக்கிறது

எங்கள் அறையின் 

ஒரு மூலையில் 

என்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு

வீட்டுக்குள்  நடக்கிறேன் 

அடி கணக்கு ஒப்பிக்கும் கருவியை சுமந்தபடி

தினமும் மும்முறை

மருத்துவர் சொன்னபடி

மைல் கணக்கில் நடந்தாலும்

இரண்டாயிரம் அடிகளே நடந்ததாக 

கூறுகிறது கருவி சட்டாம்பிள்ளைத்தனமாக

ஆனாலும் நடக்கிறேன்

நாள் தவறாமல் 

சொல்லி விட்டேன் அவரிடம் 

“தள்ர வரெக்கும்

தள்ரேன்.

அப்பறம் நீங்க தள்ளலாம்”

Series Navigationஎன்னுடைய உடல் நோய் மனதின் வீடாக இருக்கிறதுசோம அழகு எழுதிய இரண்டு நூல்கள் – காவ்யா வெளியீடு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *