நான் திரும்பிப் போவேன்

நான் திரும்பிப் போவேன்
உதய் பிரகாஷ்
This entry is part 8 of 8 in the series 21 ஏப்ரல் 2024


ஹிந்தியில் : உதய் பிரகாஷ்
தமிழில் : வசந்ததீபன்

ஆவணியில் மேகங்கள் திரும்பிப் போவதைப் போல
வெயில் திரும்பிப் போவதைப் போல ஆடியில்
பனித்துளி திரும்பிப் போகிறது அந்த மாதிரி விண்வெளியில் அமைதி
இருள் திரும்பிப் போகிறது ஏதாவது தலைமறைவு வாழ்க்கை ( அஞ்ஞாத வாசம் ) யில் தனது துக்கமடைந்த உடலை
போர்வையில் மறைத்து
கொஞ்சம் போல மகிழ்ச்சியும் சிட்டிகை நிறைய ஆறுதலின் பேராசையிலும் எல்லாவற்றை மறைத்து வந்திருந்தது
விபச்சாரி போல திரும்பிப் போகிறது திரும்ப தனது குகையில் பயம் கொண்டு
மரங்கள் திரும்பிப் போகின்றன விதைகளில் மீண்டும்
தனது வாடகைப் பாத்திரங்கள் , ஆயுதங்கள் , உபகரணங்கள் மற்றும் எலும்புக் கூடுகளோடு முழுவதும் பரிணமித்த நாகரீகங்கள்
எந்த மாதிரி திரும்பிப் போகின்றன பூமியின் கர்ப்பத்தில் ஒவ்வொரு முறை
வரலாறு எந்த மாதிரி இணைக்கப்பட்டிருக்கிறது ஏதாவது சமுதாயத்தின் புராணக்கதையில்
விஞ்ஞானம் ஏதாவது பேயோட்டுபவரின் மந்திரத்தில்
அனைத்து மருந்துகள் மனிதனின் கணக்கற்ற நோய்களால் தோற்று முடிவில் திரும்பிப் போகிறதைப் போல
ஏதாவது பழமையான தொடுதல் அல்லது ஏதாவது மந்திரத்தில்
நான் திரும்பிப் போவேன் அனைத்து மஹா காவியங்கள் , முழு சங்கீதங்கள் , எல்லா மொழிகள் மற்றும் எல்லாக் கவிதைகள் போல திரும்பிப் போகிறதைப் போல  ஒரு நாள் பிரம்மாண்டத்தில்
மீண்டும்
மரணம் போல போகிறது வாழ்க்கையின் மூட்டை ஒரு நாள் தலை மேல் தூக்கிய உதாசீனம் போல இரத்தம் திரும்பிப் போகிறது தெரியவில்லை எங்கே தனக்குப் பிறகு நம்புகளில் தவிர
உயிரற்ற _ குறைபாடற்ற தண்ணீர்
ஒரு மிக நீண்ட தண்டனையை அனுபவித்து விட்டுத் திரும்புகிறது ஏதோ குற்றமற்ற கைதி போல
ஏதோ மனிதன்
மருத்துவமனையில்
மிக நீண்ட மயக்கத்திற்குப் பிறகு
ஒரு முறை கண்களைத் திறந்து திரும்புகிறான்
தனது இருளில் அந்த மாதிரி .

🦀

ஹிந்தியில் : உதய் பிரகாஷ்
தமிழில் : வசந்ததீபன்

🦀

உதய் பிரகாஷ் 
___________________

பிறப்பு : 
___________
1 ஜனவரி 1952)
பிறந்த இடம் :
________________
அனுப்பூர் , மத்திய பிரதேசம்
கல்வி :
__________
எம்.ஏ.
இந்தி கவிஞர், அறிஞர்,
பத்திரிக்கையாளர், மொழிபெயர்ப்பாளர்  ,சிறுகதை எழுத்தாளர்.
நிர்வாகி, எடிட்டர், ஆராய்ச்சியாளர் மற்றும் தொலைக்காட்சி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் ஒரு ஃப்ரீலான்ஸராக முக்கிய நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் எழுதுகிறார் , மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் , திரைப்படங்களில் எழுதுகிறார். சிறுகதைகள் மற்றும் கவிதைத் தொகுப்புகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
மோகன் தாஸுடன் அவர் 2011 இல் சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றார்.[
எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் தேசிய எதிர்ப்புப் புயலைத் தூண்டிய எம்.எம். கல்புர்கியின் கொலைக்கு எதிராக செப்டம்பர் 3, 2015 அன்று சாகித்ய அகாடமி விருதைத் திருப்பியளித்த முதல் எழுத்தாளர் இவர்தான்.

🦀
Series Navigationகுலதெய்வம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *