This entry is part 9 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

ரவி அல்லது

சிரிப்பையும்

சிநேகமாக

சிந்தியப் பார்வையும்

சேகரமாக்கி

அந்தி வரை

வைத்திருந்தேன்.

வராது போன

உனக்கு 

சேருமிட வழிகள்

அநேகமிருக்கலாம்

எளிதாகிப் போன

பயண உபாயங்களில்.

வாரிச் சுருட்டி

அள்ளி எடுத்த

இரக்கங்கள்

யாவும் 

சில்லறைகளாக

கனத்தது

சலவை செய்யாத

அன்றாடத்தின்

நடையில்.

இனியொரு பொழுதும்

நிமிரக் கூடாது

ஏந்தும்

கைகளைத் தவிர எப்பொழுதுமென

சங்கல்பங்களாயிரம்

கொண்டாலும்

இஞ்சித் தின்னாத

மனம்தான்

கேட்பானே என்கிறது.

மகளையொத்த

சாயலில்

கடந்துபோன 

சிறுமிக்காக

ஏங்கி.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigationசொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்நடக்காததன் மெய்